Home
News

பான்-ஆதார் இணைக்க கடைசி தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது! இதுதான் கடைசி தேதி!

உங்களுடைய ஆதார் எண்ணையும், பான் எண்ணையும் இணைப்பதற்கு அளிக்கப்பட்ட காலக்கெடு தற்பொழுது மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக முன்பு வழங்கப்பட்டிருந்த ஏப்ரல் 30ம் தேதி என்ற காலக்கெடு தற்பொழுது மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்தகட்ட இறுதி நாள் இதுதான்

அடுத்தகட்ட இறுதி நாள் இதுதான்

உங்கள் பான் எண்ணையும் ஆதார் எண்ணையும் இணைப்பதற்கு வரும் ஜூன் 30ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இது வித்வத் சே விஸ்வாஸ் திட்டத்துக்கும் பொருந்தும். இந்தத் தேதிக்குள் இணைப்பதற்கு 10 சதவீதம் கூடுதல் கட்டணமும் கிடையாது எனக் கூறப்பட்டுள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல்

வருமான வரி கணக்கு தாக்கல்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காக, வருமான வரித்துறை சார்பில் பான் எண் வழங்கப்படுகிறது, அதுபோல் தனித்துவ அடையாள ஆணையம் சார்பில் ஆதார் எண் வழங்கப்படுகிறது. இந்நிலையில் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்குமாறு வருமான வரித்துறை அறிவுறுத்தியது,இந்த காலக்கெடு அடிக்கடி நீட்டிக்கப்பட்டு வந்தது.

 8-வது கால நீட்டிப்பு

8-வது கால நீட்டிப்பு

இதற்கிடையே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஆதார் திட்டம் அரசியல் சட்டரீதியாக செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் கட்டாயம் என்று உத்தரவிட்டது. மேலும் இந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை அறிவித்தது, இது 8-வது கால நீட்டிப்பு ஆகும்.

17 கோடியே 58லட்சம் பான் அட்டைகள் இணைக்கப்படவில்லை

17 கோடியே 58லட்சம் பான் அட்டைகள் இணைக்கப்படவில்லை

பின்பு கடந்த ஜனவரி 27-ந் தேதி நிலவரப்படி, 30கோடியே 75லட்சம் பான் எண்களுடன் ஆதார் இணைக்கப்பட்டதாகவும், இன்னும் 17கோடியே 58லட்சம் பான் எண்களுடன் ஆதார் இணைக்கப்படவில்லை என்றும் புள்ளி விவரம் வெளியிடப்பட்டது.

பான் எண் செயலிழந்து விடும்

பான் எண் செயலிழந்து விடும்

கடந்த மாதம் வெளிவந்த வருமான வரித்துறை அறிக்கையில் பான் எண்ணுடன் ஆதார் இணைக்க மார்ச் 31-ந் தேதி கடைசிநாள் என்றும், அப்படி இணைக்காவிட்டால், பான் எண் செயலிழந்து விடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் வருமான வரித்துறை நேற்று மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியிட்டது. தனது சமூக வலைத்தள பக்கத்தில், ஒரு வீடியோவுடன் கூடிய செயதியை வெளியிட்டது,அதல் தெரிவிக்கப்பட்டது.

இணைப்பது அவசியம்

இணைப்பது அவசியம்

மார்ச் 31-ம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் என்றும், பயோ மெட்ரிக் ஆதார் உறுதிப்படுத்தல் மூலமும், பான் சேவை மையங்களிலும் இப்பணியை செய்யலாம், நாளைய பலன்களுக்கு இதை இணைப்பது அவசியம், இந்த இறுதி வாய்ப்பை தவற வீடாதீர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

Income Tax e-filing வலைத்தளம்

Income Tax e-filing வலைத்தளம்

ஒருவேளை நீங்கள் பான் மற்றும் ஆதார் ஆகியவற்றை இணைக்கவில்லை என்றால், அவைகளை இணைப்பதற்கு இரண்டு அருமையான வழிகள் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று, அதார்-பான் இணைப்பை வருமான வரித்துறையின் Income Tax e-filing வலைத்தளம் மூலம் இணைக்கலாம்.

