ஆதார் கார்டில் உங்கள் மொபைல் எண்ணை மாற்ற விருப்பமா? இதோ எளிய வழிமுறைகள்..
ஆதார் அட்டை (Aadhaar card) இந்தியாவில் உள்ள மக்களுக்கு மிகவும் முக்கியமான அடையாள ஆவணமாக மாறியுள்ளது. அதுவும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் சேவைகளைப் பெறுவது முதல், குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது, வங்கி தொடர்பான சேவை, லோன் எடுப்பது, புது சிம் கார்டு வாங்குவது என பல்வேறு தேவைகளுக்கு ஆதார் பயன்படுகிறது.
அதேபோல் ஆதார் கார்டில் இருக்கும் பெயர், முகவரி, மொபைல் நம்பர் போன்ற அனைத்து விவரங்களும் சரியானதாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் நீங்கள் உடனே அப்டேட் செய்து அதை மாற்ற வேண்டும். அதாவது ஆதார் கார்டில் அனைத்து தகவல்களும் சரியாக இருந்தால் தான் நமக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்கும்.

எனவே ஆதார் கார்டில் எப்போதுமே சரியான தகவல்கள் இருக்க வேண்டும். மேலும் 10 வருடங்களுக்கு ஒருமுறை ஆதார் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது ஆதார் அட்டை வழங்கப்பட்ட தேதியில் இருந்து ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்ள ஆதார் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டும். இதன் மூலம் பொது அடையாள தரவு சேகரிப்பு மையத்தில் உங்கள் பற்றிய தகவல்கள் சரியானதாகவும் துல்லியமானதாகவும் இருக்கும்.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். ஆதாரில் மொபைல் எண்ணை மாற்ற வேண்டிய தேவை பலருக்கு இருக்கலாம். அதேபோல் பழைய எண்ணை இழந்திருந்தாலும், புது எண்ணை பதிவு செய்ய வேண்டியிருந்தாலும் அதனை மாற்ற வேண்டியது அவசியம். இப்போது ஆதார் அட்டையில் மொபைல் நம்பரை மாற்றுவது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
வழிமுறை-1: உங்கள் ஆதார் அட்டையில் உள்ள மொபைல் எண்ணை மாற்றுவதற்கு உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள ஆதார் பதிவு மையத்திற்குச் செல்லவும். இதற்கு முன்பு நியமனம் (Appointment) பதிவு செய்யலாம், இது https://appointments.uidai.gov.in/இல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
வழிமுறை-2: அடுத்து ஆதார் பதிவு மையத்தில் பயோமெட்ரிக் வெரிஃபிகேஷன் முடிந்த பின்பு, ஆதார் திருத்தம் செய்வதற்கான படிவத்தைப் பெற்று சரியான விவரத்துடன் பூர்த்தி செய்யவும்.
வழிமுறை-3: குறிப்பாக ரூ.50 சேவை கட்டணம் செலுத்தி,அந்த படிவத்தை நிர்வாகியிடம் சமர்ப்பிக்கவும். அதன்பின்பு ஆதார் புதுப்பிப்பு தொடர்பான URN நம்பரைக் கொண்ட ஒப்புகைச் சீட்டை பெறுவீர்கள். அதிலிருந்து 2 அல்லது 4 வாரங்களில் உங்கள் ஆதாரில் மொபைல் நம்பர் புதுப்பிக்கப்படும். இதை நீங்கள் UIDAI இணையதளத்திற்குச் சென்று சரி பார்த்துக் கொள்ளலாம்.

அதேபோல்ஆதார் அட்டையுடன் மொபைல் நம்பர் இணைக்கப்பட்டதா என்ற ஸ்டேட்டஸை சரிபார்க்க UIDAI-இன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்குச் சென்று "Check Aadhaar Status" என்பதைக் கிளிக் செய்யவும். அடுத்து நீங்கள் ஆதார் திருத்த விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு உங்களுக்கு வழங்கப்பட்ட URN நம்பரை என்டர் செய்யவும். அதன் பிறகு கேப்ட்ச்சா குறியீட்டை கொடுத்து "Submit" செய்தால் உங்களுடைய மொபைல் நம்பர், ஆதார் உடன் இணைக்கப்பட்ட விவரங்களை நீங்கள் எளிதாகப் பார்க்கலாம்.
அதேபோல் ஆதார் அட்டையில் பெயர், முகவரி அல்லது பிறந்த தேதி போன்ற மாற்றங்களைச் செய்ய விரும்பினால் அல்லது அப்டேட் செய்ய விரும்பினால் அடுத்த ஆண்டு ஜூன் 14 வரை எந்த கட்டணமும் இல்லாமல் இலவசமாகச் செய்யலாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டையை இலவசமாகப் புதுப்பிப்பதற்கான (அப்டேட் செய்வதற்கான) கடைசி தேதி முன்பு ஜூன் 14, 2025 என்று தெரிவித்தது. ஆனால் தற்போது இந்த காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது. அதாவது இப்போது வெளியாகி உள்ள அறிவிப்பில் ஜூன் 14, 2026 வரை ஆதார் கார்டை இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








