Home
News

ஆதார் கார்டில் இ-மெயில் ஐடியை இலவசமாக அப்டேட் செய்வது எப்படி? டிசம்பர் 31 வரை சலுகை!

ஆதார் (Aadhaar) கார்டில் இ-மெயில் ஐடியை இணைப்பது மற்றும் புதுப்பிப்பது தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆதார் கார்டில் மின்னஞ்சல் முகவரியைப் புதுப்பிக்க தற்போது இலவசச் சலுகை வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்தச் சேவைக்கு ரூ.75 கட்டணம் வசூலிக்கப்பட்டதாகக் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சலுகை டிசம்பர் 31, 2026 வரை வழங்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆதார் கார்டில் மின்னஞ்சல் முகவரியை இணைப்பதால் பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக, ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், ஆதார் தொடர்பான முக்கியமான தகவல்களை மின்னஞ்சல் மூலம் தெரிந்துகொள்ள இது உதவும். மேலும், ஆதார் சேவைகளைப் பயன்படுத்தும்போது பாதுகாப்பு தொடர்பான தகவல்களைப் பெறவும் மின்னஞ்சல் முகவரி பயன்படும்.

ஆதார் கார்டில் இ-மெயில் ஐடியை இலவசமாக அப்டேட் செய்வது எப்படி?

ஆதாரில் இ-மெயில் ஐடி இணைப்பது ஏன் முக்கியம்?

உங்களுடைய ஆதார் விவரங்களைப் பயன்படுத்தி ஆன்லைனில் e-KYC சரிபார்ப்பு நடைபெறும்போது, அதற்கான தகவல்கள் மின்னஞ்சல் மூலம் கிடைக்கக்கூடும். இதன் மூலம் ஆதார் தொடர்பான செயல்பாடுகளை நீங்கள் கண்காணிக்க முடியும்.

மேலும், ஆதார் தொடர்பான புகார்களைத் தெரிவிப்பதற்கும், UIDAI அமைப்பிடமிருந்து தகவல்களைப் பெறுவதற்கும் மின்னஞ்சல் முகவரி உதவியாக இருக்கும். எனவே, ஆதார் கார்டில் சரியான மின்னஞ்சல் முகவரியை இணைத்து வைத்திருப்பது முக்கியம்.

ஆன்லைனில் இ-மெயில் ஐடியை அப்டேட் செய்வது எப்படி?

ஆதார் கார்டில் மின்னஞ்சல் முகவரியைப் புதுப்பிக்க முதலில் அதிகாரப்பூர்வ ஆதார் செயலி அல்லது UIDAI வழங்கும் சேவையைப் பயன்படுத்த வேண்டும்.

  • முதலில் அதிகாரப்பூர்வ ஆதார் செயலியைப் பதிவிறக்கம் செய்து திறக்கவும்.
  • அடுத்து செயலியில் Update Email ID என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • இப்போது ஆதாருடன் இணைக்க விரும்பும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.
  • அதன்பின்பு ஆதார் கார்டுடன் இணைக்க விரும்பும் இ-மெயில் ID ஐ உள்ளிடவும். அந்த இ-மெயில் ID க்கு ஒரு OTP வரும்.அந்த OTP ஐ உள்ளிட்டு சரிபார்க்கவும்.
  • அதன்பின்னர் OTP சரிபார்க்கப்பட்டவுடன் மின்னஞ்சல் புதுப்பிப்பு கோரிக்கை ஏற்கப்படும்.

முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டியது

மின்னஞ்சல் முகவரியைப் புதுப்பிப்பதற்கான கட்டணச் சலுகை மட்டுமே இலவசமாக இருக்கிறது. ஆதார் மையத்திற்கு சென்றுபெயர், புகைப்படம் உள்ளிட்ட பிற ஆதார் விவரங்களை மாற்றுவதற்கு வழக்கமான கட்டண விதிகள் பொருந்தும். எனவே, இலவசச் சலுகையின் காலக்கெடு மற்றும் நடைமுறைகளை UIDAI-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்த்த பிறகே புதுப்பிப்பை மேற்கொள்ளவும்.

ஆதார் கார்டில் இ-மெயில் ஐடியை இலவசமாக அப்டேட் செய்வது எப்படி?

எனவே, ஆதார் கார்டில் இ-மெயில் ஐடியை அப்டேட் செய்ய விரும்புபவர்கள், இந்த இலவசச் சலுகையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். 2026 ஜூலை 1 முதல் டிசம்பர் 31 வரை, அதிகாரப்பூர்வ ஆதார் மொபைல் செயலி மூலம் மின்னஞ்சல் முகவரியைப் புதுப்பிக்க எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இதற்கு முன்பு ரூ.75 கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆறு மாதங்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்படுகிறது.

ஆதார் கார்டில் உள்ள தனிப்பட்ட விவரங்கள் சரியாகவும் புதுப்பிக்கப்பட்ட நிலையிலும் இருப்பதை உறுதிசெய்வது மிகவும் முக்கியம். குறிப்பாக, மின்னஞ்சல் முகவரியைச் சரியாக இணைத்து வைத்திருப்பதன் மூலம் ஆதார் தொடர்பான முக்கியமான தகவல்களைப் பெற முடியும். இதுபோன்ற சேவைகளைப் பயன்படுத்தும்போது, அதிகாரப்பூர்வ UIDAI இணையதளம் அல்லது ஆதார் மொபைல் செயலி மூலம் மட்டுமே விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும். மேலும், உங்கள் ஆதார் விவரங்கள் மற்றும் OTP ஆகியவற்றை மற்றவர்களுடன் பகிர்வதைத் தவிர்ப்பது பாதுகாப்பானது.

Best Mobiles in India

English summary
Aadhaar Email Update Free Until December 31, 2026: How to Update Online
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X