Home
News

Aadhaar-ல் புதிய கட்டாய திருத்தம்.. இலவச தேதி குறித்த UIDAI.. அதற்குள் செய்ய உத்தரவு.. அதன் பின் கட்டணம்!

யுஐடிஏஐ (UIDAI) என்கிற இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது ஆதார் அட்டையில் கட்டாய திருத்தம் (Aadhaar Card Mandatory Update) தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதென்ன அறிவிப்பு? என்ன செய்ய வேண்டும்? எந்த தேதிக்குள் செய்ய வேண்டும்? இந்த அப்டேட் செய்ய எவ்வளவு கட்டணம்?

யுஐடிஏஐ ஆனது 5 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பை (Mandatory Biometric Update - MBU) மேற்கொள்ளுமாறு பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களை வலியுறுத்தியுள்ளது. இந்த கட்டாய புதுப்பிப்பு ஆனது குழந்தையின் ஆதார் விவரங்கள் துல்லியமாக இருப்பதை உறுதி செய்வதோடு, பல்வேறு சேவைகளில் அடையாளத்தை சரிபார்க்க, ஆதார் அட்டையை தடையின்றி பயன்படுத்தவும் உதவுகிறது.

Aadhaar-ல் புதிய கட்டாய திருத்தம்.. இலவச தேதி குறித்த UIDAI!

இதில் நல்ல விஷயம் என்னவென்றால், 5 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கான இந்த கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு சேவை ஆனது வருகிற 2026 செப்டம்பர் 30, 2026 வரை இலவசமாக வழங்கப்படுகிறது. இதையே நாம் கெடு நாள் ஆகவும் எடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால் செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பின்னர் இந்த சேவைக்கு கட்டணம் வசூலிக்கப்படலாம்.

கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு என்றால் என்ன? குழந்தைகள் வளரும்போது, ​​அவர்களின் கைரேகைகள், கண் கருவிழி மற்றும் முகத் தோற்றங்கள் மாறுகின்றன. ஆதார் பதிவுகளை துல்லியமாக வைத்திருக்க, குறிப்பிட்ட வயது நிலைகளில் பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என்று யுஐடிஏஐ அறிவுறுத்துகிறது.

இந்தக் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு மூலம் சமீபத்திய பயோமெட்ரிக் தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன; இதன் மூலம் ஆதார் ஒரு நம்பகமான அடையாள சான்றாகத் தொடர்ந்து செயல்படுவது உறுதி செய்யப்படுகிறது. பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிப்பது, குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினர் பின்வரும் சூழல்களில் தங்கள் அடையாளத்தை சரிபார்ப்பதை எளிதாக்குகிறது:

- பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் சேருதல்
- போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல்
- அரசு நலத்திட்டங்களை பெறுதல்
- கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்தல்
- பயிற்சித் திட்டங்கள் (Internships) மற்றும் ஆய்வு உதவித்தொகை திட்டங்களில் (Fellowship programmes) பங்கேற்றல்
- ஆதார் அடிப்படையிலான அடையாளச் சரிபார்ப்பு தேவைப்படும் பிற சேவைகள்

யாருக்கு இந்த அப்டேட் தேவை? 5 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. பிற்காலத்தில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க, முக்கியமான கட்டணம் செலுத்தி இத்தி செய்ய வேண்டிய சூழ்நிலை வரும் முன்னர், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்த புதுப்பித்தலை மேற்கொள்ளுமாறு பெற்றோர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதை எவ்வாறு மேற்கொள்வது? பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் தங்கள் குழந்தையுடன் அருகிலுள்ள ஆதார் சேவை மையம் (Aadhaar Seva Kendra) அல்லது ஆதார் பதிவு மையத்திற்கு சென்று பயோமெட்ரிக் புதுப்பித்தலை மேற்கொள்ளலாம். இச்செயல்முறையில் குழந்தையின் கைரேகைகள், கண் கருவிழிப் படலம் மற்றும் புகைப்படம் ஆகியவை பதிவு செய்யப்படும்.

செப்டம்பர் 30, 2026 வரை இலவசம்: 5 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் சேவை செப்டம்பர் 30, 2026 வரை இலவசமாக இருக்கும் என்று யுஐடிஏஐ அறிவித்துள்ளது. இக்காலகட்டத்திற்குள் புதுப்பித்தலை மேற்கொள்வது, குடும்பங்கள் எதிர்கால சிக்கல்களைத் தவிர்க்கவும், கல்வி மற்றும் அரசு சார்ந்த சேவைகளுக்கு ஆதாரை எவ்விதத் தடையுமின்றிப் பயன்படுத்தவும் உதவும்.

புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டையானது, குழந்தைகள் வளரும்போது அவர்களின் அடையாளத்தை சரிபார்ப்பதை எளிதாக்குகிறது. செப்டம்பர் 30, 2026 வரை இச்சேவை இலவசமாக வழங்கப்படுவதால், தங்கள் குழந்தையின் ஆதார் விவரங்களை புதுப்பித்த நிலையில் வைத்திருக்க, பெற்றோர்கள் இந்த கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தலை விரைவில் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Best Mobiles in India

English summary
Aadhaar Mandatory Biometric Update for children between ages 5 and 17 Free Till September 30 UIDAI
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X