Home
News

இது ஓர் தொடர்கதை- செப்.,30 இறுதி: ஆதார்-பான் இணைப்புக்கு கால அவகாசம் நீட்டிப்பு- எப்படி இணைப்பது!

ஆதார் கார்ட்- பான் கார்ட் இணைப்புக்கான கடைசி தேதி 2021 ஜூன் 30 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து இணைப்புக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஜூன் 30 2021 கடைசி அறிவிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் கட்டாயம்

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் கட்டாயம்

ஆதார் திட்டம் அரசியல் சட்ட ரீதியாக செல்லும் என தீர்ப்பு அளித்ததையடுத்து வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் கட்டாயம் என உத்தரவிடப்பட்டது. ஜூன் 30 ஆம் தேதிக்குள் பான் கார்டை ஆதார் உடன் இணைப்பது அவசியம் எனவும் இணைக்காதபட்சத்தில் பான் எண்ணை பயன்படுத்த முடியாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 3 மாதங்கள் கூடுதலாக கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஆதார் பான் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ அறிவுரை

எஸ்பிஐ அறிவுரை

வங்கி சேவைகளில் எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் விரைவில் ஆதார் மற்றும் பான் கார்ட்களை இணைக்க வேண்டும் என வாடிக்கையாளர்களை எஸ்பிஐ கேட்டுக் கொண்டுள்ளது. ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க வேண்டும் என எஸ்பிஐ குறிப்பிட்டுள்ளது.

பான், ஆதார் இணைப்பு விவரம்

பான், ஆதார் இணைப்பு விவரம்

நீங்கள் பான் மற்றும் ஆதார் ஆகியவற்றை இணைக்கவில்லை என்றால், அவைகளை இணைப்பதற்கு இரண்டு அருமையான வழிகள் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று, அதார்-பான் இணைப்பை வருமான வரித்துறையின் Income Tax e-filing வலைத்தளம் மூலம் இணைக்கலாம். இரண்டாவது வழி 567678 (அ) 56161 என்கிற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்புவதின் மூலமாகவும் இணைக்கலாம். இதை எப்படி செய்வது என்று விரிவாக பார்ப்போம் வாங்க...

இணைப்புக்கான வழிமுறைகள்

இணைப்புக்கான வழிமுறைகள்

வருமான வரித்துறையின் வலைதளம் மூலம் பான் எண் மற்றும் ஆதாரை இணைப்பது எப்படி? என்று பார்ப்போம்

  • வழிமுறை-1: முதலில் ஆன்லைன் வழியாக வருமான வரித்துரையில் அதிகாரபூர்வமான இ-ஃபில்லிங் வலைத்தளத்திற்குள் ஆதார் பான் இணைப்பு இந்த லிங்கை கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும்.
  • வழிமுறை-2 அடுத்து வலைதளத்தின் இடது பக்கதில் உள்ள Link Aadhaar எனும் விருப்பத்தை தேர்வு செய்யவும்.
  • வழிமுறை-3 அதன்பின்பு உங்களிக் பான் மற்றும் ஆதார் விவரங்களை கேட்குமொரு பக்கத்திற்குள் நுழைவீர்கள். அங்கே பான், ஆதார் எண் மற்றும் ஆதாரில் குறிப்பிட்டுள்ளதை போன்ற பெயர் போன்ற விவரங்களை பதிவிட வேண்டும்.
  • வழிமுறை-4 பின்னர் I have only year of birth in Aadhaar card என்ற விருப்பமும், அதன் அருகில் ஒரு டிக் பாக்ஸ் ஒன்றும் இருக்கும். இது உங்களின் ஆதார் அட்டையில் நீங்கள் பிறந்த ஆண்டு மட்டுமே குறிப்பிடப்பட்டு இருப்பின் அந்த டிக் பாக்ஸை கிளிக் செய்தல் வேண்டும்.
  • வழிமுறை-5 அதன்பின்பு வலைதள பக்கத்தில் இருக்கும் Captcha code-ஐ நிரப்பவும், பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒடிபி ஒன்றை அனுப்பச் சொல்லியும் நீங்கள் கோரிக்கை விடுக்கலாம். கடைசியாக எல்லாம் முடிந்த பின்னர் Link Aadhaar என்பதை கிளிக் செய்தல் வேண்டும்.
  • எஸ்எம்எஸ் மூலம் இணைக்க வழிமுறைகள்

    எஸ்எம்எஸ் மூலம் இணைக்க வழிமுறைகள்

    எஸ்எம்எஸ் மூலம் இணைக்க வழிமுறை எஸ்எம்எஸ் மூலம் பான் எண் மற்றும் ஆதாரை இணைக்க வழிமுறைகளைப் பார்ப்போம்.

    வழிமுறை-1 முதலில் ஆதார் உடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 567678 அல்லது 56161 க்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் வழியாக கூட நீங்கள் உங்களின் பான்-ஆதார் இணைப்பை நிகழ்த்தலாம்.

    வழிமுறை-2 அவ்வாறு செய்யவேண்டும் என்றால், நீங்கள் UIDPAN என்று டைப் செய்து சிறுதி இடைவெளி விட்டு 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்து இடைவெளி விட்டு பின்னர் 10 இலக்க பான் எண்ணை டைப் செய்து மேலே குறிப்பிட்டுள்ள எண்ணில் எதாவது ஒன்றிக்கு எஸ்எம்எஸ் செய்தல்வேண்டும். இதன் மூலம் பாண் மற்றும் ஆதாரை இணைக்க முடியும்.

    அதே போல் இந்த லிங்க்கை கிளிக் செய்து உங்கள் ஆதார் பான் அட்டை இணைத்து விட்டதா என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Aadhaar- PAN linking Deadline Extend: How to Link Aadhaar- PAN Card
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X