Home
News

ஜூலை 1 முதல் எல்லாமே மாறுது.. பான் கார்டுக்கு விண்ணப்பிக்கிறீர்களா? இதையெல்லாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள்..

இந்தியாவில் ஆதார் (Aadhaar) கார்டு போலவே கான் கார்டும் ஒரு முக்கிய அரசு ஆவணமாக உள்ளது. அதாவது இந்தியாவில் வருமான வரித்துறையால் வழங்கப்படுகிறது இந்த பான் கார்டு (PAN card). குறிப்பாக வருமான வரி செலுத்துவதற்கு மட்டுமின்றி, வங்கிகளில் குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணம் எடுப்பதற்கு மற்றும் பணப் பரிமாற்றத்திற்கு என நிதி சார்ந்த பல்வேறு விஷயங்களில் பான் கார்டு அவசியம் தேவைப்படுகிறது.

இந்நிலையில் வரி ஏய்ப்பைத் தடுக்கும் வகையிலும், அடையாள சரிபார்ப்பை வலுப்படுத்தும் நோக்குடன் ஜூலை 1-ம் தேதி முதல் புதிய பான் கார்டு பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுவும் மத்திய நேரடி வரிகள் வாரியம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜூலை 1 முதல் எல்லாமே மாறுது.. பான் கார்டுக்கு விண்ணப்பிக்கிறீர்களா?

தற்போதைய நடைமுறையில் விண்ணப்பதாரரின் பெயர், பிறப்பு சான்றிதழ் அல்லது பிற அடையாள சான்றிதழ் இருந்தாலே பான்கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். வரி ஏய்ப்பைத் தடுக்கும் வகையிலும், அடையாள சரிபார்ப்பை வலுப்படுத்தும் நோக்குடன் ஜூலை 1-ம் தேதி பான் கார்டு பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

timesofindia வெளியிட்ட தகவலின்படி, மத்திய நேரடி வரிகள் வாரியம் இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது எனவும், புதிய விதிமுறைப்படி ஜூலை 1-ம் தேதிக்கு பிறகு பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் எவரும், செல்லுபடியாகும் ஆதார் எண்ணைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அதுவே விண்ணப்ப செயல்பாட்டின்போது முக்கிய சரிபார்ப்பு ஆவணமாகச் செயல்படும் எனவும் கூறப்படுகிறது.

அதேபோல் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வரித்தாக்கலில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதி இது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதுவும் இப்போது வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் போன்ற முக்கிய ஆவணங்களைக் கொண்டு பான் கார்டு பெறலாம். ஆனால் இனி வருமான வரித் துறையின் போர்ட்டல் வழியாக ஆதார் சரிபார்ப்பு மூலமே விண்ணப்பிக்க முடியும்.

மேலும் ஏற்கனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் பான் எண்ணை வரும் டிசம்பர் 31 2025-க்குள் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், ஜனவரி 2026 முதல் அவர்களின் பான் கார்டு செயல்படாது என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த காலக்கெடு ஏற்கனவே பல முறை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த புதிய மாற்றங்கள் நிதிச் சேவைகளில் வெளிப்படைத்தன்மையையும், வேகத்தையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக பான் கார்டைத் தவறாகப் பயன்படுத்துவதும், 2 பான் கார்டு பெறுவதும் மிகப் பெரிய குற்றமாகும். இதற்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். எனவே தெரியாமல் கூட போலி அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருக்காதீர்கள். இப்போது, ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகள் இருந்தால், அதை உடனடியாக சமர்ப்பிப்பு செய்து விடுங்கள்.

மேலும் சமீபத்தில் ஆதார் குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியானது. அதன்படி ஆதார் அட்டையில் பெயர், முகவரி அல்லது பிறந்த தேதி போன்ற மாற்றங்களைச் செய்ய விரும்பினால் அல்லது அப்டேட் செய்ய விரும்பினால் அடுத்த ஆண்டு ஜூன் 14 வரை எந்த கட்டணமும் இல்லாமல் இலவசமாகச் செய்யலாம்

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டையை இலவசமாகப் புதுப்பிப்பதற்கான (அப்டேட் செய்வதற்கான) கடைசி தேதி முன்பு ஜூன் 14, 2025 என்று தெரிவித்தது. ஆனால் தற்போது இந்த காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது. அதாவது இப்போது வெளியாகி உள்ள அறிவிப்பில் ஜூன் 14, 2026 வரை ஆதார் கார்டை இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Aadhaar mandatory to get PAN card from July 1! New rules coming into effect: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X