Home
News

இனி AADHAAR வெரிபிகேஷன்.. SIM கார்டுக்கு எப்படியோ.. இன்டர்நெட்-க்கும் இனிமே அப்படி.. UIDAI, Starlink ஒரே போடு!

யுஐடிஏஐ (UIDAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது சிம் கார்டு வழங்குவதற்கு ஆதார் வெரிபிகேஷனை செய்வதை போலவே சாட்டிலைட் மூலம் இன்டர்நெட் சேவையை பெறுவதற்கும் வெரிபிகேஷனை கொண்டு வருகிறது. இந்தியாவில் ஸ்டார்லிங் மட்டுமே சாட்டிலைட் மூலம் இன்டர்நெட் சேவையை வழங்க இருப்பதால், அதனுடன் இந்த வெரிபிகேஷனை செய்ய இருக்கிறது. இதனால் என்னென்ன மாறப் போகிறது?

இந்தியாவில் சிம் கார்டு வாங்க வேண்டுமானால், ஆதார் ஈ-கேஒய்சி வெரிபிகேஷன் (Aadhaar e-KYC Verification) செய்யப்படுகிறது. உங்களிடம் ஓட்டுநர் உரிமம், பேங்க் பாஸ்புக், ஓட்டர் ஐடி, பாஸ்போர்ட் போன்ற எந்த ஆவணங்கள் இருந்தாலும், ஆதார் கார்டு வெரிபிகேஷனை செய்த பிறகே சிம் கார்டு வாங்க முடியும். இதையே டிஓடி (DoT) ஆனது டெலிகாம் நிறுவனங்களுக்கு சொல்லி இருக்கிறது.

இனி AADHAAR வெரிபிகேஷன்.. SIM கார்டுக்கு எப்படியோ.. இன்டர்நெட்-க்கும்!

இந்த வெரிபிகேஷன் விதியானது, சாட்டிலைட் மூலம் இன்டர்நெட் சேவையை பெறும் கஸ்டமர்களுக்கும் பொருந்தும்படி இப்போது ஒரு ஒப்பந்தம் நடந்துள்ளது. பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பிறகு எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் (Starlink) நிறுவனம், இந்தியாவில் சாட்டிலைட் அடிப்படையிலான இன்டர்நெட் சேவையை தொடங்க இருக்கிறது. அடுத்த சில மாதங்களில் தொடங்கப்படலாம்.

இந்த சேவையை பெறும் இந்தியர்களுக்கு ஆதார் ஈ-கேஒய்சி வெரிபிகேஷன் செய்வதற்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆனது ஸ்டார்லிங் நிறுவனத்துடன் சேர்ந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீ புவனேஷ் குமார், துணை இயக்குநர் ஜெனரல் ஸ்ரீ மணீஷ் பரத்வாஜ் முன்னிலையில் நடந்தது.

இதில் ஸ்டார்லிங்க் இந்திய இயக்குநர் பர்னில் உர்த்வரேஷ் இருந்தார். ஆகவே, இந்தியாவில் எப்போது ஸ்டார்லிங் நிறுவனத்தின் சேவைகள் தொடங்கப்படுகிறதோ அப்போதில் இருந்து அதன் சேவையை பெறுவதற்கு ஆதார் ஈ-கேஒய்சி வெரிபிகேஷன் இருக்கும் என்பது உறுதியாகிறது. இந்த சாட்டிலைட் அடிப்படையிலான இன்டர்நெட் மொபைல் இன்டர்நெட் சேவை போல கிடையாது.

இனி AADHAAR வெரிபிகேஷன்.. SIM கார்டுக்கு எப்படியோ.. இன்டர்நெட்-க்கும்!

நேரடியாக வீடுகள், வணிகங்கள் அல்லது நிறுவனங்களுக்கு மட்டும் இன்டர்நெட் சேவையை கொடுக்க இருக்கிறது. அதாவது, வீட்டில் ஒரு டிஷ் மற்றும் வை-பை ரூட்டரை வைத்து இன்டர்நெட் சேவையை பெறுவது போல இருக்கும். இந்த டிஷ்-க்கு நேரடியாக சாட்டிலைட் மூலம் கனெக்ட் செய்யப்பட்டிருக்கிறது ஆகவே, வழக்கமான செல் டவர்கள் இதற்கு தேவையில்லை.

இதன் மூலம் வை-பை டேட்டா போலவே குறிப்பிட்ட பகுதிகளுக்குள் இன்டர்நெட் சேவையை பெற்று கொள்ளலாம். இது தொலைத்தூரப் பகுதிகள், செல் டவர்கள் இல்லாத பகுதிகளுக்கு எளிதாக இன்டர்நெட் சேவையை கொடுக்கக் கூடியது. அதே நேரத்தில் இதை விலை அதிகமாகவும் இருக்கும். இதற்கான டிவைஸ்கள், எக்யூப்மெண்ட்கள் விலை உயர்ந்ததாக இருக்கும்.

ஆகவே, சாட்டிலைட் இந்த இன்டர்நெட் சேவையால் ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற வழக்கமாக பயன்படுத்திவரும் இன்டர்நெட் சேவைகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. சொல்லப்போனால், ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் நாட்டின் 90 சதவீதத்துக்கும் அதிகமான பகுதிகளில் 5ஜி வரையிலான உள்கட்டமைப்பை செய்து முடித்துவிட்டன.

இதனால், அந்த நிறுவனங்களால் தொடர்ந்து மொபைல் ரீசார்ஜ் திட்டங்களை மலிவாக கொடுக்க முடியும். அதே நேரத்தில் அதிவேகத்தில் இன்டர்நெட் சேவையையும் கொடுக்க முடியும். செல் டவர்களை வைத்து பராமரிக்க முடியாத பகுதிகள் அல்லது கஸ்டமர்கள் குறைவாக இருப்பதால், செல் டவர்கள் அமைக்கப்படாத பகுதிகளில் ஸ்டார்லிங் முன்னிலை வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Aadhaar e-KYC Verification Satellite Based Internet Provider Starlink Will Roll Out To Customer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X