ஐஸ்க்ரீம் சான்ட்விஜ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் ஆகாஷ் 2!

ஆகாஷ் 2 டேப்லெட்டுக்கு ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்கு தளம் அப்டேட் செய்யப்பட இருக்கிறது. அதற்கான அதிகாரப்பூர்வ செய்தியும் வந்திருக்கிறது. இந்த புதிய செய்தி ஆகாஷ் 2 டேப்லெட்டைப் பயன்படுத்துவோருக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும். இந்த அப்டேட் மூலம் ஆகாஷா 2 மீண்டும் புதுப் பெலிவு பெரும் என நம்பலாம்.
இந்த ஆகாஷ் 2 டேப்லெட் பல நல்ல சிறப்பான தொழில் நுட்பங்களைக் கொண்டிருக்கிறது. அதாவது 800 மெகா ஹெர்ட்ஸ் ப்ராசஸர், 7 இன்ச் தொடுதிரை, 256 எம்பி ரேம் மற்றும் 2ஜபி அளவு சேமிப்புகான இடம் போன்ற அட்டகாசமான வசிதகளுடன் இருக்கிறது ஆகாஷ் 2 டேப்லெட்.
இந்த ஆகாஷ் டேப்லெட் எச்டி வீடியோ கோ ப்ராசஸர், 32ஜிபி வரை மெமரியை விரிவுபடுத்தக்கூடிய வசதி, யுஎஸ்பி போர்ட், ஆடியோ ஜாக், பாதுகாப்பு உள்ள தொடு திரை உயர் தர வீடியோ மற்றும் எச்டி வீடியோ ப்ளேபேக், ஜிபி ஆர் எஸ் மற்றும் வைபை இணைப்பு போன்றவற்றை கொண்டுள்ளது.
இந்த ஆகாஷ் டேப்லெட்டில் சமூக நெட்வொர்க் சார்ந்த வேலைகளை மிக எளிதாகச் செய்ய முடியும். மேலும் கல்விக்கான சாப்ட்வேர் மற்றும் 150000 மற்ற அப்ளிகேசன்கள் போன்றவை இந்த ஆகாஷ் டேப்லெட்டுக்கு மேலும் வலு சேர்க்கின்றன.
தற்போது ரூ.3,000க்கு கிடைக்கும் இந்த ஆகாஷ் 2 டேப்லெட் ஆன்ட்ராய்டு அப்டேட்டிற்கு பிறகு இதன் விலையில் சிறிது மாற்றம் இருக்கலாம்.


Click it and Unblock the Notifications