ஆதார் சாப்ட்வேர் திருடப்படுகிறதா? - UIDAI பதில்.!
இது குறித்து ஹூஃப்போஸ்ட் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், இது குறித்து பல்வேறு நிபுணர்கள் ஆராய்ந்துவிட்டார்கள்.
கடந்த 2009 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது முதல், ஆதார் அட்டையின் தகவல்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழும்பியது. இந்நிலையில் மூன்று மாத கால நீண்ட விசாரணையின் முடிவில், ஆதார் அடையாள அட்டையில் உள்ள தகவல்களை வெளியிடும் ஒரு சாப்ட்வேர் இருப்பதாக தெரியவந்துள்ளது. UIDAI மூலம் வடிவமைக்கப்படாத இந்த சாப்ட்வேர், ஆதார் அட்டையில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை ஊடுருவி விடுகிறது.

இதற்கு வெறும் ரூ.2,500 கொடுத்தால் போதுமாம். ஏற்கனவே நாடெங்கிலும் உள்ள பல ஆதார் ஆப்ரேட்டர்கள் இதை பயன்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆதார் அட்டை பணிகளை துரிதமாக செயல்படுத்தும் வகையில், கடந்த 2010 ஆம் ஆண்டு, தனியார் ஆப்ரேட்டர்களுக்கு, தகவல்களை சேகரிக்கும் பணி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஹூஃப்போஸ்ட் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், இது குறித்து பல்வேறு நிபுணர்கள் ஆராய்ந்துவிட்டார்கள். அதில் பயோமெட்ரிக் அடையாளம் காணும் பாதுகாப்பு அம்சங்களை, பயனர்கள் எளிதாக ஊடுருவி செல்ல இந்த சாப்ட்வேர் உதவுவதோடு, எந்த இடத்தில் இருந்து ஆதார் அட்டை தகவல்கள் அளிக்கப்பட்டது என்பதை மறைத்து, உலகின் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் செய்ய உதவுகிறது.

கண்விழித்திரை அடையாள காணும் அமைப்பையும் மட்டுப்படுத்தி, பதிவு செய்யப்பட்ட ஒரு ஆப்ரேட்டரின் புகைப்படத்தையும் மாற்றி, அடையாளத்திற்கு பயன்படுத்த உதவுகிறது. ஆதார் எண்களை உருவாக்கும் அணுகல் இருக்கும் எந்த ஒரு நபராலும் இதை செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹூஃப்போஸ்ட் இந்தியா கூறுகையில், ஆதார் பாதை (UIDAI இன் இன்ரோல்மெண்டு கேட்வே அணுக தேவைப்படும் பயனர்பெயர்கள் மற்றும் பாஸ்வேர்டு) ஆயிரக்கணக்கான வாட்ஸ் குரூப்கள் மூலம் ஹேக் செய்யப்படுவதாகவும் அதற்கு ரூ.2,500 கட்டணம் மட்டுமே தேவைப்படுவதாகவும் கூறப்படுகிறது. சாதாரண ஒரு கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் போல இதை நிறுவலாம். ஒரு முறை நிறுவிவிட்டால், பயனர்களின் தகவல்களை மாற்றி அமைக்க, ரூ.30 செலுத்தினால் போதும். மேலும் ஒருவரால், பல்வேறு ஆதார் கணக்குகளை இயக்கவும் முடியும்.
முன்னதாக, ஆதார் இன்ரோல்மெண்ட் ஆப்ரேட்டர் மூலம் ஆதார் தகவல்களை திரட்டி பதிவு செய்ய ரூ.100 முதல் ரூ.500 வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இந்த முறைகேடான அணுகல் குறித்து அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படுவது இல்லை.

இது குறித்தும், வெளியான செய்தியை குறித்தும் UIDAI அதிகாரிகளிடம் கேட்ட போது, இந்த முற்றிலும் தவறான செய்தி மற்றும் பொறுப்பற்ற காரியமாகும். இது போன்ற செய்திகள் மூலம் மக்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள் என்று பதிலளிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications