Home
News

புது AADHAAR ரூல்ஸ்.. இனி 5 வயது, 15 வயது.. உடனே இதை பண்ணுங்க.. இப்போ பண்ணிட்டா தப்பிக்கலாம்.. என்ன செய்யனும்?

யுஐடிஏஐ (UIDAI) என்றழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது 5 வயது மற்றும் 15 வயதுடைய குழந்தைகளுக்கான புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. இந்த விதிகளின்படி பெற்றோர்கள் கட்டாயமாக இதை செய்ய வேண்டி இருக்கிறது. இல்லையென்றால், அவர்களுக்கு கட்டணம் விதிக்கப்பட இருக்கிறது. உங்களது வீட்டில் 5 மற்றும் 15 வயது குழந்தைகள் இருந்தால், என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

இந்திய குடிமக்களுக்கு தவிர்க்க முடியாததாக ஆதார் கார்டு (Aadhaar Card) மாறிவிட்டது. 12 இலக்க தனித்துவமான அடையாள எண்ணை கொண்டிருக்கும், இந்த கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற தனிப்பட்ட தகவல்கள் மட்டுமல்லாமல், போட்டோ, கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் விவரங்களும் பதிவு செய்யப்படுகின்றன. இதில் குழந்தைகளுக்கு தனிவிதிகள் இருக்கிறது.

புது AADHAAR ரூல்ஸ்.. இனி 5 வயது, 15 வயது.. உடனே இதை பண்ணுங்க.. இப்போ!

கட்டாய பயோமெட்ரிக் அப்டேட் - எம்பியூ (Mandatory Biometric Update - MBU): இந்த கட்டாய பயோமெட்ரிக் அப்டேட் விதிகள் (Mandatory Biometric Update Rules) ஆனது 5 மற்றும் 15 வயதுள்ள குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும். உங்களது வீட்டில் 5 வயது குழந்தைகள் இருந்தால், அருகில் இருக்கும் ஆதார் சேவை மையத்துக்கு சென்று அவர்களது பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும்.

இதில் போட்டோ (Photo), கைரேகை (Fingerprint) மற்றும் கருவிழி (Iris) விவரங்கள் அடங்கும். அதேபோல 15 வயதுடைய குழந்தைகள் இருந்தாலும், அவர்களது பயோமெட்ரிக் விவரங்களையும் கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும். ஒருவேளை நீங்கள் 5 வயதுக்கு மேல் இருக்கும் குழந்தைகளை வைத்திருந்து, அவர்களுக்கு ஆதார் கார்டு வாங்கவில்லை என்றாலும், இதை செய்ய வேண்டும்.

இப்படி அப்டேட் செய்துவிட்டு, அவர்களுக்கு 15 வயது வந்த பிறகு மீண்டும் பயோமெட்ரிக் அப்டேட் செய்ய வேண்டும். ஆகவே, 10 வயது இடைவெளியில் இந்த கட்டாய பயோமெட்ரிக் அப்டேட் விதிகளுக்கு உட்பட வேண்டி இருக்கிறது. இது 18 வயதுக்கு மேல் இருப்போருக்கு பொருந்தாது. ஆகவே, அவர்களுக்கு பெயர், முகவரி, மொபைல் நம்பர் ஆகியவற்றில் மட்டுமே அப்டேட் கிடைக்கும்.

இதற்கு கட்டணம் இருக்கிறதா? கட்டாய பயோமெட்ரிக் அப்டேட் செய்யும் குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது. ஆகவே, 5 வயதுக்கான பயோமெட்ரிக் அப்டேட்டை 7 வயது வரையில் இலவசமாக செய்து கொள்ளலாம். அதேபோல 15 வயதுக்கான பயோமெட்ரிக் அப்டேட்டை 17 வயது வரையில் இலவசமாக செய்து கொள்ளலாம். இந்த வரம்பை மீறினால், கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

அதாவது, 8 வயதில் பயோமெட்ரிக் அப்டேட் செய்தாலும், 18 வயதில் பயோமெட் அப்டேட் செய்தாலும் அதற்கு கட்டணங்கள் இருக்கும். ஆகவே, கட்டாய பயோமெட்ரிக் அப்டேட் விதிகளுக்கு உட்பட்டு அப்டேட் செய்தால், எந்தவித செலவும் இல்லாமல் வேலையை முடிக்கலாம். இந்த விதிகளையே இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கொண்டு வந்துள்ளது.

Take a Poll

முன்னதாக, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆனது ஆதார் கார்டு மூலம் நடக்கும் வெரிபிகேஷனை டிஜிட்டலாக மாற்றும் முடிவை தெரிவித்தது. பேங்க் அக்கவுண்ட் ஓப்பன், சிம் கார்டு வாங்குதல், ஹோட்டல் புக்கிங், டிக்கெட் புக்கிங் போன்றவற்றின் போது கேட்கப்படும் ஆதார் கார்டு நகலுக்கு பதிலாக டிஜிட்டல் வெரிபிகேஷன் (Digital Verification) வர இருக்கிறது.

இது கியூஆர் (QR) மற்றும் பேஸ் ஐடி ஆதன்டிகேஷன் (Face ID Authentication) மூலம் செய்யப்படுகிறது. ஆகவே, ஆதார் கார்டு நகலில் இருக்கும் கியூஆர் கோட் மட்டுமே போதும். உங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற விவரங்கள் அடங்கிய மொத்த நகலை யாருக்கும் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது. இதற்காக பிரத்யேக ஆப் கொண்டுவரப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Aadhaar Mandatory Biometric Update Rules 15 Years Old Children Must Update Photo Fingerprint Iris
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X