எந்த ஆவணமும் இல்லாமல் ஆதாரில் மொபைல் எண்ணை எப்படி மாற்றுவது? ஈஸி வழி இதுதான்..

|

ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான கட்டாய அடையாள ஆவணமாக இருக்கிறது, புதிய சிம் கார்டு வாங்குவதிலிருந்து வங்கியில் கடன் பெறுவது வரை அனைத்து சேவைக்கும் உங்களுடைய ஆதார் அடையாள அட்டை என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இப்படி அனைத்து சேவைக்கும் தேவைப்படும் ஆதார் அட்டையில் உங்களின் சரியான மொபைல் எண் இருப்பது மிகவும் முக்கியமானது. சரியான மொபைல் எண் இல்லை என்றால் வரும்காலத்தில் உங்களுக்குச் சிக்கல் தான்.

ஆதார் அட்டையில் தகவலை புதுப்பிக்க வேண்டுமா?

ஆதார் அட்டையில் தகவலை புதுப்பிக்க வேண்டுமா?

UIDAI ஆதார் தற்பொழுது சில விதிகளை திருத்தம் செய்துள்ளது, குறிப்பாக ஆதார் பயனர்களின் அட்டையில் உள்ள மாற்றங்களை மாற்றியமைத்து, தகவலை புதுப்பித்துக்கொள்ள ஆதார் ஆணையம் இப்பொழுது அனுமதிக்கிறது. ஆதார் அட்டையில் உள்ள உங்கள் தகவலை புதுப்பிக்க வேண்டும் என்றால் சில விதிமுறைகளை நீங்கள் பின்பற்றியாக வேண்டும் என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். இதற்காக ஆதார் சேவை மையம் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது.

ஆதாரில் மொபைல் எண் சரியாக இருக்கிறதா?

ஆதாரில் மொபைல் எண் சரியாக இருக்கிறதா?

ஆதார் அட்டையில் பயனர்கள் அடிக்கடி மாற்றம் செய்ய நேரிடும் தகவல் மொபைல் எண் மற்றும் விலாசம் தான், சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கு விலாசம் பற்றிய கவலை இருக்காது. ஆனால், மொபைல் எண் என்பது சிலரின் வாழ்க்கையில் சில வருடங்களுக்கு ஒரு முறை மாறிக்கொண்டே தான் இருக்கும். இதனால் எப்பொழுதும் உங்கள் ஆதார் அட்டையில் மொபைல் எண்கள் சரியான அப்டேட்டில் இருப்பது மிகவும் நல்லது.

இனி LPG சிலிண்டர் வாங்க இது கட்டாயம்.. நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய முறை.!இனி LPG சிலிண்டர் வாங்க இது கட்டாயம்.. நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய முறை.!

சரியான மொபைல் எண் இல்லையென்றால் பல சேவைகளைப் பயன்படுத்த முடியாது

சரியான மொபைல் எண் இல்லையென்றால் பல சேவைகளைப் பயன்படுத்த முடியாது

உங்களுடைய ஆதார் அட்டையில் உங்களின் மொபைல் எண் புதுப்பிக்கப்படாவிட்டால், நீங்கள் பல சேவைகளைப் பயன்படுத்த முடியாது என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். இப்போது உங்களுக்கு மொபைல் எண்ணின் முக்கியத்துவம் தெரியாமல் இருக்கலாம், ஆனால் கண்டிப்பா ஒரு சூழ்நிலையில் இதன் முக்கியத்துவம் புரியவரும். அதனால், உடனடியாக உங்கள் மொபைல் எண்ணை உங்கள் ஆதார் அட்டையில் புதுப்பிக்க நடவடிக்கை எடுங்கள்.

எந்த ஆவணமும் இல்லாமல் புதுப்பிக்கலாம்

எந்த ஆவணமும் இல்லாமல் புதுப்பிக்கலாம்

ஆதார் அட்டையில் உள்ள பழைய மொபைல் எண்ணை நீக்கிவிட்டு, புதிய மொபைல் எண்ணை மாற்றம் செய்துகொள்ள UIDAI ஆதார் சில எளிய வழியை நடைமுறையில் வைத்துள்ளது. UIDAI தகவலின் படி, ஆதாரில் இதுவரை நீங்கள் மொபைல் எண்ணை புதுப்பிக்கவில்லை என்றால், எந்த ஆவணமும் இல்லாமல் உடனடியாக புதுப்பித்துக்கொள்ளலாம் என்று UIDAI தெரிவித்துள்ளது.

இந்தியா முழுக்க ஆங்காங்கே சிவப்பு புள்ளிகள்; நாசா வெளியிட்ட புகைப்படத்தால் பீதி.!இந்தியா முழுக்க ஆங்காங்கே சிவப்பு புள்ளிகள்; நாசா வெளியிட்ட புகைப்படத்தால் பீதி.!

மொபைல் எண்ணை மாற்றம் செய்ய என்ன செய்யவேண்டும்?

மொபைல் எண்ணை மாற்றம் செய்ய என்ன செய்யவேண்டும்?

ஆதார் அட்டையில் இருக்கும் பழைய மொபைல் எண்ணை மாற்றம் செய்ய நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால், உங்கள் ஆதார் அட்டையை எடுத்துக்கொண்டு அருகிலுள்ள ஆதார் சேவை மையத்திற்கும் நேரில் சென்று மொபைல் எண்ணைப் புதுப்பிக்க கோரி விண்ணப்பியுங்கள். மொபைல் எண்ணைப் புதுப்பிக்க இங்கே நீங்கள் 50 ரூபாய் செலுத்த வேண்டும். இதற்குப் பிறகு உங்கள் மொபைல் எண் ஆதார் உடன் இணைக்கப்படும்.

சரியான எண் இல்லையென்றால் OTP சிக்கல் வரும்

சரியான எண் இல்லையென்றால் OTP சிக்கல் வரும்

நீங்கள் ஆதார் எண்ணை எதற்காக பயன்படுத்தினாலும், உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்படும். இந்த OTP உங்கள் ஆதார் அட்டையில் உள்ள மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி-க்கு மட்டுமே அனுப்பப்படும். நீங்கள் பயன்படுத்தாத மொபைல் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தால், உங்களுக்கு OTP கிடைக்காது. இதன் காரணமாக உங்கள் செயல்முறையை நீங்கள் முடிக்க முடியாது.

கட்டணமில்லா ஆதார் சேவை எண்

கட்டணமில்லா ஆதார் சேவை எண்

இது தவிர, சரியான மொபைல் எண் இல்லாமல் உங்கள் ஆதாரை எந்த ஆவணத்துடனும் இணைக்க முடியாது. ஆதார் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் ஏதேனும் சிக்கல் இருந்தால், ஆதாரின் கட்டணமில்லா சேவை எண் ஆனா 1947 என்ற எண்ணை டயல் செய்யவும். ஆதார் அட்டையில் மொபைல் எண்ணை நேரம் கிடைக்கும் போதே உடனே மாற்றம் செய்துகொள்ளுங்கள். இறுதி நேரத்தில் மாற்றத்தை புதுப்பிக்க நீங்கள் காத்திருக்க நேரலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Aadhaar Latest Update Solid way to update mobile number in Aadhaar without any document : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X