பழைய ஆதார் கார்டு செல்லுமா.. இனி எது செல்லும்.. ஆதார் வைத்து இருப்பவர்களுக்கு புது ரூல்ஸ்.. 4 முக்கிய வடிவம்!
ஆரம்பத்தில் ஆதார் லெட்டர் மற்றும் ஆதார் கார்டு இருந்தது, பிறகு இ-ஆதார், பிவிசி ஆதார் மற்றும் ஆதார் ஆப் ஆகியவை படிப்படியாக வந்துவிட்டன. இதில் எது அடையாள சான்றுக்கு பயன்படுத்த செல்லுபடியாகும் என்பதை யுஐடிஏஐ (UIDAI) என்கிற இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது உறுதி செய்துள்ளது.
அடையாள சான்றுக்கு ஆதார் கார்டு தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் செய்வது முதல் சிம் கார்டு வாங்குவது வரையில் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக மத்திய, மாநில அரசுகளின் சலுகைகளை பெறுவதற்கும் ஆதார் கார்டு முக்கிய ஆவணமாக மாறிவிட்டது. இப்படி பல்வேறு முறைகளில் அடையாள சான்றுக்கு தேவைப்படுகிறது.

ஆனால், ஆதார் கார்டு கொடுக்கப்பட்ட காலத்தில் ஆதார் லெட்டர் (Aadhaar Letter) ஆவணத்தை அனைவரும் பயன்படுத்தினர். அதாவது, முழு ஆதார் ஆவணம் இது கீழே இருக்கும் ஆதார் கார்டை வெட்டி எடுக்காமல், அப்படியே பயன்படுத்தப்பட்டது. பிறகு வெட்டி எடுக்கப்பட்ட ஆதார் கார்டு வந்தது. இதையடுத்து ஈ-ஆதார் (e-Aadhaar) வந்தது.
இவை அடையாள சான்றுக்கு பயன்படுத்தப்பட்டன. பிறகு பிவிசி ஆதார் (PVC Aadhaar) வந்தது. இந்த ஆவணமும் அடையாள சான்றுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இறுதியாக ஆதார் ஆப் (Aadhaar App) வழியாக கியூஆர் ஸ்கேனிங் (QR Scanning) முறை வந்துவிட்டது. இப்போது, எதை அடையாள சான்றுக்கு பயன்படுத்தலாம் என்ற குழப்பம் ஆதார் வைத்திருப்பவர்களிடையே ஏற்பட்டுள்ளது.
இதை தவிர்க்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆனது முக்கிய விளக்கத்தை கொடுத்துள்ளது. அதாவது, ஆதார் லெட்டர், ஆதார் கார்டு, இ-ஆதார், பிவிசி ஆதார் மற்றும் ஆதார் ஆப் வழியாக பகிரப்படும் கியூஆர் கோட் என்று எந்த வகையாக இருந்தாலும், அடையாள சான்றுக்கு ஏற்று கொள்ளப்படும் என்று தெரிவித்து இருக்கிறது.
மேலும், பாதுகாப்பான அடையாள சான்று சரிபார்ப்புக்காக கியூஆர் ஸ்கேனிங் முறையை பின்பற்றவும் அறிவுறுத்தி இருக்கிறது. ஆகவே, ஆதார் எண்ணை வைத்து சரிபார்ப்பு செய்யும் எந்த வகை நிறுவனங்களாக இருந்தாலும், துறைகளாக இருந்தாலும் அனைத்து வகையான ஆதார் வடிவத்தையும் ஏற்று கொள்ள வேண்டும். இதில் ஆதார் கியூஆர் ஸ்கேனிங் மிகவும் பாதுகாப்பானது.
ஆகவே, தேவைப்படும்பட்சத்தில் அதற்கு முன்னுரிமை அளிக்கலாம் என்பதையும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆனது தெரிவித்து இருக்கிறது. இதற்கு முன்னதாக ஆதார் கார்டில் இ-மெயில் அப்டேட் செய்ய வசூலிக்கப்பட்டு வந்த ரூ.75 தொகையை ரத்து செய்தது. ஆனால், இதற்கு காலஅவகாசம் கொடுத்தது. அதேபோல மொபைலில் மட்டுமே இதை செய்ய முடியும்.
அதாவது, ஆதார் சேவைகளை எளிதாக்கும் நோக்கில் ஆதார் ஆப் கொண்டுவரப்பட்டது. ஏற்கனவே, இருந்த எம்ஆதார் ஆப் சேவை நிறுத்தப்பட்டு, இந்த ஒரேவொரு ஆதார் ஆப்பில் சேவைகள் ஒருகிணைக்கப்பட்டன. இதை ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் உடனடியாக பயன்படுத்த, ஆதார் சென்டரில் மட்டுமே செய்யப்பட்டுவந்த மொபைல் நம்பர் அப்டேட் இதில் கிடைத்தது.
இப்போது, இ-மெயில் அப்டேட்டும் சேர்க்கப்பட்டது. ஆனால், மொபைல் நம்பர் அப்டேட் செய்ய ரூ.75 கட்டணம் செலுத்த வேண்டும். அதுவே இ-மெயில் அப்டேட் செய்ய வேண்டுமானால், எந்தவித கட்டணமும் கிடையாது. இருப்பினும், டிசம்பர் 31ஆம் தேதி வரையில் மட்டுமே இப்படி இலவசமாக இ-மெயில் ஐடியை அப்டேட் செய்ய முடியும்.
பிறகு கட்டணம் செலுத்தி அப்டேட் செய்ய வேண்டும். இப்போதும், ஆதார் சென்டருக்கு சென்று இ-மெயில் அப்டேட் செய்தால் கட்டணம் இருக்கும். ஆகவே, ஆதார் ஆப்பில் மட்டுமே செய்யப்படும், இ-மெயில் ஐடி அப்டேட்டுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது. இது புதிதாக இ-மெயில் சேர்ப்பவருக்கும், ஏற்கனவே இருக்கும் இ-மெயில் ஐடியை மாற்ற விரும்புவோருக்கும் பொருந்தும்.


Click it and Unblock the Notifications