Home
News

புது Aadhaar கார்டு ரூல்ஸ்.. ரூ.125 கட்டண விலக்குக்கு 2 அதிரடி மாற்றங்கள்.. இனி இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க!

ஆதார் கார்டில் 5 வயது முதல் 17 வயது வரையில் பயோமெட்ரிக் அப்டேட் செய்தால் ரூ.125 கட்டண விலக்கு இருப்பது தெரியும்... ஆனால், எந்த வயதில் ஆதார் கட்டாய பயோமெட்ரிக்ஸ் அப்டேட் (Aadhaar Mandatory Biometrics Update) செய்ய வேண்டும் என்பது பலருக்கு தெரியாது... 2 முறை அப்டேட் செய்ய வேண்டி இருக்கும் இந்த நடைமுறையை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

யுஐடிஏஐ (UIDAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது 18 வயதுக்கு உட்பட்ட மற்றும் 18 வயதுக்கு மேல் உள்ள ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள், என்று 2 வகைப்படுத்தி வைத்து இருக்கிறது. 18 வயதுக்கு மேல் பயோமெட்ரிக் அப்டேட் பெரிதாக தேவைப்படாது. போட்டோவை மட்டும் விரும்பினால் மாற்றலாம்.

புது Aadhaar கார்டு ரூல்ஸ்.. ரூ.125 கட்டண விலக்குக்கு 2 மாற்றங்கள்!

கைரேகை மற்றும் கருவிழி விவரங்களை அப்டேட் செய்ய வேண்டிய கட்டாயம் கிடையாது. ஆனால், 18 வயதுக்குள் இருப்பவர்கள் ஆதார் கார்டில் கட்டாயமாக 2 முறை பயோமெட்ரிக்ஸ் அப்டேட் செய்திருக்க வேண்டும். இதற்கு கட்டண விலக்கு இருப்பது தெரிந்த விஷயமாக இருக்கிறது. ஆனால், எந்த வயதில் அப்டேட் செய்ய வேண்டும் என்பது பலருக்கு தெரியாத விஷயமாக இருக்கிறது.

இரண்டு முறை அப்டேட் செய்வது கட்டாயமாகும்: முதல் கட்டாய பயோமெட்ரிக்ஸ் அப்டேட் (MBU-1) 5 ஆவது வயதில் செய்து முடிக்க வேண்டும். இரண்டாவது கட்டாய பயோமெட்ரிக்ஸ் அப்டேட் (MBU-2) 15 ஆவது வயதில் செய்து முடிக்கப்பட வேண்டும். இதில் 5 வயதில் முடிக்கவில்லை என்றாலும், 6, 7, 8 உள்ளிட்ட வயதுகளில் செய்து கொள்ளலாம்.

ஆனால், 15 வயது வந்த பிறகு மீண்டும் பயோமெட்ரிக்ஸ் அப்டேட்டை செய்திருக்க வேண்டும். தவறும்பட்சத்தில் 16, 17 வயதிகளிலும் செய்யலாம். ஆதார் கார்டு வாங்குவதற்கு ஆதார் கார்டு எண்ட்ரோல்மெண்ட் விதிகள் (Aadhaar Card Enrolment Rules) இருக்கின்றன. 18 வயதுக்கு கீழ் இருந்தால், குடும்ப உறுப்பினர்களான தாய், தந்தையின் ஆதார் விவரங்களின் அடிப்படையில் எண்ட்ரோல்மெண்ட் செய்து கொள்ளலாம்.

இது புதிய நடைமுறையாக இருக்கிறது. ஏற்கனவே இருக்கும் நடைமுறையில் இருப்பிட சான்றுக்காக பாஸ்போர்ட் (Passport), இருப்பிட சான்றிதழ் (Domicile Certificate), எஸ்டி/எஸ்எடி/ஓபிசி சான்றிதழ், டிசிபிஓ சான்றிதழ், டிரான்ஸ்ஜென்டர் ஐடி கார்டு மற்றும் சட்டப்பூர்வ பாதுகாவலர் ஆவணம் ஏற்று கொள்ளப்படுகிறது. இந்த ஆவணங்கள் முகவரி சான்றுக்கும் பயன்படுத்தலாம்.

உறவுமுறை சான்றுக்கு பாஸ்போர்ட், இருப்பிட சான்றிதழ், டிரான்ஸ்ஜென்டர் ஐடி கார்டு, சட்டப்பூர்வ பாதுகாவலர் ஆவணம், எஸ்டி/எஸ்எடி/ஓபிசி சான்றிதழ் மற்றும் பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை சமர்பிக்கலாம். இது புதிதாக ஆதார் கார்டை வாங்கும்போது மட்டுமே கேட்கப்படும். ஏற்கனவே, ஆதார் வாங்கி இருந்தால், அதை அப்டேட் செய்தால் மட்டும் போதுமானதாக இருக்கும்.

ஆதார் கார்டில் 5 வயது முதல் 17 வயது வரையில் பயோமெட்ரிக் அப்டேட் செய்தால் ரூ.125 கட்டண விலக்கு இருக்கிறது. இதில் கைரேகை (Fingerprint), கருவிழி (Iris) மற்றும் முகத்தின் போட்டோ (Photo) உள்ளிட்ட விவரங்களை அப்டேட் செய்து கொள்ளலாம். இரண்டு முறை பயோமெட்ரிக் அப்டேட் செய்ய வேண்டும் என்பதால், 2 முறையும் இலவமாக செய்து கொள்ளலாம்.

இது பயோமெட்ரிக் விவரங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆகவே, டீமோகிராபிக் அப்டேட்டுக்கு (Demographic Update) வருகிறது. பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி, முகவரி, மொபைல் நம்பர் மற்றும் ஈமெயில் ஆகியவற்றை அப்டேட் செய்ய வேண்டுமானால், ரூ.75 கட்டணம் செலுத்தி மட்டுமே செய்து முடிக்க முடியும். இதில் யாருக்கும் விலக்கு கொடுக்கப்படவில்லை.

Best Mobiles in India

English summary
Aadhaar Mandatory Biometrics Update Twice For Children First Update At Age 5 Second At Age 15
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X