Home
News

Aadhaar கார்டு விவரங்களை அப்டேட் செய்ய கடைசி தேதி.. போட்டோ மாற்றுவது எப்படி.. இதோ முழு விவரம்..

ஆதாரில் அட்டையில் உள்ள விவரங்களை இலவசமாக அப்டேட் செய்வதற்கான கடைசி தேதி வரும் டிசம்பர் 14-ம் தேதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு ஆதாரில் உள்ள விவரங்களை அப்டேட் செய்வதற்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் 10 வருடங்களுக்கு மேல் அப்டேட் செய்யப்படாமல் இருக்கும் ஆதார் விவரங்களை தற்போது அப்டேட் செய்து வைக்குமாறு UIDAI பரிந்துரை செய்துள்ளது.

அதுவும் ஆதார் அட்டையில் உள்ள தங்களுடைய பெயர், முகவரி அல்லது பிறந்த தேதி போன்ற விவரங்களை தற்போது ஆன்லைனில் இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம். ஆனால் ஆதாரிலுள்ள கருவிழி, கைரேகைகள், மொபைல் நம்பர் அல்லது புகைப்படம் போன்றவற்றை ஆஃப்லைன் முறை மூலமாக மட்டுமே உங்களால் அப்டேட் செய்ய முடியும்.

Aadhaar கார்டு விவரங்களை அப்டேட் செய்ய கடைசி தேதி..

குறிப்பாக டிசம்பர் 14-ஆம் தேதிக்குள் பெயர், முகவரி மற்றும் பிற தகவல்களைச் செலவின்றி அப்டேட் செய்ய விரும்பினால் myaadhaar.uidai.gov.in என்ற UIDAI இணையதளத்துக்குச் செல்லுங்கள். இந்த இணைய தளத்தில் தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்களைக் கொடுத்து இலவசமாக ஆதார் அப்டேட் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சரி இப்போது ஆதார் அட்டைப் புகைப்படத்தைப் புதுப்பிக்க விரும்பினால் அதை எப்படிச் செய்யலாம் என்று இப்போது தெரிந்துகொள்ளுங்கள். இதற்கான வழிமுறைகளைச் சற்று விரிவாக இங்கே பார்க்கலாம்.

வழிமுறை-1:முதலில் https://uidai.gov.in/en/ என்ற இந்த யூஐடிஏஐ (UIDAI) அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். இந்த இணையதளத்தில் முகப்பு பக்கத்தில் ஆதார் என்ரோல்மென்ட் படிவத்தை (Aadhaar Enrolment Form) பதிவிறக்கம் செய்து பிரிண்ட்-அவுட் எடுத்துக் கொள்ளுங்கள். அதேபோல் இந்த படிவத்தை அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தில் இருந்தும் பெறலாம்.

வழிமுறை-2: அடுத்து நீங்கள் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்த அந்த படிவத்தைப் பூர்த்தி செய்து கொள்ளவும். அதன்பின்பு அந்த படிவத்தை உங்களுக்கு அருகாமையில் இருக்கும் ஆதார் சேவை மையத்தில் சென்று, ஆதார் சேவை மைய அதிகாரியிடம் அளிக்கவும்.

வழிமுறை-3:அதன்பின்பு ஆதார் சேவை மையத்தில் உங்களது பயோமெட்ரிக் விவரங்களை அளிக்க வேண்டும். அனைத்தையும் சரியாக அளித்த பின்பு ஆதார் சேவை மைய அதிகாரி உங்களை அங்கேயே புகைப்படம் எடுத்துக் கொள்வார்.அவ்வளவுதான் உங்களது ஆதார் அட்டையில் புகைப்படத்தை மாற்றுவதற்கான செயல்முறை முடிந்துவிட்டது.

வழிமுறை-4: அதேபோல் அந்த ஆதார் சேவை மையத்தில் உங்களுக்கு ஒரு யூஆர்என் (URN) எண் அதற்கான ஒப்புதல் படிவத்துடன் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதைக் கொண்டு உங்களுக்குச் சேவையின் நிலையை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

Aadhaar கார்டு விவரங்களை அப்டேட் செய்ய கடைசி தேதி..

ஆதார் அட்டையில் புகைப்படத்தை அப்டேட் செய்வதற்கு எந்தவித டாக்குமெண்ட் கொடுக்க தேவையில்லை. குறிப்பாக அங்கு பணியில் இருக்கும் ஆதார் சேவை மைய அதிகாரி நேரடியாக வெப் கேமராவை கொண்டு உங்களைப் புகைப்படம் எடுத்துக் கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்திய மக்களின் முக்கியமான ஆவணங்களில் ஆதார் அட்டையும் ஒன்று. வங்கி, போஸ்ட் ஆபீஸ், பத்திரப்பதிவு, மருத்துவமனை என அனைத்து இடங்களிலும் ஆதார் இந்த அட்டை தேவைப்படுகிறது. அதேபோல் கேஒய்சி சரிபார்ப்பிற்குத் தேவைப்படும் முதன்மை ஆவணங்களில் ஆதார் கார்டு தான் முன்னிலையில் இருக்கிறது. எனவே அனைத்து விஷயங்களுக்கும் தேவைப்படும் இந்த ஆதார் கார்டை அப்டேட் செய்து வைத்துக்கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.

photo credit: thestatesman

More from GizBot

Best Mobiles in India

English summary
Aadhaar Update Alert: Here are the steps to easily update your Aadhaar card photo
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X