Home
News

ஆதார்-பான் இணைப்புக்கு கெடு., தவறினால் அபராதம்- எவ்வளவு தெரியுமா?

தற்சமயம் வெளிவந்த தகவலின் அடிப்படையில் வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் ஆதாரை பாண் எண்ணுடன் இணைக்கவில்லை என்றால் பான் அட்டை செயலற்று போனதாக அறிவிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மார்ச் 31-ம் தேதி

மார்ச் 31-ம் தேதி

குறிப்பாக பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில்அதை செய்யத் தவறினால் முதல் கட்டமாக பாண் எண் செயலற்றதாக மாற்றப்படும்.

10ஆயிரம் ரூபாய்

10ஆயிரம் ரூபாய்

அதன்பின்பு செயலற்றதாக பட்டியலிடப்படும் பான் எண்ணை பயன்படுத்துபவர்களுக்கு 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மேலும் வங்கி பரிவர்த்தனை, சொத்து விற்பனை, பங்குசந்தை முதலீடு, மியூச்சுவல் பண்ட்கள் போன்றவற்றில் பான் எண்ணை பயன்படுத்துவது குற்றம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிர் கிடைக்கும்

மேலும் செயலற்ற பான் எண்ணை வைத்திருப்பதும், பான் எண் இல்லாமல் இருப்பதும் ஒன்று தான் என கூறியுள்ள வருமான வரித்துறை,அதாருடன் இணைத்த பிறகு பான் எண்ணுக்கு உயிர் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Income Tax e-filing வலைத்தளம்

Income Tax e-filing வலைத்தளம்

ஒருவேளை நீங்கள் பான் மற்றும் ஆதார் ஆகியவற்றை இணைக்கவில்லை என்றால், அவைகளை இணைப்பதற்கு இரண்டு அருமையான வழிகள் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று, அதார்-பான் இணைப்பை வருமான வரித்துறையின் Income Tax e-filing வலைத்தளம் மூலம் இணைக்கலாம்.

எஸ்எம்எஸ் அனுப்புவதின் மூலமாகவும் இணைக்கலாம்

எஸ்எம்எஸ் அனுப்புவதின் மூலமாகவும் இணைக்கலாம்

இரண்டாவது வழி 567678 (அ) 56161 என்கிற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்புவதின் மூலமாகவும் இணைக்கலாம். இதை எப்படி செய்வது என்று விரிவாக பார்ப்போம் வாங்க...

வருமான வரித்துறையின் வலைதளம்

வருமான வரித்துறையின் வலைதளம்

வருமான வரித்துறையின் வலைதளம் வருமான வரித்துறையின் வலைதளம் மூலம் பான் எண் மற்றும் ஆதாரை இணைப்பது எப்படி? என்று பார்ப்போம்.

வழிமுறை-1:
முதலில் ஆன்லைன் வழியாக வருமான வரித்துரையில் அதிகாரபூர்வமான இ-ஃபில்லிங் வலைத்தளத்திற்குள் (https://www.incometaxindiaefiling.gov.in)செல்ல வேணடும்.

வழிமுறை-2
அடுத்து வலைதளத்தின் இடது பக்கதில் உள்ள Link Aadhaar எனும் விருப்பத்தை தேர்வு செய்யவும்.

வழிமுறை-3
அதன்பின்பு உங்களிக் பான் மற்றும் ஆதார் விவரங்களை கேட்குமொரு பக்கத்திற்குள் நுழைவீர்கள். அங்கே பான், ஆதார் எண் மற்றும் ஆதாரில் குறிப்பிட்டுள்ளதை போன்ற பெயர் போன்ற விவரங்களை பதிவிட வேண்டும்.

வழிமுறை-4

வழிமுறை-4

பின்னர் I have only year of birth in Aadhaar card என்ற விருப்பமும், அதன் அருகில் ஒரு டிக் பாக்ஸ் ஒன்றும் இருக்கும். இது உங்களின் ஆதார் அட்டையில் நீங்கள் பிறந்த ஆண்டு மட்டுமே குறிப்பிடப்பட்டு இருப்பின் அந்த டிக் பாக்ஸை கிளிக் செய்தல் வேண்டும்.

வழிமுறை-5

அதன்பின்பு வலைதள பக்கத்தில் இருக்கும் Captcha code-ஐ நிரப்பவும், பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒடிபி ஒன்றை அனுப்பச் சொல்லியும் நீங்கள் கோரிக்கை விடுக்கலாம். கடைசியாக எல்லாம் முடிந்த பின்னர் Link Aadhaar என்பதை கிளிக் செய்தல் வேண்டும்.

எஸ்எம்எஸ் மூலம் இணைக்க வழிமுறை

எஸ்எம்எஸ் மூலம் இணைக்க வழிமுறை

எஸ்எம்எஸ் மூலம் பான் எண் மற்றும் ஆதாரை இணைக்க வழிமுறைகளைப் பார்ப்போம்.

வழிமுறை-1

வழிமுறை-1
முதலில் ஆதார் உடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 567678 அல்லது 56161 க்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் வழியாக கூட நீங்கள் உங்களின் பான்-ஆதார் இணைப்பை நிகழ்த்தலாம்.

வழிமுறை-2
அவ்வாறு செய்யவேண்டும் என்றால், நீங்கள் UIDPAN என்று டைப் செய்து சிறுதி இடைவெளி விட்டு 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்து இடைவெளி விட்டு பின்னர் 10 இலக்க பான் எண்ணை டைப் செய்து மேலே குறிப்பிட்டுள்ள எண்ணில் எதாவது ஒன்றிக்கு எஸ்எம்எஸ் செய்தல்வேண்டும். இதன் மூலம் பாண் மற்றும் ஆதாரை இணைக்க முடியும்.

Best Mobiles in India

English summary
PAN card holders could be fined up to ₹10,000 for not linking Aadhaar with PAN : Read more about this in Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X