ஆதார் இருக்கா.. ATM செல்ல வேண்டாம்.. ரூ.50,000 வரை வீட்டுக்கே தேடி வரும்.. Aadhaar மூலம் பணம் பெறுவது எப்படி?
வங்கி செல்ல நேரம் இல்லையா? ATM சென்று பணம் எடுக்க முடியவில்லையா? கவலையவிடுங்க, உங்களிடம் ஆதார் மட்டும் இருந்தால் போதும், ரூ. 50,000 வரை உங்கள் வீட்டுக்கே தேடி வந்து பணம் வழங்கப்படும் புதிய சேவையை இந்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் நமது தினசரி வாழ்க்கைக்கு மத்தியில், வங்கி (Bank) சென்றோ அல்லது ஏடிஎம் (ATM) சென்றோ பணம் எடுக்க நேரம் இல்லாத ஆதார் அட்டை (Aadhaar card) பயனர்களுக்கு, வீடு தேடி வந்து பணத்தை ஒப்படைக்கும் புதிய சேவையை ஆதார் மற்றும் இந்திய அரசாங்கம் (Government of India) இணைத்து உருவாக்கியுள்ளது. இந்த சேவை தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

ஆதார் எனப்பில்டு பேமெண்ட் சிஸ்டம் (Aadhaar Enabled Payment System) அல்லது ஏஇபிஎஸ் (AePS):
இந்த சேவை ஆதார் எனப்பில்டு பேமெண்ட் சிஸ்டம் (Aadhaar Enabled Payment System) அல்லது ஏஇபிஎஸ் (AePS) என்ற பெயரின் மூலம் பொதுமக்களுக்காக செயல்படுகிறது. AePS என்பது NPCI என்ற இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) மூலம் உருவாக்கப்பட்ட ஒரு புதிய அமைப்பாகும். இது ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் வங்கிக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யவும், பணம் எடுக்கவும் அனுமதிக்கிறது.
இதுமட்டுமின்றி, வங்கி கணக்கு இருப்பைச் (bank balance status) சரிபார்க்கவும் மற்றும் ஆதாரில் இருந்து ஆதாருக்கு நிதியை மாற்றவும் (Aadhaar to Aadhaar money exchange) உதவுகிறது. பணம் எடுக்கவும் (Cash withdrawl), பணம் டெபாசிட் (Cash deposti) செய்யவும் நீங்கள் வங்கிகோ, அல்லது ஏடிஎம் மையத்திற்கோ (ATM center) அல்லது டெபாசிட் இயந்திரத்தை (Deposit machine) தேடியோ அலையவேண்டிய அவசியமில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய சேவை இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி (India post-payment bank) உடன் இணைந்து செயல்படுகிறது. இந்த சேவையின் மூலம் உங்கள் ஆதார் விபரங்களுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்து ரொக்கமாக பணத்தை உங்கள் வீடு தேடிய வரவழைக்க முடியும். இந்த பணத்தை உங்கள் ஏரியாவின் போஸ்ட்மேன் உங்கள் வீடு தேடி வந்து ஒப்படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சேவை உங்களுக்கு 6 வகையான வங்கி சேவையை வழங்குகிறது.

ஆதார் அட்டை வைத்து ரூ.50,000 வரை பணம் எடுக்கலாமா? அதுவும் ATM செல்லாமலே.!
குறிப்பாக, ஏடிஎம் மற்றும் வங்கி செல்லாமல் வங்கி தொடர்பான சேவைகளை அணுக அனுமதிக்கிறது. இந்த AePS சேவையை பயன்படுத்த முதலில் உங்கள் வங்கி கணக்குடன் உங்கள் பயோமெட்ரிக் விபரங்கள் மற்றும் ஆதார் விபரங்கள் இணைக்கப்பட வேண்டும். உங்களிடம் ஒன்றிற்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் இருக்கிறது என்றால், அதில் எது உங்கள் பிரைமரி வங்கி கணக்காக செயல்படுகிறதோ. அந்த கணக்கு மட்டுமே AePS சேவைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
AePS சேவை மூலம் நடைபெறும் பணப்பரிமாற்றத்திற்கு (Money transactions) இந்திய ரிசர்வ் வங்கி (RBI) எந்தவித கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சில வங்கிகள் (banks) ஒரு நாளைக்கு ரூ.50,000 வரை மட்டுமே பணபரிமாற்றத்தை வழங்க அனுமதிக்கிறது.
ஆதார் அட்டை வைத்து AePS முறைப்படி எப்படி பணம் எடுப்பது?
- போஸ்ட்மேன்னிடம் இருக்கும் POS மெஷினில் உங்கள் ஆதார் விபரங்களை உள்ளிட்ட வேண்டும்.
- பரிவர்த்தனை வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
- வங்கியின் பெயரைக் குறிப்பிடவும்.
- பரிவர்த்தனையைத் தொடர பரிவர்த்தனை தொகையை உள்ளிடவும்.
- கட்டணத்தை உறுதிப்படுத்த பயோமெட்ரிக் அங்கீகாரத்தை வழங்கவும்.
- பயோமெட்ரிக் என்பது உங்கள் கைரேகை அல்லது கருவிழி ஸ்கேன்னிங் ஆகும்.
- பணத்துடன் பரிவர்த்தனைக்கான ரசீது வழங்கப்படும்.


Click it and Unblock the Notifications








