Home
News

புது ரூல்ஸ்.. 2025-ல் அமல்.. தேர்வு எழுத Aadhaar அடிப்படையிலான ரிஜிஸ்ட்ரேஷன் கட்டாயம்.. கடுப்பான கர்நாடக அரசு!

கர்நாடக தேர்வுகள் ஆணையம் (Karnataka Examinations Authority) ஆனது, அடுத்த ஆண்டு முதல் ப்ரொபெஷனல் கோர்ஸ் சீட்களுக்கான (Professional course seats) தேர்வுகளில் கலந்துகொள்ளவும் மாணவர்ளுக்கு ஆதார்-லிங்க்டு ரிஜிஸ்ட்ரேஷனை (Aadhaar-linked registration) அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. சீட் பிளாக்கிங் (Seat blocking) தொடர்பான அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தின் கீழ், இந்த புதிய செயல்முறை கொண்டு வரப்படவுள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் கர்நாடக தேர்வுகள் ஆணையமானது (KEA) இது குறித்த திட்டத்தை கர்நாடக இ-கவர்னன்ஸ் துறையிடம் (Karnataka e-Governance department) சமர்ப்பித்தும் உள்ளது. இதுகுறித்து பேசிய கேஇஏ நிர்வாக இயக்குனர் ஆனஎச் பிரசன்னா, இ-கவர்னன்ஸ் துறை எங்கள் முன்மொழிவுக்கு ஆதரவாக உள்ளது, மேலும் அவர்கள் இந்திய அரசின் ஒப்புதலுக்காக ஒரு முன்மொழிவை அனுப்பியுள்ளனர். அந்த ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

தேர்வு எழுத Aadhaar அடிப்படையிலான ரிஜிஸ்ட்ரேஷன் கட்டாயம்!

மேலும் இந்த அங்கீகாரத்தை உறுதி செய்வதன் வழியாக ஏற்படும் நன்மைகள் குறித்தும் அவர் பேசினார். அவருடைய கூற்றுப்படி, ஆதார்-லிங்க்டு ரிஜிஸ்ட்ரேஷன் ஆனது ரிஜிஸ்ட்ரேஷனில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்க முடியும். மேலும் தேர்வு தொடர்பான தகவல்களை மாணவர்களின் மொபைல் போன்களின் வழியாக பரப்புவது உறுதி செய்ய முடியும் என்று அவர் கூறி உள்ளார்.

இதுதவித்து ஆள்மாறாட்டம் மற்றும் பிற முறைகேடுகளைத் தடுக்க, பல்வேறு துறைகளுக்காக கேஇஏ நடத்தும் ஆட்சேர்ப்பு தேர்வுகளுக்கு ஆதார் இணைக்கப்பட்ட பதிவை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிரசன்னா தெரிவித்துள்ளார். கர்நாடக பொது நுழைவுத் தேர்வு (KCET) ஒதுக்கீட்டின் கீழ், பொறியியல் இட ஒதுக்கீட்டின் அனைத்து சுற்றுகளும் முடிந்த பிறகு, சீட்-பிளாக்கிங் மோசடி வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து, கேஇஏ இந்த நடவடிக்கையை கொண்டு வந்துள்ளது.

பல மாணவர்கள் ஒரே ஐபி முகவரியை பயன்படுத்தி இருக்கைகளை பிளாக் செய்திருப்பதும், அவர்கள் கேஇஏ-க்கு வழங்கிய மொபைல் எண்கள் மற்றும் மின்னஞ்சல் ஐடிகள் போலியானவை அல்லது தவறானவை என்பதும் கண்டறியப்பட்டது. இதில் கல்லூரி நிர்வாகங்களுடனும், சில சமயங்களில் மாணவர்களுடனும் மூன்றாம் தரப்பினர் உடந்தையாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

சமீபத்தில் உச்சநீதி மன்ற நீதிபதிகள் ஆன சஞ்சய் கரோல் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வானது, ஆதார் தொடர்பான பரபரப்பு உத்தரவு ஒன்றை வழங்கி இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. சிறார் நீதி சட்டம் (அதாவது குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம்), 2015 இன் பிரிவு 94 இன் கீழ், பள்ளி விடுப்பு சான்றிதழில் (School leaving certificate) குறிப்பிடப்பட்டுள்ள பிறந்த தேதியில் (Date of birth) இருந்தே இறந்தவரின் வயதை தீர்மானிக்க வேண்டும் என்று அவர்கள் உத்தரவு விட்டு இருந்தனர்.

சாலை விபத்தில் உயிரிழந்த ஒருவரின் வயதை நிர்ணயம் செய்ய, அவருடைய ஆதார் அட்டையை ஏற்றுக்கொண்ட பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யும் வண்ணம் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை விடுத்துள்ளது, கடந்த 2015 ஆம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்த நபரின் உறவினர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது.

ரோஹ்தக்கில் உள்ள எம்ஏசிடி (MACT - Motor Accident Claims Tribunal) ஆனது இழப்பீட்டுத் தொகையை நிர்ணயிக்கும் போது, இறந்தவரின் வயதை அவரது ஆதார் அட்டையை வைத்து தவறாக குறிப்பிட்டுள்ளது. இதன் விளைவாக இறந்தவருக்கான இழப்பீட்டு தொகையானது ரூ.19.35 லட்சத்தில் இருந்து ரூ.9.22 லட்சமாக குறைந்துள்ளது. ஆனால் அவரது பள்ளி விடுப்புச் சான்றிதழின்படி கணக்கிடப்பட்டால், இறப்பின் போது அவருடைய வயது 45 ஆக இருந்தது.

ஆதார் அட்டையின் அடிப்படையில் இறந்தவரின் வயதை நிர்ணயிப்பதில் தவறு செய்ததாக குடும்பத்தினர் உயர் நீதிமன்றத்தில் வாதிட்டனர். உயர் நீதிமன்றமும் இறந்தவரின் ஆதார் அட்டையை நம்பி அவரது வயதை 47 ஆக கணக்கிட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த வழக்கிற்கான மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது. அதில் ​​மேல்முறையீடு செய்தவர்களின் வாதத்தை ஏற்று, வயதை நிர்ணயம் செய்யும் போது இறந்தவரின் பள்ளி விடுப்பு சான்றிதழின் அடிப்படையில் தான் இறந்தவரின் வயது கணக்கிடப்பட வேண்டும். ஆதார் அட்டையை வைத்து ஒருவருடைய பிறந்த தேதி / வயதை கணக்கிட கூடாது; ஆதார் அட்டை அதற்கான ஆவணம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Aadhaar Linked Registration For All Exams New Proposal From Karnataka Examination Authority Why
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X