அஞ்சலகத்தில் இனி இலவச ஆதார் அடையாள அட்டை பதிவு.!

நாம் ஆதார் அட்டையை பதிவு செய்வதற்காக பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வந்தோம். தற்போது, இதற்கு தீர்வு காணும் விதமாக அருகே இருக்கும் அஞ்சலத்திலும் இனி இலவசமாக ஆதார் அடையாள அட்டையை பதிவு செய்து கொள்

|

நாம் ஆதார் அட்டையை பதிவு செய்வதற்காக பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வந்தோம்.

அஞ்சலகத்தில் இனி இலவச ஆதார் அடையாள அட்டை பதிவு.!

தற்போது, இதற்கு தீர்வு காணும் விதமாக அருகே இருக்கும் அஞ்சலத்திலும் இனி இலவசமாக ஆதார் அடையாள அட்டையை பதிவு செய்து கொள்ளலாம்.

ஆதார் அட்டை பதிவு:

ஆதார் அட்டை பதிவு:

ஆதார் அடையாள அட்டை என்பது தற்போது இந்தியாவில் வாழும் ஒவ்வொருவருக்கும் முக்கியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. இந்த அடையாள அட்டை எடுப்பதற்காக முன்பு மாநில அரசு தாசில்தார் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மட்டும் இருந்தது. காலப்போக்கில் அங்கே பதிவு செய்வதற்கு ஏகப்பட்ட கூட்டம் திரண்டு விடுவதால் டோக்கன் சிஸ்டத்திற்கு மாற்றினார்கள்.

பதிவு செய்யும் மையம் முன்பு:

பதிவு செய்யும் மையம் முன்பு:

இதன்பிறகு தமிழக அரசு மத்திய அரசின் உதவியுடன் மாநில அரசு தமிழக அரசு கேபிள் நிறுவனத்துடன் இணைந்த சேவை மையங்களில் இந்த ஆதார் அட்டையாள அட்டை பதிவு செய்வதை கொண்டுவருவதற்காக தனியார் முகவர்களை தேர்வு செய்தனர். அதற்கு முன் பணமாக 10,000 ரூபாய் வசூல் செய்தனர். பிறகு ஒரு வருட இடைவெளிக்கு பிறகு அந்த முன் வைப்பு தொகை எல்லாம் திரும்ப கொடுத்து விட்டனர்.

திருத்தம் செய்ய ரூ.50 கட்டணம்:

திருத்தம் செய்ய ரூ.50 கட்டணம்:

திருச்சி மாவட்டத்தில் 33 அஞ்சல் நிலையங்களில் கட்டணமின்றி ஆதார் அடையாள அட்டை பதிவு செய்யப்படும். ஆனால் ஆதார் அட்டையில் திருத்தம் செலுத்த ரூபாய் 50 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த தேவையை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். என திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுக்க விரிவு:

தமிழகம் முழுக்க விரிவு:

இதே போல் தமிழகம் முழுவதும் அஞ்சல் நிலையங்களில் இதற்கான அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது அது விரிவடைந்து ஒவ்வொரு அஞ்சல் அலுவலகத்திலும் எடுக்கலாம் என்கிற அறிவிப்பை வெளியிட்டுயிருக்கிறது.

Best Mobiles in India

English summary
aadhar id card post office : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X