இனி ஆதார் எண்ணுக்கு பதிலாக விர்ச்சுவல் ஐ.டியை கொடுங்கள் மக்களே.!

ஆதார் ஆணையம், மெய்நிகர் அடையாள எண் முறையை அங்கீகரிக்கப்பட்ட பயனாளர் ஏஜென்சியோடு (Authentication User Agencies (AUAs)) இணைந்து செயல்படுத்துகிறது.

|

ஆதார் அடையாளத்தின் மெய்நிகர் எண்ணை (Virtual ID) உறுதிப்படுத்துவதற்கான செயலிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆதார் எண்ணைப் பெற்றுள்ள பயனாளர்கள் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாத்திட , புதிய ஆதார் மெய்நிகர் அடையாள எண் உதவும் (Aadhaar virtual ID). இந்த முறையின் மூலம் நம்முடைய 12 இலக்க ஆதார் அடையாள எண்ணுக்குப் பதிலாக புதிய வெர்ச்சுவவல் அடையாள எண்ணை உருவாக்கிக் கொள்ளலாம்.

இனி ஆதார் எண்ணுக்கு பதிலாக விர்ச்சுவல் ஐ.டியை கொடுங்கள் மக்களே.!

அனைத்து வங்கிகளும் வருகின்ற ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் ஆதார் வெர்ச்சுவல் அடையாள எண்ணைச் சோதித்து அறிவதற்கான இயந்திர வசதிகளை பொருத்தியிருக்க வேண்டும் என ஆதார் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. ஆதார் ஆணையத்தின் இணையதளம் மூலமாக ஆதார் மெய்நிகர் அடையாள எண்ணைப் பெற்றுக் கொள்ளலாம். இந்தப் புதிய எண்ணை ஆதார் எண் தேவைப்படுகின்ற அலுவலகங்களுக்குக் கொடுக்கலாம். இந்த வெர்ச்சுவல் ஆதார் எண்ணை எத்தனை முறை வேண்டுமானாலும் புதியதாக உருவாக்கிக் கொள்ளலாம்.

ஆதார் ஆணையம்

ஆதார் ஆணையம்

ஆதார் ஆணையம், மெய்நிகர் அடையாள எண் முறையை அங்கீகரிக்கப்பட்ட பயனாளர் ஏஜென்சியோடு (Authentication User Agencies (AUAs)) இணைந்து செயல்படுத்துகிறது. ஆதார் ஆணையம் அங்கீகாரமளிக்கும் பயனர் ஏஜென்சிகளை (AUAs) இரு பிரிவாகப் பிரித்துள்ளது. ஒன்று உள்நாடு சார்ந்தது இன்னொன்று உலகம் தழுவியது(global or local). வங்கிகள் அனைத்தும் உலகம் தழுவிய ஏஜென்சிகளாகவும், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உள்நாட்டு ஏஜென்சிகளாகவும் வகைப்படுத்தப்பட்டு உள்ளன. இவைகள் ஆதார் அடையாளத்தை அங்கீகரிப்பதற்கும் வாடிக்கையாளர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கும் (KYC) உரிமை பெற்றுள்ளன.

மெய்நிகர் அடையாள எண்

மெய்நிகர் அடையாள எண்

மிக விரைவாக நிறுவனங்களைப் புதிய முறைக்கு (VID) மாறத் தூண்டுவதற்காகத் தான் இவ்வாறு கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன. தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மற்றும் மின்-ஒப்ப நிறுவனங்கள் தவிர்த்த வங்கி உட்பட பிற நிறுவனங்கள் மெய்நிகர் அடையாள எண் (VID system) அங்கீகார முறைக்குத் தங்களை மாற்றிக் கொள்ள ஆகஸ்ட் 31 ஆம் தேதிவரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 31

ஆகஸ்ட் 31

இந்நிறுவனங்கள், ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் முழுமையாகப் புதிய முறைக்கு மாறவில்லை என்றால், நிதிசார் கட்டண விதிப்பு, மற்றும் அடையாள அங்கீகாரத்துக்கான உரிமம் ரத்து போன்ற நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என அடையாள எண் ஆணையம் (UIDAI) எச்சரித்துள்ளது. ஆதார் அடையாள எண்ணை அங்கீகரிக்கும் ஏஜென்சிகள் வெர்ச்கசுவல் அடையாள எண்ணை (VID) அங்கீகரிக்கும் முறைக்கு 2018 ஆம் ஆண்டு ஜீன் 1 முதல் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என அடையாள எண் ஆணையம் ஏற்கனவே கேட்டுக் கொண்டிருந்தது. வங்கிகள், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போன்றவை கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஒரு மாதம் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஏஜென்சி

ஏஜென்சி

"பல ஏஜென்சிகள் இம்முறைக்கு மாறிவிட்டடன. இன்னும் பல நிறுவனங்கள் புதிய முறைக்கான சோதனைகளில் ஈடுபட்டுள்ளன. மிக விரைவாகப் புதிய சூழலுக்கு மாற வேண்டும் என இந்நிறுவனங்களை நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம்." என்கிறார், அடையாள எண் ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரி அஜய் பூசன் பாண்டே.

