மருத்துவக் காப்பீடு (5லட்சம் ரூபாய்) பெற ஆதார் கட்டாயம்: மத்திய அரசு அதிரடி.!

பயனர்களுக்கு தலா 5லட்சம் ரூபாய் வரை செலவிடப்படும் என்பதால் பல ஆயிரம் கோடி இந்த திட்டத்திற்கு தேவைப்படுகிறது எனமத்திய அரசு கூறியுள்ளது.

|

தற்சமயம் அனைத்து ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மருத்துக் காப்பீடு பெற ஆதார் கட்டயாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய அரசின் காப்பீடு திட்டம் வரும் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வரும் என இந்தாண்டின் மத்திய பட்ஜெட் தாக்கல் அறிவிக்கபட்ட அன்று கூறப்பட்டது.

மருத்துவக் காப்பீடு பெற ஆதார் கட்டாயம்: மத்திய அரசு அதிரடி.!

மேலும் இந்த திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 5லட்சம் ரூபாய் வரை இலவச காப்பீடு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த திட்டம் கண்டிப்பாக பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு:

மத்திய அரசு:

இந்தியாவில் உள்ள 50 கோடிக்கும் அதிகமான ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் இந்த மருத்துவக் காப்பீடு மூலம் பயன்பெறுவார்கள்
என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய அரசின் இந்த புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெற பயனாளிகளுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சகம்

சுகாதாரத்துறை அமைச்சகம்

மேலும் ஆதார் அட்டையில் உள்ள உண்மையான விவரங்கள் இருக்கும் என்பதால் வருமானத்தை குறைத்து கொண்டு யாரும் இந்த
திட்டத்தின் மூலமாக பயன்பெறக்கூடாது என்பதற்காக இந்த உத்தரவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பிறப்பத்துள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

5லட்சம் ரூபாய்

5லட்சம் ரூபாய்

பயனர்களுக்கு தலா 5லட்சம் ரூபாய் வரை செலவிடப்படும் என்பதால் பல ஆயிரம் கோடி இந்த திட்டத்திற்கு தேவைப்படுகிறது என மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் இதில் அதிகாரிகள் எந்தவிதமான முறைகேட்டிலும் ஈடுபடக்கூடாது என்பதற்காகவும் ஆதார்
கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அரசு விளக்கமளித்துள்ளது.

பல கோடி மக்கள் வீடு இல்லமால்:

பல கோடி மக்கள் வீடு இல்லமால்:

இந்நிலையில் பல கோடி மக்கள் வீடு இல்லமால் சாலைகளில் வசித்து வரும் நிலையில். அவர்களுக்கு ஆதார் அட்டை எவ்வாறு கிடைக்கும் என்றும் பல்வேறு மக்கள் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

 12 இலக்க ஆதார் அடையாள எண்

12 இலக்க ஆதார் அடையாள எண்

இதற்கு முன்பு ஆதார் அடையாளத்தின் மெய்நிகர் எண்ணை (Virtual ID) உறுதிப்படுத்துவதற்கான செயலிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக
ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆதார் எண்ணைப் பெற்றுள்ள பயனாளர்கள் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாத்திட , புதிய ஆதார்
மெய்நிகர் அடையாள எண் உதவும் (Aadhaar virtual ID). இந்த முறையின் மூலம் நம்முடைய 12 இலக்க ஆதார் அடையாள
எண்ணுக்குப் பதிலாக புதிய வெர்ச்சுவவல் அடையாள எண்ணை உருவாக்கிக் கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Aadhaar must for health mission cover: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X