Aadhaar கார்டு இருக்கா.. அப்போ ரூ.50 கேப்பாங்க.. அதுக்கு மேல ரூ.1 கொடுக்காதீங்க.. மீறி கேட்டால்?
ஒருகாலத்தில் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்ற ஆவணங்கள் தான், மிகவும் முக்கியமான ஆவணங்களாக இருந்தன. ஆனால் அது எல்லாமே ஆதார் அட்டை (Aadhaar Card) வரும் வரை மட்டுமே. ஆதார் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் அதுவொரு ஆல்-இன்-ஒன் டாக்குமெண்ட் (All-in-one Document) ஆக மாறிவிட்டது!
இப்படியாக, ஆதார் அட்டைதான் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு ஆவணமாக மாறிவிட்ட கட்டத்தில் நாமெல்லாம் இருக்கிறோம். ஏனென்றால் இந்தியாவில் உள்ள 90% மக்கள் ஆதார் அட்டை வைத்துள்ளனர். கூடவே ஒரு முக்கிய சிக்கலையும் வைஎதிர்கொள்கின்றனர். பெரும்பாலான மக்கள் தங்கள் ஆதார் அட்டையில், பதிவு செய்யப்பட்ட தவறான தகவல்களால் அடிக்கடி பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

இதற்காக, ஆதார் அட்டைகளை வழங்கும் யுஐடிஏஐ (UIDAI - இந்திய தனித்துவ அடையாள ஆணையம்) ஆனது ஆதார் அட்டையில் மாற்றங்களை செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. அருகில் இருக்கும் ஆதார் மையத்திற்கு சென்று, எதை மாற்ற வேண்டும் என்க்ரியா கோரிக்கையை விடுப்பதன் மூலம், உங்கள் ஆதார் அட்டையை அப்டேட் செய்யலாம்
இதற்கு அப்பாயின்ட்மென்ட் எடுக்க வேண்டும். அதன் பிறகே, நீங்கள் ஆதார் மையத்திற்கு சென்று உங்கள் ஆதார் அட்டையை புதுப்பிக்க முடியும். ஆனால் இது இலவச சேவை கிடையாது. ஆதார் மையத்தில் உங்கள் ஆதார் அட்டையை புதுப்பிக்க ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். அதன் பிறகே, பயோமெட்ரிக் தகவல் உட்பட எந்தவொரு ஆதார் அட்டை தகவலையும் புதுப்பிக்க முடியும்
இருப்பினும், சில நேரங்களில் ஆதார் மையத்தில் உள்ள ஆபரேட்டர்கள் ஆதார் அட்டைகளை புதுப்பிப்பதற்கு மக்களிடம் அதிக பணம் கேட்பதாக புகார் எழுகிறது. இது உங்களுக்கு நடந்தால், ரூ.50 க்கு ரூ.1 கூட அதிகமா கொடுக்க வேண்டாம். மாறாக அதிக பணம் கேட்கிறார்கள் என்பதை பற்றி நீங்கள் புகார் செய்யலாம்.
ஆதார் அப்டேட் செய்ய ரூ.50 க்கு மேல் அதிக பணம் கேட்கிறார்கள் என்பதை பற்றி புகார் செய்வது எப்படி ஆதார் ஆபரேட்டர் உங்களிடம் அதிக பணம் கேட்டால், 1947 என்கிற இலவச எண்ணை அழைப்பதன் மூலமோ அல்லது ஹெல்ப்@யுஐடிஏஐ ([email protected]) என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, உங்கள் புகாரை இமெயில் ஆக அனுப்புவதன் மூலமோ நீங்கள் இதுகுறித்த புகாரை செய்யலாம்.
சமீபத்தில் ஆதார் தொடர்பான முக்கிய தீர்ப்பு ஒன்றையும் உச்சநீதி மன்றம் வழங்கி இருந்தது. சிறார் நீதி சட்டம் (அதாவது குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம்), 2015 இன் பிரிவு 94 இன் கீழ், பள்ளி விடுப்பு சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள பிறந்த தேதியில் இருந்தே இறந்தவரின் வயதை தீர்மானிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் கூறியுள்ளது.
சாலை விபத்தில் உயிரிழந்தவரின் வயதை நிர்ணயம் செய்ய ஆதார் அட்டையை ஏற்றுக்கொண்ட பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்த நபரின் உறவினர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது. ரோஹ்தக்கில் உள்ள எம்ஏசிடி (MACT - Motor Accident Claims Tribunal) ஆனது இழப்பீட்டுத் தொகையை நிர்ணயிக்கும் போது, இறந்தவரின் வயதை அவரது ஆதார் அட்டையை வைத்து தவறாக குறிப்பிட்டுள்ளது.
இதன் விளைவாக இறந்தவருக்கான இழப்பீட்டு தொகையானது ரூ.19.35 லட்சத்தில் இருந்து ரூ.9.22 லட்சமாக குறைந்துள்ளது. ஆனால் அவரது பள்ளி விடுப்புச் சான்றிதழின்படி கணக்கிடப்பட்டால், இறப்பின் போது அவருடைய வயது 45 ஆக இருந்தது. ஆதார் அட்டையின் அடிப்படையில் இறந்தவரின் வயதை நிர்ணயிப்பதில் தவறு செய்ததாக குடும்பத்தினர் உயர் நீதிமன்றத்தில் வாதிட்டனர். உயர் நீதிமன்றமும் இறந்தவரின் ஆதார் அட்டையை நம்பி அவரது வயதை 47 ஆக கணக்கிட்டுள்ளது. அது ரத்து செய்யப்பட்டு இறந்தவருக்கு சரியான இழப்பீட்டு தொகை உறுதி செய்யபட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








