மக்களே தயாராகுங்கள்: விரைவில் தொடங்கும் Aadhaar Voter id இணைப்பு திட்டம்!

|

வருமான வரி சட்டப்பிரிவு 139 AA (2)-யின் அடிப்படையில் ஜூலை 1, 2017 அன்று முதல் 10 இலக்க எண் கொண்ட பான் எண் வைத்திருப்போர் நிச்சயமாக ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது அவசியம் என வருமான வரித்துறை அறிவித்தது.

பான் ஆதார் அட்டை இணைப்பு

பான் ஆதார் அட்டை இணைப்பு

பல்வேறு கால அவகாசத்திற்கு பிறகு இறுதியாக ஆதாருடன், பான் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்கம்டேக்ஸ் இந்தியா பைலிங் என்ற இணையதளத்திற்கு சென்று அல்லது புதிவு செய்யப்பட்ட மொபைல் போனில் இருந்து 567678 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலமும் இணைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி வாக்காளர்களை கண்டறிய முடிவு

போலி வாக்காளர்களை கண்டறிய முடிவு

போலி வாக்காளர்களை தடுக்கும் நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையில் ஒரு அங்கமாக வாக்காளர் அட்டைகளுடன் ஆதார் எண்களை இணைக்க அதிகாரம் வழங்க வலியுறுத்தி மத்திய சட்ட அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் கடிதம் எழுதி இருந்தது.

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படாது

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படாது

அந்த கடிதத்தில் குறிப்பாக ஆதார் எண்களை தர இயலவில்லை என்றாலும் கூட வாக்காளர் பட்டியலில் இருந்த பெயர் நீக்கப்படாது எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கிடையில் வாக்காளர் அட்டைகளை ஆதார் எண்களுடன் இணைக்கும் போது எந்த மாதிரியான பாதுகாப்பு அம்சங்கள் கடைபிடிக்கப்படும் என தேர்தல் ஆணையத்தை சட்ட அமைச்சகம் கேட்டுக் கொண்டது.

Jio-வில் இனி அந்த திட்டம் கிடையாது: அதிரடி அறவிப்பு-ஷாக் ஆகாதிங்க.,இதோ அட்டகாச புது திட்டம் அறிமுகம்Jio-வில் இனி அந்த திட்டம் கிடையாது: அதிரடி அறவிப்பு-ஷாக் ஆகாதிங்க.,இதோ அட்டகாச புது திட்டம் அறிமுகம்

தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகள்

தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகள்

போலி வாக்காளர்களை நீக்குவதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறுது. அதன் ஒரு கட்டமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தகுந்த வாக்காளர்களை எளிதாக அடையாளம் காணும் வகையில் இந்த நடவடிக்கை சட்ட அமைச்சகத்துடன் இணைந்து எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த ஆலோசனை

தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த ஆலோசனை

மேலும் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் தங்கள் தொகுதியில் பதிவு செய்திருந்தால் மட்டும் வாக்களிக்க முடியும். ஆதாருடன் இணைக்கப்பட்டால் அவர்களுக்கு இந்த முறையானது வாக்களிக்கும் வாய்ப்பை தரும். தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த ஆலோசனையை தேர்தல் ஆணையம் சட்ட அமைச்சகத்திடம் மேற்கொண்டது. அதில் தான்இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை நிறைவேற்ற வலியுறுத்தல்

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை நிறைவேற்ற வலியுறுத்தல்

2004-05 ஆண்டுகளில் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்த சீர்திருத்தங்களை அமல்படுத்தும் படி தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து சட்ட செயலாளர் கூறுகையில், தேர்தல் ஆணையத்தின் சீர்திருத்த நடவடிக்கைகளில் 40 சீர்திருத்தங்கள் பரிசீலினையில் இருப்பதாக தெரிவித்தார்.

அரசு சாதகமாக பதிலை அளிக்கும்

அரசு சாதகமாக பதிலை அளிக்கும்

இதன் மூலம்புகைப்பட தேர்தல் ஆணைய அட்டையுடன் 12 எண் கொண்ட ஆதாரை இணைப்பதற்கு அரசு சாதகமான பதிலை தந்துள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தட்கல் டிக்கெட்: இப்படி கூட மோசடி நடக்குமா? இனிமேல் தட்கல் டிக்கெட்: இப்படி கூட மோசடி நடக்குமா? இனிமேல் "அந்த" பிரச்சனை இருக்காது!

விரைவில் பணி தொடங்க வாய்ப்பு

விரைவில் பணி தொடங்க வாய்ப்பு

மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து அடுத்தக்கட்டமாக வாக்காளர்கள் விரைவில் தங்களது வாக்காளர் அட்டைகளை ஆதார் எண்களுடன் இணைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய தேர்தல் ஆணையம் முன்னதாகவே 38 கோடி வாக்காளர் அட்டைகளை ஆதார் உடன் இணைத்துள்ளது. தற்போது கூடுதல் பணியை விரைவாக தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
aadhaar link with voter id law ministry approves

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X