Home
News

ஆதார் கார்டு புது ரூல்ஸ்.. இனி படாதபாடு பட வேண்டியது இல்லை.. பெயர் மாற்றம் செய்யும் முன் இதை தெரிஞ்சுக்கோங்க!

ஆதார் கார்டில் பெயர் மாற்றம் அல்லது திருத்தம் செய்யும் நடைமுறையில் யுஐடிஏஐ (UIDAI) என்கிற இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது புதிய விதிகளை கொண்டுவந்துள்ளது. 2021ஆம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட விதிகளுக்கு பதிலாக, இந்த புதிய எஸ்ஓபி (SOP) அமலுக்கு வந்துள்ளது.

இந்த புதிய விதிகளின்படி, ஆதார் கார்டில் பெயர் மாற்றம் செய்வதற்கான அனைத்து கோரிக்கைகளும் ஒரே மாதிரியாக கருதப்படாது. பெயரில் சிறிய எழுத்துப்பிழை, டேட்டா என்ட்ரியால் ஏற்பட்ட தவறு, திருமணம் அல்லது விவாகரத்துக்கு பிறகு பெயர் மாற்றம், பிராந்திய மொழியில் உள்ள தவறு மற்றும் முழுமையான பெயர் மாற்றம் என்று பல்வேறு வகைகளாக கோரிக்கைகள் பிரிக்கப்பட்டுள்ளன.

ஆதார் கார்டு புது ரூல்ஸ்.. இனி படாதபாடு பட வேண்டியது இல்லை!

பெயரில் சிறிய அளவில் மட்டுமே திருத்தம் செய்ய வேண்டியவர்களுக்கு புதிய விதிகள் சற்று எளிமையானதாக இருக்கின்றன. அதாவது, பெயரில் உள்ள இனிஷியலை (Initials) முழுமையாக எழுதுவது, நடுப்பெயர் அல்லது குடும்பப் பெயரை சேர்ப்பது அல்லது நீக்குவது, பெயர்களின் வரிசையை மாற்றுவது மற்றும் உச்சரிப்பில் பெரிய மாற்றம் இல்லாத சிறிய எழுத்து பிழையை (Spelling Mistake) சரிசெய்வது போன்றவை சிறிய பெயர் மாற்றம் (Minor Name Change) ஆக கருதப்படும்.

அதேபோல, பெயரில் தேவையில்லாமல் பயன்படுத்தப்பட்ட புள்ளிகளை (Full Stop) நீக்குவது, பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களை சரிசெய்வது போன்ற ஃபார்மெட்டிங் (Formatting) மாற்றங்களும் இந்த பிரிவில் அடங்கும். அதாவது, R. Kumar என்பதை Rahul Kumar என மாற்றுவது அல்லது பெயரில் உள்ள தேவையற்ற புள்ளிகளை நீக்குவது போன்ற திருத்தங்களை உரிய அடையாள ஆவணத்தை சமர்ப்பித்து மேற்கொள்ளலாம்.

இந்த வகையான சிறிய பெயர் திருத்தங்களை செய்ய விரும்புபவர்கள், அந்த பெயர் சரியாக குறிப்பிடப்பட்டுள்ள ஆவணத்தை சமர்ப்பித்து, மாற்றி கொள்ளலாம். பெயர் மாற்றம் கோரிக்கையில் சமர்ப்பிக்கப்படும் ஆவணத்தில் உள்ள ஸ்பெல்லிங் மற்றும் பெயரின் வரிசைப்படியே ஆதாரில் பெயர் பதிவு செய்யப்படும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆனது தெரிவித்துள்ளது.

ஆதார் பதிவு செய்யும்போது அல்லது ஏற்கனவே உள்ள தகவலை புதுப்பிக்கும்போது அதிகாரி அல்லது ஆபரேட்டரின் டேட்டா என்ட்ரி (Data Entry) தவறால் பெயர் தவறாக பதிவாகியிருந்தால் அதற்கும் தனி நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, முதலில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் பெயர் சரியாக இருந்தும், ஆதாரில் மட்டும் தவறாக பதிவானால் அது டேட்டா என்ட்ரி தவறாக (Data Entry Error) எடுத்துக்கொள்ளப்படும்.

