கால அவகாசம் முடிந்தது.. Aadhaar வைத்திருக்கும் பயனர்கள் இதை மறக்காம பண்ணிட்டீங்களா?
தற்போது அரசு சலுகைகள் பெறுவது முதல் பள்ளி, கல்லூரி என அனைத்து இடங்களிலும் ஆதார் அட்டை அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக குழந்தையில் ஆரம்பித்து அனைத்து வயதினருக்கும் ஆதார் அட்டை பல இடங்களில் தேவைப்படக்கூடிய ஒரு முக்கிய ஆவணமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆதார் அட்டையில் மாற்றங்களைச் செய்ய மத்திய அரசு இலவச ஆன்லைன் வசதியை ஏற்படுத்திக்கொடுத்தது. குறிப்பாக 10 ஆண்டுகளாக ஆதார் கார்டை அப்டேட் செய்யாதவர்கள், விலாசம் மாறியவர்கள், ஆதார் கார்டில் தவறான விவரங்கள் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடிந்தது.

சுருக்கமாக கூறவேண்டும் என்றால் உங்களின் பெயர் தவறாக இருந்தால் அல்லது வேறு விவரங்கள் தவறாக இருந்தால் ஆன்லைன் மூலம் அதை எளிதாக மாற்ற முடியும். இதற்கான வசதிகளை ஆதார் அமைப்பு ஏற்படுத்திக் கொடுத்தது. குறிப்பாக ஜூன் 14ம் தேதி வரை இந்த மாற்றங்களைச் செய்ய கட்டணம் இல்லை. ஆனால் நேரில் ஆதார் மையத்தில் செய்வதற்கு மட்டும் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
குறிப்பாக myAadhaar எனும் இணையதளம் மூலம் எளிதாக இவர்கள் விலாசத்தை மாற்றும் வசதி இருந்தது. ஆனால் தற்போது அந்த அவகாசம் நிறைவுக்கு வந்துள்ளது. அதாவது நேற்றோடு இந்த அவகாசம் முடிந்த நிலையில் இனிமேல் விலாசத்தை மாற்றக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஆதார்- பான் கார்டு இணைப்பதற்கான கடைசி தேதி நெருங்கி வருகிறது. குறிப்பாக ஆதார்-பான் இணைக்காமல் இருப்பது ரிஸ்க் என்று வருமான வரித் துறை எச்சரித்துள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக இருக்கிறது. அதேபோல் வருமான வரித் துறை சார்பில் பான் கார்டு வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் அனைவருமே ஆதார்-பான் கார்டு கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. அதேபோல் இதற்காக கால அவகாசம் ஏற்கனவே பல முறை நீட்டிக்கப்பட்டுவிட்டது. தற்போது இதற்கான அவகாசம் வரும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
எனவே மக்கள் பலரும் பான் கார்டை இணைக்காமல் இருந்த நிலையில் ஜூன் 30 வரை இணைக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக இந்த தேதிக்குள் உங்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் பான் செயலற்றதாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக வருமான வரி விலக்கு பெறுவதற்காகப் பல பான் கார்டுகளை வைத்துக் கொண்டு சிலர் ஏமாற்றுவதாக வருமான வரித்துறைக்குப் புகார்கள் வந்தது. இதைத் தொடர்ந்து தான் பான் கார்டு ஆதார் எண்ணை இணைக்கும் விஷயத்தைக் கையில் எடுத்தது மத்திய அரசு.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








