Home
News

அடி தூள்: 3 மாதங்களுக்கு ஆதார் அட்டை விபரங்களைப் புதுப்பிக்க கட்டணம் இல்லை..! ஆனால்?

இந்திய குடிமக்களுக்கு ஆதார் அட்டை (Aadhaar Card) என்பது மிக முக்கியமான கட்டாய அடையாள ஆதார ஆவணமாக உள்ளது. பின்பு இது அட்டைதாரரின் பயோமெட்ரிக் டேட்டாக்களை கொண்டுள்ளது. அரசாங்க வேலைகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வங்கி அதிகாரப்பூர்வ வேலைகளுக்கும் ஆதார் அவசியமாகிறது.

மூன்று மாதங்களுக்கு இலவசம்: இந்நிலையில் அடுத்த மூன்று மாதங்களுக்கு ஆதார் அட்டை விவரங்களை இணைய தளம் மூலம் இலவசமாகப் புதுப்பிக்கலாம் என்று இந்திய தனித்துவமான அடையாள ஆணையம் (Unique Identification Authority of India (UIDAI) தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடதத்ககது. மேலும் இதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

3 மாதங்களுக்கு ஆதார் அட்டை விபரங்களை புதுப்பிக்க  கட்டணம் இல்லை..! ஆனா

அதாவது பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்று இதுவரையில் புதுப்பிக்காதவர்கள் தங்கள் ஆவணங்களை கொண்டு புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆதார் மையங்களில் நேரடியாகச் சென்று புதுப்பித்தால் வழக்கம்போல் ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும். ஆனால் தற்போது இந்த சேவையை மார்ச் 15 முதல் ஜூன் 14, 2023 வரை இலவச சேவையாக கிடைக்க ஆணையம் முடிவெடுத்துள்ளது.

அதேபோல் இந்த சேவையை மைஆதார் (my Aadhaar) என்ற இணையதளத்தில் மட்டுமே இலவசமாகப் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால்,இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் லட்சக்கணக்கில் மக்கள் பயனடையும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே பயனர்கள்https://myaadhaar.uidai.gov.in/ எனும் இணையத்தில் தங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி தங்களின் தரவுகளைப் புதுப்பித்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் அருகில் உள்ள ஆதார் சேவை மையங்களுக்குச் சென்று புதுப்பித்தால் வழக்கமாகக் கட்டணமான ரூ.50 வசூலிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

3 மாதங்களுக்கு ஆதார் அட்டை விபரங்களை புதுப்பிக்க  கட்டணம் இல்லை..! ஆனா

குறிப்பாக பெயர், பிறந்த தேதி, முகவரி போன்றவற்றில் ஏதேனும் மாற்றம் தேவைப்பட்டால் டிஜிட்டல் முறையில் இலவசமாக அடுத்த மூன்று மாதங்களுக்குள் மாற்றிக் கொள்ளலாம். அதேபோல் மத்திய அரசு பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பதைக் கட்டாயமாக்கியுள்ளது. குறிப்பாக வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஒருவேளை இணைக்கத் தவறினால் வரும் ஏப்ரல் 1 முதல் பான் கார்டு செயலற்றதாகி விடும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பான் கார்டு அரசாங்க சலுகைகளைப் பெற அல்லது வங்கிகளில் நிதி பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுகிறது. குறிப்பாக இப்போது இந்தியாவில் ஆதார் அட்டையைப் போன்று இந்த PAN அட்டையும் ஒரு முக்கியமான அடையாள ஆவணமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், அதாவது உங்களுடைய பான் எண்ணுடன் ஆதார் எண் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ள சில வழிமுறைகள் உள்ளது. இப்போது அந்த வழிமுறைகளைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

வழிமுறை-1 : முதலில் WWW.incometax.gov.in என்ற மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் செல்ல வேண்டும். அடுத்து Link aadhaar status என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின்பு உங்களுடைய ஆதார் எண்ணைக் குறிப்பிட்டு View Link ஆதார் Status என்பதை கொடுக்க வேண்டும்.

3 மாதங்களுக்கு ஆதார் அட்டை விபரங்களை புதுப்பிக்க  கட்டணம் இல்லை..! ஆனா

வழிமுறை-2 : குறிப்பாக உங்களுடைய ஆதார்-பான் இணைக்கப்பட்டிருந்தால், அது குறித்து பதில் காண்பிக்கப்படும். அதேபோல் ஆதார்-பான் இணைக்கப்படவில்லை என்றால் அதுகுறித்தும் நோட்டிபிகேஷன் காண்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இணைக்கப்படவில்லை என்றால் WWW.incometax.gov.in என்ற இணையதளத்தில் Link aadhaar கொடுத்து மார்ச் 31-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Aadhaar documents can be updated online for free till June 14: Check steps to avail this facility : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X