Home
News

ஜனவரி 12 எல்லாமே மாறுது.. ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய இது கட்டாயம்.. இதோ முழு விவரம்..

ஐஆர்சிடிசிடி இணையதளத்தில் 85 சதவீதம் பேர் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். முறைகேடுகளைத் தடுக்க, ஆதார் அட்டை இணைப்பை ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. அதாவது தற்போது ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளத்தில் காலை 8 மணி முதல் 10 மணி வரை ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய அதார் எண் இணைப்பு கட்டாயம் என்பது அமலில் உள்ளது.

இந்நிலையில் டிசம்பர் 29-ம் தேதி முதல் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், ஜனவரி 5-ம் தேதிக்கு பின்னர் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஆதார் இணைப்பு கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 12 எல்லாமே மாறுது.. ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய இது கட்டாயம்!

ஆனால் வரும் 2026 ஜனவரி 12-ம் தேதிக்குப் பிறகு ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்றால் ஆதார் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாக அறிவித்துள்ளது. குறிப்பாக உண்மையான பயனாளர்களுக்கு, ரயில் டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்ய, ஐஆர்சிடிசி ஐடி உடன் ஆதாரை இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிபந்தனைகள், ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களுக்குப் பொருந்தாது என, ரயில்வே அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜனவரி முதல் ஸ்லீப்பர் கிளாஸ் பயணிகளுக்கு புதிய வசதி
சில வாரங்களக்கு முன்பு வெளியான தகவலின்படி, ரயில் பயணிகளின் வசதிக்காக ஒரு முக்கிய முடிவை இந்திய ரயில்வே எடுத்துள்ளது. அதன்படி ஸ்லீப்பர் கிளாஸ் பயணிகளுக்கும் தலையணை மற்றும் விரிப்பு (போர்வை) வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 2026-ம் ஆண்டின் ஜனவரி 1-ம் தேதி முதல் ஸ்லீப்பர் கிளாஸில் பயணிக்கும் பயணிகளுக்குச் சுத்தமான மற்றும் சுகாதாரமான தலையணை மற்றும் விரிப்புகள் கிடைக்கும். இந்த வசதிக்குப் பயணிகள் தனியாகப் பணம் செலுத்த வேண்டும்.

யாருக்கெல்லாம் தலையணை மற்றும் விரிப்பு தேவையோ, அவர்கள் ரயில்வே ஊழியரிடம் பணம் கொடுத்துப் பெற்றுக்கொள்ளலாம். குறிப்பாக இந்தியாவில் இதுவே முதல் முறையாக ஸ்லீப்பர் கிளாஸிலும் இந்த வசதி அறிமுகப்படுத்துகிறது. தற்போது ஏசி கிளாஸில் மட்டுமே விரிப்பு, தலையணை, போர்வை மற்றும் துண்டு அடங்கிய பெட்-ரோல் கிட் வசதி உள்ளது.

ஏசி கிளாஸ் பயணிகளுக்குத் தலையணை-விரிப்பு வசதிக்கு தனியாகக் கட்டணம் இல்லை. டிக்கெட் விலையிலேயே இது சேர்க்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் வெளியிட்ட தகவலின்படி, ஒரு விரிப்பு, ஒரு தலையணை மற்றும் தலையணை உறைக்கு மொத்தம் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். பின்பு விரிப்பு மட்டும் வேண்டும் என்றால் 20 ரூபாய் செலுத்த வேண்டும். தலையணை மற்றும் தலையணை உறை மட்டும் வேண்டுமென்றால் 30 ரூபாய் செலுத்த வேண்டும்.

இந்த வசதி எல்லா ரயில்களிலும் கிடைக்காது. அதாவது முதலில், தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் 10 ரயில்களில் மட்டுமே இந்த வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. ஒருவேளை இது வெற்றி பெற்றால், மற்ற ரயில்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 12 எல்லாமே மாறுது.. ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய இது கட்டாயம்!

இந்த புதிய வசதி ஸ்லீப்பர் கிளாஸ் பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நீண்ட தூரம் பயணங்களில் தலையணை மற்றும் விரிப்பு கிடைப்பது பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். பின்பு இது ரயில் பயணிகளுக்கான பயண அனுபவத்தையும் மேம்படுத்தும். ஏசி வகுப்பில் மட்டுமே இதுவரை கிடைத்த இந்த வசதி ஸ்லீப்பர் கிளாஸிலும் கிடைப்பது பயணிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக 50 ரூபாய்க்கு விரிப்பு, தலையணை, தலையணை உறை கிடைப்பது ஒரு நல்ல விஷயம் என்கின்றனர் ரயில் பயணிகள். இது பயணிகளுக்கு ஒரு கூடுதல் வசதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் மட்டும் வெற்றி பெற்றால் மேலும் பல ரயில்களில் இந்த வசதி அறிமுகம் செய்யப்படும் என இந்திய ரயில்வே துறை கூறியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Aadhaar mandatory for IRCTC online train ticket bookings from January 12, 2026: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X