Home
News

இனி ரூ.125 கட்டண விலக்கு.. ஆதார் கார்டு வைத்து இருக்கும் 17 வயதினருக்கு போட்டோ, கைரேகை அப்டேட்.. என்ன செய்வது?

யுஐடிஏஐ (UIDAI) என்றழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது 5 வயது முதல் 17 வயதுடைய குழந்தைகளுக்கான கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பை அமல்படுத்தி இருக்கிறது. இந்த ஆதார் கார்டுகளுக்கு ரூ.125 கட்டண விலக்குள்ளது. இப்போது, என்ன புதுப்பிப்பு செய்ய வேண்டும்.

பிறந்த குழந்தை முதல் ஆதார் கார்டை (Aadhaar Card) பெற்று கொள்ள முடியம். இருப்பினும், 5 வயது முதல் ஆதார் கார்டுகள் பெறப்பட்டு வருகின்றன. மத்திய, மாநில அரசுகளில் திட்டங்களை பெறுவது முதல் பள்ளி, கல்லூரிகளில் சேருவது வரையில் ஆதார் கார்டு தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. ஏனென்றால், அடையாள சான்றாக மட்டும் இருக்கவில்லை.

இனி ரூ.125 கட்டண விலக்கு.. ஆதார் கார்டு வைத்து இருக்கும் 17 வயதினர்!

பெயர், வயது, முகவரி, மொபைல் நம்பர், இமெயில் விவரங்கள் மட்டுமல்லாமல், கைரேகை (Fingerprint), கருவிழி (Iris) மற்றும் முகத்தின் போட்டோ (Photo) உள்ளிட்ட விவரங்களும் இதில் அடங்கி இருக்கிறது. இதில் கைரேகை பதிவு, கருவிழி பதிவு மற்றும் முகத்தின் போட்டோ 5 வயதில் இருந்து 17 வயது வரையில் புதுப்பிப்பு செய்ய வேண்டியதாக இருக்கிறது.

இது பயோமெட்ரிக் புதுப்பிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு, ரூ.125 கட்டணம் விதிக்கப்பட்டது. ஆனால், 5 வயது முதல் 17 வயதுடைய குழந்தைகளுக்கு கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு (Mandatory Biometric Update) அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, இந்த வயதுடைய குழந்தைகளுக்கு ரூ.125 கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இலவமாக புதுப்பிப்பு செய்து கொள்ளலாம்.

கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பை ஆதார் சென்டர்களில் (Aadhaar Center) மட்டுமே செய்ய முடியும். ஆகவே, 5 வயது முதல் 17 வயதுடைய குழந்தைகளுக்கு இந்த பயோமெட்ரிக் புதுப்பிப்பை செய்ய வேண்டும். இந்த ரூ.125 கட்டண விலக்கை செப்டம்பர் 30ஆம் தேதி வரையில் மட்டுமே பெற்று கொள்ள முடியும். இந்த தேதிக்கு பிறகு கட்டணம் இருக்க வாய்ப்புள்ளது.

17 வயதுக்கு மேல் இருக்கும் நபர்கள் பயோமெட்ரிக் புதுப்பிப்பை செய்தால் ரூ.125 கட்டணம் செலுத்த வேண்டும். அதேபோல பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி, முகவரி, மொபைல் நம்பர் மற்றும் ஈமெயில் முகவரியை மாற்ற வேண்டுமானால், ரூ.75 கட்டணம் செலுத்த வேண்டும். இது டீமோகிராபிக் புதுப்பிப்பில் (Demographic Update) வருகிறது.

இந்த புதுப்பு கட்டணம் 5 முதல் 17 வயது வரையில் மட்டுமல்லாமல், 17 வயதுக்கு மேல் இருக்கும் நபர்களுக்கும் பொருந்தும். இதில் யாருக்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆனது விலக்கு கொடுக்கவில்லை. ஆனால், ஆவணங்கள் புதுப்பிப்பில் (Document Update) விலக்கு இருக்கிறது. அதாவது, பெயர், பாலினம், பிறந்த தேதி மற்றும் முகவரிக்கு ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.

இதற்கு ரூ.75 கட்டணமாக இருக்கிறது. ஆனால், இந்த கட்டணத்தில் இப்போது விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, 5 முதல் 17 வயது வரையில் மட்டுமல்லாமல், 17 வயதுக்கு மேல் இருக்கும் நபர்கள், பெயர், பாலினம், பிறந்த தேதி மற்றும் முகவரிக்கான ஆவணங்களை இலவமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இதற்கு ஆதார் சென்டர்களுக்கு செல்ல வேண்டியது கிடையாது.

ஆதார் மொபைல் ஆப் அல்லது ஆதார் போர்டல் வழியாகவே செய்து கொள்ளலாம். மேலும், ஆதார் ஆப் வழியாக மொபைல் நம்பர், முகவரி உள்ளிட்ட குறிப்பிட்ட விவரங்களை மாற்றி கொள்ள அனுமதி கொடுக்கப்படுகிறது. ஆனால், இதற்கான சான்றிதழ்களை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கு ரூ.75 கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கும்.

Best Mobiles in India

English summary
Aadhaar Mandatory Biometric Update for children aged 5 to 17 is free until September 30 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X