புது ரூல்.. Aadhaar இல் இதை கட்டாயம் செய்யணும்.. இல்லனா சலுகை, ஊக்கத்தொகை கட்.. 2026 மார்ச் 1 வரை கெடு!
ஆதார் எம்பியு (Aadhaar MBU) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆதார் கட்டாய பயோமெட்ரிக் அப்டேட் (Aadhaar Mandatory Biometric Update) தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான காலக்கெடு வருகிற 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மார்ச் 2026 க்குள் யார் என்ன செய்ய வேண்டும்? 5 மற்றும் 15 வயதுடைய குழந்தைகளுக்கு ஆதார் கட்டாய பயோமெட்ரிக் அப்டேட் செய்து முடிக்க வேண்டும். இதை பள்ளிகள் செய்து முடிக்க வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள் இதை செய்து முடிக்க - மார்ச் 2026-ஐ கடைசி நாளாக பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை (Department of School Education and Literacy) நிர்ணயம் செய்துள்ளது.

மாநில மற்றும் மத்திய அரசின் உதவித்தொகைகள் உட்பட பல்வேறு சலுகைகளை பெறுவதற்கும், மதிய உணவு மற்றும் க்ஷீர பாக்யா, இலவச முட்டை மற்றும் வாழைப்பழங்கள் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கும் ஆதார் அப்டேட் கட்டாயமாக இருப்பதால், ஆதார் எம்.பி.யு-வை வலியுறுத்தும் ஒரு சுற்றறிக்கையை பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை வெளியிட்டது.
அதில் 5 மற்றும் 15 வயதுடைய அனைத்து குழந்தைகளின் ஆதார் அட்டைகளையும், முகாம்கள் நடத்தி புதுப்பிக்குமாறு பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. யுஐடிஏஐ (UIDAI) என்கிற இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India ) விளக்த்தின்படி, பயோமெட்ரிக்கின் நம்பகத்தன்மையைப் பராமரிக்க, கருவிழி மற்றும் கைரேகையில் ஏற்பட்ட மாற்றங்களை கருத்தில் கொண்டு, குழந்தைகளுக்கான இந்த அப்டேட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது
அனைத்து பள்ளிகளும் மார்ச் 1, 2026 க்குள் இந்த செயல்முறையை முடிக்க வேண்டும் என்று சுற்றறிக்கை கூறுகிறது. மாணவர்களின் ஆதாரை மாணவர் சாதனை கண்காணிப்பு அமைப்பு (Student Achievement Tracking System - UDISE) மூலம் புதுப்பிப்பதை துறை ஏற்கனவே கட்டாயமாக்கியுள்ளது, ஆனால் பலமுறை நினைவூட்டல்கள் இருந்தபோதிலும் அதுவும் முடிக்கப்படவில்லை.
ஆதார் எம்பியு தாமதமானால், மாணவர்கள் மாநில மற்றும் மத்திய அரசு வழங்கும் எந்த உதவித்தொகைக்கும் விண்ணப்பிக்க முடியாது என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த பணியை முடிக்கும் பொறுப்பு பொதுக்கல்வி ஆணையர்கள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகளின் தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, மேலும் சமீபத்திய அப்டேட்களை பெற வாராந்திர முன்னேற்ற மதிப்பாய்வு கூட்டங்களை நடத்துமாறு அவர்கள் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.
ஏன் இந்த செயல்முறை? ஒரு குழந்தை 5 மற்றும் 15 வயதை அடையும் போது, கருவிழி, புகைப்படம் மற்றும் கைரேகை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் புதுப்பிக்கப்படும். இதை தொடர்ந்து, யுஐடிஏஐ ஆனது குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட அசல் ஆதார் எண்ணை தக்க வைத்து கொண்டு விவரங்களை மட்டும் புதுப்பிக்கும். இந்த செயல்முறை - முதல் ஆதார் எம்பியு என்றும் இரண்டாவது ஆதார் எம்பியு என்றும் அழைக்கப்படுகிறது.
ஆதாரில் ஆப்லைன் வசதியும் வருகிறது: டெஸ்டிங்கில் உள்ள ஒரு புதிய ஆதார் ஆப் (New Aadhaar App) ஆனது இந்திய குடிமக்களுக்கான மிகவும் முக்கியமான 12 இலக்க அடையாளங்காட்டி ஆக செயல்படும் ஆதார் கார்டுக்கு (Aadhaar Card) ஒரு புதிய ஆப்லைன் (Offline) வசதியை கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த புதிய ஆப் ஆனது - பயனர்கள் ஹோட்டல்கள் போன்ற பொது இடங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டிய ஆதார் கார்டு தொடர்பான தரவுகளின் அளவை குறைக்கும் மற்றும் தேவைப்படும்போது தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்களை மட்டுமே பகிர உதவும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன புவனேஷ் குமார் தி இந்துவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்
ஆதார் ஆப்பில் உள்ள ஒரு அடர்த்தியான க்யூஆர் கோட்-ஐ காட்டி "இதுதான் நாங்கள் ஆதார் ஆக வேண்டும் என்று விரும்புகிறோம் என்றும் புவனேஷ் குமார் கூறினார். கூடுதல் அம்சங்களை இணைத்து, இந்த புதிய ஆப் பொது சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு, முறையாக அறிமுகம் செய்யப்பட்டு விளம்பரப்படுத்தப்படும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.


Click it and Unblock the Notifications








