Home
News

Aadhaar Redesign: ஆதார் கார்டு புதிய வடிவம்.. இனி QR code மட்டுமே.. என்னென்ன மாறுது? இதோ முழு விவரம்..

ஆதார் அட்டை (Aadhaar card) இந்தியர்களின் மிக முக்கியமான அடையாள ஆவணம் ஆகும். குறிப்பாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் சேவைகளைப் பெறுவதற்கு இந்த ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆதார் கார்டு விவரங்கள் மூன்றாம் நபருக்குச் செல்வதைத் தடுக்கவும், பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் விதமாகவும் ஆதார் கார்டுகளில் பல மாற்றம் கொண்டு வரப்பட இருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது ஆதார் கார்டுகளில் பல மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. தற்போது இதற்கான பணிகளில் ஆதார் ஆணையம் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஆதார் கார்டின் வடிவமே மொத்தமாக மாறலாம் என்று கூறப்படுகிறது.

ஆதார் கார்டு புதிய வடிவம்.. இனி QR code மட்டுமே.. என்னென்ன மாறுது?

இப்போது நாம் பயன்படுத்தும் ஆதார் அடையாள ஆவணத்தில் 12 இலக்க எண்கள், புகைப்படம், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட முக்கிய விவரங்கள் உள்ளன. அதுவும் சிம்கார்டு வாங்குவது முதல் நிதி சார்ந்த சேவைகள் வரை அனைத்திற்கும் இந்த ஆதார் கார்டு பிரதான ஆவணமாகக் கேட்கப்படுகிறது. இதனால் சில இடங்களில் ஆதார் கார்டை வைத்துப் பல மோசடிகளும் நடைபெறுகின்றன.

குறிப்பாக தனியார் அமைப்புகள் மற்றும் நிறுவனங்களிடம் கூட ஒருவரின் ஆதார் விவரங்கள் எளிதாகக் கிடைக்கின்றன. இதனால் ஆதார் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை கேள்விக்குள்ளாகியுள்ளது. ஆகவே தான் அனைவரின் தனியுரிமையை உறுதி செய்யும் விதமாக ஆதார் கார்டில் பல மாற்றங்களைக் கொண்டுவர ஆதார் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

அதுவும் வரும் டிசம்பருக்குள் அதார் கார்டு மொத்தமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆதாரில் என்னென்ன மாறும் என்பதை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

புதிய ஆதாரின் வடிவம்: புதிய ஆதாரில் புகைப்படம் மற்றும் க்யூஆர் கோடு ஆகிய விவரங்கள் மட்டுமே தெரியும். அதேபோல் பழைய அட்டையில் இருந்த விவரங்கள் இனி வெளிப்படையாக இருக்காது என்று கூறப்படுகிறது. அதாவது பெயர், ஆதார் எண், முகவரி, பிறந்த தேதி, பாலினம் போன்றவை வெளிப்படையாக இருக்காது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால், பயனரின் முக்கிய விவரங்கள் மற்றும் தனிப்பட்ட தகவலும் அட்டையில் அச்சிடப்படாது. அனைத்து விவரங்களும் கியூ ஆர் கோடில் மட்டுமே இருக்கும் .

கியூ ஆர் கோடில் இருக்கும் முக்கிய விவரங்கள்: புதிய ஆதார் அட்டையின் க்யூஆர் கோடில் பெயர், ஆதார் எண், பிறந்த தேதி, முகவரி, பாலினம் விவரங்கள் இடம்பெறும். அதேபோல் இந்த கியூஆர் கோடை யார் அணுக முடியும் என்றால், அரசு அங்கீகரித்த ஸ்கேனர்கள், UIDAI-யின் அதிகாரப்பூர்வ செயலிகள் மற்றும் வெரிபிகேஷன் கருவிகள் போன்றவை அணுக முடியும். ஆகவே ஹோட்டல்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், அலுவலகங்கள், தனிநபர்கள் என யாரும் ஆதார் கார்டை புகைப்பட நகல் எடுத்தாலும் எந்த தனிப்பட்ட விவரங்களையும் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய மாற்றம் கொண்டுவரப்படக் காரணம் என்னவென்றால், தனியுரிமை பாதுகாப்பு தான். அதாவது ஆதார் விவரங்களைப் பெறும் தனியார் நிறுவனங்கள், ஹோட்டல்கள், சிம்கார்டு சேவை வழங்கும் நிறுவனங்கள் உள்ளிட்டவை இந்த தரவுகளை கசியவிட வாய்ப்பு உள்ளன. மேலும் பயனர்களின் தரவுகள் பொதுவெளியில் இப்படி தெரிந்தால் இதில் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளன. ஆகவே விரைவில் கொண்டுவரப்படும் இந்த புதிய ஆதாரில் அதற்கான வாய்ப்பு இருக்காது. அதாவது ஆதார் தரவுகளைத் தவறாகப் பயன்படுத்துவது ஏறத்தாழ முற்றிலும் தவிர்க்கப்படும்.

ஆதார் கார்டு புதிய வடிவம்.. இனி QR code மட்டுமே.. என்னென்ன மாறுது?

அதுவும் உங்கள் தனிப்பட்ட விவரங்களை யாராலும் எளிதாகப் பார்க்க முடியாது. டிஜிட்டல் வெரிபிகேஷன் மட்டுமே செய்ய முடியும். குறிப்பாக கியூ ஆர் கோட் ஸ்கேன் செய்தால் மட்டுமே டேட்டாவை பார்க்க முடியும் என்பதால் ஒருவரின் தனிப்பட்ட விவரங்கள் 100 சதவீதம் உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை புதிய ஆதார் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இருந்தபோதிலும் சமீபத்தில் அரசு வெளியிட்ட செய்தி குறிப்பு ஒன்றில் புதிய ஆதார் செயலியில் மேம்பட்ட அம்சங்கள் இருப்பதாகவும், கியூஆர் கோடு அடிப்படையிலான கார்டு குறித்த விவரமும் இடம் பெற்று இருந்தது. ஆகவே ஆதாரில் பாதுகாப்பை மேம்படுத்த கியூஆர் கோடு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க அரசு முடிவு செய்து இருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக இந்த புதிய ஆதார் கார்டு அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Aadhaar Redesign Explained: Whats Changing and Why
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X