ஆதார் இலவச அப்டேட்.. கடைசி தேதி இதுதான்.. உடனே இந்த வேலையை முடிங்க..
இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டை போன்று ஆதார் ஆதார் அட்டையும் (Aadhaar Card) மிகவும் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் சேவைகளைப் பெறுவதற்கு ஆதார் கார்டு தற்போது கட்டாயம் தேவைப்படுகிறது.
அதேபோல் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது, வங்கி தொடர்பான சேவை, லோன் எடுப்பது, புது சிம் கார்டு வாங்குவது, KYC அப்டேட், இறப்பு சான்றிதழ் பெறுவது என அனைத்திற்கும் ஆதார் பயன்படுகிறது. இந்நிலையில் ஆன்லைனில் இலவசமாக ஆதார் விவரங்களைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை 2026 ஜூன் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இலவச ஆதார் அப்டேட்
அதாவது ஆதார் அட்டையில் உள்ள முகவரி உள்ளிட்ட விவரங்களை ஆன்லைன் மூலம் இலவசமாக புதுப்பிப்பதற்கான கால அவகாசம் 2026 ஜூன் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த விவரங்களை மை ஆதார் இணையதளம் மற்றும் எம் ஆதார் செயலி வாயிலாகப் பொதுமக்கள் எவ்வித கட்டணமின்றி வரும் ஜூன் 14-ம் தேதி வரை ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளலாம்.
இதுதவிர 7 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்களை ஆதார் சேவை மையங்களில் வரும் மார்ச் மாதத்திற்குள் இலவசமாகப் புதுப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் பிளாஸ்டிக் ஆதார் கார்டு விலை உயர்ந்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களையும் இப்போது பார்க்கலாம்.
பிளாஸ்டிக் ஆதார் கார்டு விலை
நாட்டில் ஆதார் கார்டை இ-ஆதார் மற்றும் அட்டை வடிவிலான காகித ஆதார் என இரண்டு வழிகளில் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த அட்டை வடிவிலான ஆதார் கார்டு ஆனது சேதம் அடையவும், கிழிந்து விடவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே தான் பிளாஸ்டிக் வடிவிலான ஆதார் அட்டைை அறிமுகம் செய்தது இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI).
ஆரம்பத்தில் இந்த பிளாஸ்டிக் ஆதார் கார்டு வாங்குவதற்கு ரூ.50 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இந்த கட்டணம் தற்போது ரூ.75 ஆக உயர்ந்துள்ளது.
குறிப்பாக பான் கார்டு மற்றும் வாக்காளர் அட்டையை போன்று பிவிசி எனும் பிளாஸ்டிக் வடிவத்தில் ஆதார் கார்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதுவும் இந்த பிவிசி எனும் பிளாஸ்டிக் ஆதார் அட்டையைப் பெற இந்திய இந்திய தனித்துவ அடையாள ஆவணத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தான் விண்ணப்பிக்க வேண்டும். தற்போது இதற்கான கட்டணம் தான் ரூ.50-லிருந்து தற்போது ரூ.75 ஆக உயர்ந்துள்ளது.

2020-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் பிளாஸ்டிக் ஆதார் கார்டு கட்டணம் உயர்ந்துள்ளது. வரி மற்றும் டெலிவரி கட்டணம் உள்ளிட்டவையும் இந்த 75 ரூபாய் கட்டணத்தில் அடங்கி விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அனைத்து இடங்களிலும் அட்டை வடிவிலான ஆதார், இ-ஆதார் போன்று பிளாஸ்டிக் ஆதார் அட்டையும் செல்லத்தக்க ஆவணமாகக் கருதப்படுகிறது.
மேலும் நீங்கள் ஆதார் இணையதளத்தில் இந்த பிளாஸ்டிக் ஆதார் கார்டை பெற விண்ணப்பித்தால், அடுத்த 5 வேலை நாட்களுக்குள் உங்கள் வீட்டிற்கே வந்துவிடும். அதுவும் ஆதார் கார்டு நீண்ட நாட்களுக்குச் சேதமடையாமல் இருக்கும் என்பதால், பொதுமக்கள் சிலர் ஆர்டர் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