எஸ்எம்எஸ் மூலம் இணைப்பது எப்படி?

எஸ்எம்எஸ் மூலம் இணைப்பது எப்படி?

இரண்டாவது வழி 567678 (அ) 56161 என்கிற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்புவதின் மூலமாகவும் இணைக்கலாம். இதை எப்படி செய்வது என்று விரிவாக பார்ப்போம் வாங்க...வருமான வரித்துறையின் வலைதளம் மூலம் பான் எண் மற்றும் ஆதாரை இணைப்பது எப்படி? என்று பார்ப்போம்

ஆன்லைன் மூலம் இணைப்பது எப்படி?

ஆன்லைன் மூலம் இணைப்பது எப்படி?

வழிமுறை-1: முதலில் ஆன்லைன் வழியாக வருமான வரித்துரையில் அதிகாரபூர்வமான இ-ஃபில்லிங் வலைத்தளத்திற்குள் (https://www.incometaxindiaefiling.gov.in)செல்ல வேணடும்.
வழிமுறை-2 அடுத்து வலைதளத்தின் இடது பக்கதில் உள்ள Link Aadhaar எனும் விருப்பத்தை தேர்வு செய்யவும்.
வழிமுறை-3 அதன்பின்பு உங்களிக் பான் மற்றும் ஆதார் விவரங்களை கேட்குமொரு பக்கத்திற்குள் நுழைவீர்கள். அங்கே பான், ஆதார் எண் மற்றும் ஆதாரில் குறிப்பிட்டுள்ளதை போன்ற பெயர் போன்ற விவரங்களை பதிவிட வேண்டும்.

Link Aadhaar கிளிக் செய்ய மறக்காதீர்கள்

Link Aadhaar கிளிக் செய்ய மறக்காதீர்கள்

வழிமுறை-4 பின்னர் I have only year of birth in Aadhaar card என்ற விருப்பமும், அதன் அருகில் ஒரு டிக் பாக்ஸ் ஒன்றும் இருக்கும். இது உங்களின் ஆதார் அட்டையில் நீங்கள் பிறந்த ஆண்டு மட்டுமே குறிப்பிடப்பட்டு இருப்பின் அந்த டிக் பாக்ஸை கிளிக் செய்தல் வேண்டும்.
வழிமுறை-5 அதன்பின்பு வலைதள பக்கத்தில் இருக்கும் Captcha code-ஐ நிரப்பவும், பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒடிபி ஒன்றை அனுப்பச் சொல்லியும் நீங்கள் கோரிக்கை விடுக்கலாம். கடைசியாக எல்லாம் முடிந்த பின்னர் Link Aadhaar என்பதை கிளிக் செய்தல் வேண்டும்.

எஸ்எம்எஸ் மூலம் இணைக்க வழிமுறை

எஸ்எம்எஸ் மூலம் இணைக்க வழிமுறை

எஸ்எம்எஸ் மூலம் பான் எண் மற்றும் ஆதாரை இணைக்க வழிமுறைகளைப் பார்ப்போம். வழிமுறை-1 முதலில் ஆதார் உடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 567678 அல்லது 56161 க்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் வழியாக கூட நீங்கள் உங்களின் பான்-ஆதார் இணைப்பை நிகழ்த்தலாம்.

உடனே இனைத்துக்கொள்ளுங்கள்

உடனே இனைத்துக்கொள்ளுங்கள்

வழிமுறை-2 அவ்வாறு செய்யவேண்டும் என்றால், நீங்கள் UIDPAN என்று டைப் செய்து சிறுதி இடைவெளி விட்டு 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்து இடைவெளி விட்டு பின்னர் 10 இலக்க பான் எண்ணை டைப் செய்து மேலே குறிப்பிட்டுள்ள எண்ணில் எதாவது ஒன்றிக்கு எஸ்எம்எஸ் செய்தல்வேண்டும். இதன் மூலம் பாண் மற்றும் ஆதாரை இணைக்க முடியும்.

Best Mobiles in India

English summary
Aadhar - PAN Card Last Date To Link Your Cards Has Been Increased To June : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X