குழந்தைகளுக்கான Aadhaar அப்டேட்.. பள்ளிகளில் முகாம்கள்.. UIDAI முக்கிய அறிவிப்பு.. இதோ முழு விவரம்..
தற்போது ஆதார் (Aadhaar) தொடர்பாக மிக முக்கியமான அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது இந்தியா முழுவதும் 5 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கான ஆதார் கார்டில் பயோமெட்ரிக் அப்டேட் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி பள்ளிகளில் முகாம்களை அமைத்து குழந்தைகளுக்கு நிலுவையில் உள்ள பயோமெட்ரிக் அப்டேட்களை முடிக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையுடன் இணைந்து, பள்ளிக் குழந்தைகளின் ஆதார் குறித்த நிலையை UDISE+ செயலியில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இணைத்துள்ளது. குறிப்பாக இதன் மூலம் பல கோடி மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதார் கார்டில் மாணவர்கள் பயோமெட்ரிக் அப்டேட் செய்யாவிட்டால் அரசுத் திட்டங்களின் பலன்களைப் பெறுவதில் சிக்கல் ஏறப்படும் என்று கூறப்படுகிறது.NEET, JEE, CUET போன்ற போட்டித் தேர்வுகளிலும், பல்கலைக்கழகத் தேர்வுகளிலும் பதிவு செய்ய முடியாது என்று தகவல் வெளியாகி உள்ளது. எனவே ஆதால் கார்டில் பயோமெட்ரிக் அப்டேட்டை சரியான நேரத்தில் செய்து முடிப்பது மிகவும் அவசியம் ஆகும்.
மேலும் இது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், இந்த முயற்சியை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பின்பு பள்ளிகள் மூலம் மூகாம்கள் அமைத்து நிலுவையில் உள்ள பயோமெட்ரிக் அப்டேட்களை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக இதன் மூலம் எந்த மாணவர்களுக்கு பயோமெட்ரிக் அப்டேட் செய்யப்படவில்லை என்பதைப் பள்ளிகள் தெரிந்துகொள்ள ஒரு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் தொழில்நுட்பக் குழுக்கள் இணைந்து UDISE+ செயலி மூலம் ஒரு தீர்வை உருவாக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் கீழ் உள்ள UDISE+ கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு, பள்ளி கல்வி தொடர்பான பல்வேறு புள்ளிவிவரங்களைச் சேகரித்து வருகிறது. எனவே இந்திய தனித்துவ அடையாளம் மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் இந்த கூட்டு முயற்சி குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 17 கோடி ஆதார் எண்களில் பயோமெட்ரிக் அப்டேட் நிலுவையில் உள்ளது என்று கூறப்படுகிறது. எனவே மாணவர்களும் பெற்றோர்களும் கடைசி நேரத்தில் ஆதார் அப்டேட் செய்ய வருவதால் அதிக சிக்கல் ஏற்படுகிறது. எனவே சரியான நேரத்தில் பயோமெட்ரிக் அப்டேட் செய்வதன் மூலம் இதை தவிர்க்கலாம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. பின்பு ஆதார் கார்டில் பயோமெட்ரிக் அப்டேட் செய்வதன் மூலம் ஆதார் கார்டில் உள்ள குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்கள் துல்லியமாக இருக்கும்.
எனவே இனி பள்ளியில் நடைபெற உள்ள முகாம்களில் உங்கள் குழந்தையின் பயோமெட்ரிக் அப்டேட்டை செய்து முடிக்கலாம். இதன் மூலம் உங்கள் குழந்தை அரசு திட்டங்களின் பலன்களைப் பெற முடியும். மேலும், போட்டித் தேர்வுகள் மற்றும் பல்கலைக்கழகத் தேர்வுகளில் எளிதாகப் பதிவு செய்யவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