18 வயதுக்கு மேல் இருப்பவர்கள் இதுபோன்ற டேட்டா என்ட்ரி தவறுகளை சரிசெய்ய குறிப்பிட்ட அடையாள சான்று (Proof of Identity) அல்லது தேவையான உறவுமுறை சான்று (Proof of Relationship) ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். 18 வயதுக்கு கீழ் இருப்பவர்கள் பெயரில் இதுபோன்ற தவறு இருந்தால், பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் மற்றும் தேவையான அடையாள அல்லது உறவு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆங்கிலத்தில் பெயர் சரியாக இருந்தாலும், ஆதாரில் பதிவு செய்யப்பட்ட பிராந்திய (தமிழ், தெலுங்கு உள்ளிட்ட) மொழியில் பெயர் தவறாக இருந்தால் அதற்கும் தனி விதி உள்ளது. இதுபோன்ற பிராந்திய மொழி தவறுகளை (Regional Language Error) சரிசெய்ய குறிப்பிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க முடியும். ஆகவே, ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழியில் பெயர் வேறுபட்டு இருப்பவர்கள் இந்த புதிய நடைமுறையை பயன்படுத்தி கொள்ளலாம்.

திருமணம் அல்லது விவாகரத்துக்குப் பிறகு பெயர் அல்லது துணை பெயரை (Surname) மாற்ற விரும்புபவர்களுக்கும் புதிய விதிகளில் தனி பிரிவு உள்ளது. இதிலும் குறிப்பிட்ட அடையாள சான்றை சமர்ப்பிக்க வேண்டும். அதே நேரத்தில் பெயர் மாற்றமானது, திருமணம் அல்லது விவாகரத்து காரணமாக ஏற்பட்டது என்பதையும், ஒருவரின் அடிப்படை அடையாளம் மாறவில்லை என்பதையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

திருமணத்திற்குப் பிறகு பெயர் மாற்றம் செய்யும்போது, பதிவு செய்யப்பட்ட திருமண சான்றிதழையும் (Marriage Certificate) ஆதாரமாக பயன்படுத்த முடியும். அதேபோல், விவாகரத்துக்குப் பிறகு துணை பெயர் அல்லது பெயரை மாற்ற வேண்டிய சூழ்நிலையிலும் உரிய சட்டப்பூர்வ ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு பெயர் மாற்றத்திற்கும் தனித்தனியாக பொருத்தமான ஆவணங்கள் சரிபார்க்கப்பட இருக்கிறது.

முழு பெயர் மாற்றம்:

முழுமையாக பெயரையே மாற்ற விரும்புபவர்களுக்கு விதிகள் மிகவும் கடுமையாக உள்ளன. ஏற்கனவே, இருக்கும் பெயரை சிறிய அளவில் திருத்துவது அல்லாமல், ஒருவரின் அடையாளமே மாறும் அளவுக்கு பெயரை மாற்றும் கோரிக்கை பெரிய அளவிலான பெயர் மாற்றமாக (Major Name Change) கருதப்படும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சாதாரண அடையாள சான்று மட்டுமே போதாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.

முழுமையான பெயர் மாற்றத்திற்கு மத்திய அரசிதழ் அறிவிப்பு (Central Gazette Notification) முக்கியமான ஆவணமாக இருக்கும். இதனுடன் தேவையான அடையாள ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் வழங்கும் ஆவணங்கள், உண்மையானவையா என்பதை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் அதிகாரிகள் கூடுதல் சரிபார்ப்புக்கு உட்படுத்தலாம்.

இந்த விதிகளுக்குட்பட்டு ஆதாரில் பெயர் மாற்றம் அல்லது திருத்தம் செய்ய விரும்புபவர்கள் வழக்கமாக ஆதார் சென்டர்களுக்கு சென்று மாற்றி கொள்ளலாம். தேவையான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். இதற்காக ரூ.75 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆகவே, சிறிய பிழைகள் இருந்தால், அதற்காக அரசிதழ் அறிவிப்பு தேவைப்படாது. போதுமான அடையாளம் மற்றும் உறவு முறை சான்றுகள் இருந்தால் மாற்றலாம்.

Best Mobiles in India

English summary
Aadhaar Name Change New Rules 2026 Check UIDAI Name Correction Process And Documents Required
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X