ஆதார் கார்டு வைத்து இருப்பவர்களுக்கு ரூ.75 கட்டணம்.. பழைய கட்டணம் ரூ.50 இல் உயர்வு.. பிவிசி கார்டில் மாற்றம்!
ஆதார் அட்டை வைத்து இருக்கும் ஒட்டுமொத்த அட்டைதாரர்களுக்கும் யுஐடிஏஐ (UIDAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது புதிய கட்டண உயர்வை அமல்படுத்தி உள்ளது. இந்த கட்டணம் பிவிசி ஆதார் கார்டுக்கு (Aadhaar PVC Card) விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆனது பிவிசி ஆதார் கார்டு சேவைக்கு ரூ.50 கட்டணமாக வைத்திருந்தது. ஆகவே, ஆதார் கார்டு வைத்து இருப்பவர்கள் இனிமேல் பிவிசி ஆதார் கார்டை ஆர்டர் செய்தால், புதிய கட்டணமாக ரூ.75 வசூலிக்கப்படும். ஸ்பீடு போஸ்ட் சேவை (Speed Post Service) வழியாக இந்த பிவிசி ஆதார் கார்டு ஆனது அனுப்பி வைக்கப்படுகிறது.

ஆகவே, ஆர்டர் செய்த பிறகு அதை டிராக் செய்து கொள்ளலாம். மேலும், டெலிவரி ஸ்டேட்டஸ் (Delivery Status) தெரிந்து கொள்ளலாம். இந்த புதிய கட்டண நடைமுறை ஜனவரி 1 ஆம் தேதி முதலே அமலுக்கு வந்துவிட்டது. ஆதார் கார்டு வைத்திருக்கும் ஒட்டுமொத்த பேருக்கும் இந்த கட்டணம் பொருந்தும். இதில் யாருக்கும் விலக்கு கிடையாது.
யுஐடிஏஐ போர்ட்டல் மற்றும் மைஆதார் ஆப் வழியாக ஆதார் பிவிசி கார்டை ஆர்டர் செய்து கொள்ளலாம். இது கிரெடிட் கார்டு போன்ற அளவில் கொடுக்கப்படும். இது கிட்டத்த ஆதார் கார்டின் பிரிண்ட் போலத்தான். ஆகவே, புதிய ஆதார் கார்டாக நினைக்க வேண்டாம். ஸ்பீடு போஸ்ட் வழியாக அனுப்பி வைக்கப்படுவதால், உடனடியாக டோர் டெலிவரி செய்யப்பட்டுவிடும்.
ஆதார் பிவிசி கார்டை எவ்வாறு ஆர்டர் செய்வது?
1. யுஐடிஏஐ போர்ட்டலுக்கு (UIDAI Portal) செல்லுங்கள். ஹோம் பேஜ்ஜில் இருக்கும் மை ஆதார் (My Aadhaar) விருப்பத்தை கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்போது, ஆதார் பெறுங்கள் (Get Aadhaar) பக்கம் தோன்றும். கீழே ஆர்டர் ஆதார் பிவிசி கார்டு (Order Aadhaar PVC Card) விருப்பும் தோன்றும். இதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
2. இப்போது, ஆதார் நம்பர் / எண்ட்ரோல்மெண்ட் ஐடி (Aadhaar Number/Enrolment ID) அல்லது விர்ச்சுல் ஐடி (Virtual ID) நம்பர்கள் கேட்கப்படும். இதில் ஏதாவது ஒரு நம்பரை கொடுக்க வேண்டும். பிறகு செக்யூரிட்டி கோட் (Security Code) கொடுக்க வேண்டும். அதாவது கேப்ச்சா கோட்கள் இருக்கும். இந்த கேப்ச்சாவை சரியாக கொடுத்துவிடுங்கள்.
3. இப்போது, ஆதார் நம்பருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு ஓடிபி அனுப்பப்படும். இந்த ஓடிபி நம்பரை கொடுக்க வேண்டிய இடத்தில் சரியாக கொடுங்கள். இப்போது, ஆதார் கார்டு விவரங்கள் காண்பிக்கப்படும். இதை சரியாக இருக்கிறதா என்பதை பார்த்து கொள்ளலாம். இதையடுத்து பேமெண்ட் பேஜ் தோன்றும்.
4. புதிய கட்டணம் ரூ.75 செலுத்த வேண்டும். இதை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது நெட்பேங்கிங் போன்ற பரிவர்த்தனைகள் வழியாக செய்து கொள்ளலாம். பேமெண்ட் வெற்றிகரமாக முடிந்த பிறகு ரசீது (Receipt) கொடுக்கப்படும். அதேபோல சர்வீஸ் ரெக்வொஸ்ட் நம்பர் (Service Request Number) கொடுக்கப்படும்.
5. இந்த ஆதார் பிவிசி கார்டு ஸ்பீடு போஸ்ட் வழியாக அனுப்பி வைக்கப்படுவதால், டிராக் செய்து கொள்ளலாம். யுஐடிஏஐ போர்ட்டலுக்கு சென்று மைஆதார் விருப்பத்தில் கீழ் இருக்கும் செக் ஆதார் பிவிசி கார்டு ஸ்டேட்ஸ் (Check Aadhaar PVC card Status) விருப்பத்தில், ஆதார் கார்டு நம்பரை கொடுத்து செக் செய்து கொள்ளலாம். இந்தியா போஸ்ட் வழியாகவும் செக் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








