ஆதார் தொடர்பான பிரச்சினையா? சில நிமிடங்கள் போதும்.! உடனடி தீர்வு காண புதிய வழி!

|

இந்தியாவில் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்பொழுது அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் பயனர்களின் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதை எப்படிப் பயன்படுத்தலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

ஆதார் அட்டை

ரேஷன் அட்டைகள் போல, ஆதார் அட்டை என்பதும் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக மாறிவிட்டது. நீங்கள் ஒரு புதிய சிம் கார்டு வாங்க வேண்டுமென்றால் கூட இப்பொழுது உங்கள் ஆதார் தகவல்கள் முக்கியமாகிவிட்டது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவர்க்கும் இந்த தனிநபர் அடையாள அட்டை என்பது கட்டாயமாகிவிட்டது. ஆதாரில் ஏதேனும் பிரச்சனை என்றால் ஆன்லைன் இல் சரி செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

உடனடியாக தீர்வு

இருப்பினும் இதில் உடனடியாக தீர்வு கிடைப்பதில்லை, ஆன்லைனில் உங்கள் குறைகளை விண்ணப்பித்துவிட்டு அதைச் சரி செய்யும் வரை கத்திரிக்கா வேண்டும். இனி அந்த சிக்கல் இருக்காது, மக்களின் தேவையை அறிந்து ஆதார் ஆணையம் தற்பொழுது டிவிட்டர் மூலம் ஆதார் பயனர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண தொடங்கியுள்ளது. இனி உங்களுடைய ஆதார் தொடர்பான பிரச்சனைகளை இந்த டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கலாம்.

இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம்

ஆதார் அட்டையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைச் சரியாகப் பயன்படுத்தி வரும் மக்களுக்கு உதவும் வகையில் இந்த பதிய முயற்சியை இந்திய அரசாங்கம் தற்பொழுது களமிறக்கியுள்ளது. பயனர்களின் வசதிக்காக இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) டிவிட்டர் மூலம் அவர்களின் சிக்கல்களைத் தீர்க்கத் தொடங்கியுள்ளது. இப்போது நீங்கள் சமூக தளமான டிவிட்டரின் உதவியுடன் உங்கள் பிரச்சினையைச் சுலபமாகத் தீர்த்துக்கொள்ளலாம்.

டிவிட்டர் பக்கம்

இனி உங்களுடைய ஆதார் அட்டை தொடர்பான எந்த சிக்கலாக இருப்பினும், நீங்கள் உடனடியாக @UIDAI மற்றும் @Aadhaar_Care என்ற டிவிட்டர் பக்கத்தில் உங்கள் குறைகளைக் கூறி ஆதார் ஆணையத்தை டேக் செய்து ட்வீட் செய்யலாம். அதேபோல், ஆதார் மையத்தின் பிராந்திய அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கமும் வழங்கப்பட்டுள்ளது, இதிலும் உங்களுடைய புகார்களை நீங்கள் பதிவிடலாம்.

உலகின் முதல் விமானத்தை பயன்படுத்தியவர் இலங்கை தமிழ் மன்னன்! அரசாங்கத்திடம் ஆதாரம் உள்ளது!உலகின் முதல் விமானத்தை பயன்படுத்தியவர் இலங்கை தமிழ் மன்னன்! அரசாங்கத்திடம் ஆதாரம் உள்ளது!

தீர்வு ஆன்லைனில் கிடைக்கிறது

ஆதார் ஆணையம் தற்பொழுது அதன் அனைத்து சேவைகளையும் ஆன்லைன் மூலம் வழங்குகிறது. ஆதார் அட்டையில் பெயரை மாற்றுவது, இருப்பிட முகவரி மாற்றுவது, தொலைப்பேசி எண் மாற்றுவது, புதிய அட்டைகளில் பெயர் திருத்தும் செய்வது போன்ற அனைத்து சேவைகளுக்கும் தீர்வு ஆன்லைனில் கிடைக்கிறது.

கூடுதல் உதவிக்கு

கூடுதல் உதவிக்கு 1947 என்ற எண்ணை அழையுங்கள். அதேபோல், help@uidai.gov.in என்ற மின்னஞ்சல் மூலமும் உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். இனி உங்களுடைய ஆதார் தொடர்பான சிக்கல்களுக்கு உடனடி தீர்வு தயார்.

Best Mobiles in India

English summary
Aadhaar Queries And For Any Aadhaar Related Help Use This Twitter Page : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X