"ஏறக்குறைய 121 கோடி மக்களுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. அடையாள எண் அங்கீகாரத்துக்கான சூழல் ஒவ்வொரு ஏஜென்சியைப் பொறுத்து மாறுபடுகிறது. முறையான பணியாளர்களைக் கொண்டு இப்பணியை மேற்கொள்ளுமாறு ஏஜென்சிகளைக் கொண்டுள்ளோம். தனிநபர் தகவல் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கிலான வெர்ச்குசுவல் அடையாள எண் முறை (VID) மிக விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டியது என்பதைப் புரிந்து கொண்டு அதற்கேற்பச் செயல்படுகிறோம்" என்கிறார் இவர்.

பாதுகாப்பு மற்றும் இடர்பாடுகளை எதிர் கொள்ளும் திறன்

பாதுகாப்பு மற்றும் இடர்பாடுகளை எதிர் கொள்ளும் திறன்

"தற்போது உள்ள உள்நாட்டு அங்கீகார ஏஜென்சிகள் மற்றும் உலகளாவிய அங்கீகார ஏஜென்சிகள் ஆகிய பிரிவுகள் குறித்து மறு ஆய்வு செய்யப்படும். பாதுகாப்பு மற்றும் இடர்பாடுகளை எதிர் கொள்ளும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இவ்வகைப்பாடுகள் மாற்றி அமைக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன." எனவும் அடையாள எண் ஆணையம் தெரிவித்துள்ளது.

தனித்த அடையாளங்கள்

தனித்த அடையாளங்கள்

ஆதார் அடிப்படையிலான தகவல்களை உறுதிப்படுத்த வேறு வகையான வழிமுறைகளை அறிமுகப்படுத்துவது குறித்தும் திட்டமிட்டுள்ளதாக அஜய் பூசன் பாண்டே கூறுகிறார். ஆதார் எண் மற்றும் மெய்நிகர் அடையாள எண் ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையிலான அலுவலக முகப்பு நிலைச் செயலிகளையும், தனித்த அடையாளங்கள் (UID token) வாடிக்கையாளர்களை அறிந்து கொள்வதற்கான தகவல்கள் (KYC data) ஆகியவற்றை உடனடியாக ஏற்றுக் கொள்வதற்கான பின் நிலைச் செயலிகளையும் செயல்படுத்துவதற்கு ஏற்பத் தேவையான மாற்றங்களைச் செய்யுமாறு அனைத்து ஏஜென்சிகளையும் அறிவுறுத்தி உள்ளதாகவும் இவர் கூறுகிறார்.

மெய்நிகர் அடையாள எண்

மெய்நிகர் அடையாள எண்

பயனாளர் ஏஜென்சிகள் அனைத்தும் மெய்நிகர் அடையாள எண் வசதியைச் செயல்படுத்தும் நிலைக்கு வந்தவுடன், வாடிக்கையாளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை மறைக்காமல், 16 இலக்க மெய்நிகர் எண்ணைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவர். ஒரு பயனாளர் எத்தனை முறை வேண்டுமானாலும் மெய்நிகர் அடையாள எண்ணை (VIDs) உருவாக்கிக் கொள்ளலாம். புதியதாக ஒரு மெய்நிகர் அடையாள எண் உருவாக்கப்படும் பொழுது, ஏற்கனவே அந்த ஆதார் எண்ணுக்கு உருவாக்கப்பட்டிருந்த மெய்நிகர் அடையாள எண் தானாகவே இரத்தாகிவிடும். இந்தப் புதிய முறை ஆதார் எண்ணுக்கு உரியவர்களின் தனிப்பட்ட தகவல் சார்ந்த அம்சங்களின் ரகசியங்களைப் பாதுகாக்கும். மேலும், ஆதார் எண்ணைச் சேகரிக்கும் ஏஜென்சிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும் வழி வகுக்கும்.

Best Mobiles in India

English summary
Aadhaar Virtual ID Verification Tool Now Operational, Must Be Deployed by Banks by August 31UIDAI: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X