Subscribe to Gizbot

மத்திய அரசின் "ஜீரணிக்க முடியாத " துரோகம், வெளியான நம் ஆதார் ரகசியங்கள்.!

Written By:

ஆதார் சட்டத்தின் படி, "தனிப்பட்ட அடையாள எண்களை 'வெளியிடப்படவோ, வெளியிடவோ அல்லது வெளியிடவோ முடியாது". ஆனால் வெளியாகியுள்ளது, அதாவது வெளியிடப்பட்டுள்ளது. எதோ ஹேக்கர்கள் இதை நிகழ்த்தி உள்ளனர் என்று நினைக்க வேண்டாம். இதை இந்திய அரசாங்கமே நிகழ்த்தி உள்ளது.!

பொதுவாக ஒருவரின் மிகவும் தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதே தனிமனித சுதந்திரம் என்று பார்க்கும் போது ஒரு வகையில் குற்றமாகும். அப்படியிருக்க அந்த ரகசிய தகவல்கள் வெளியாகியுள்ளது அதுவும் மக்கள் நலனுக்காக, மக்களின் பாதுகாப்பிற்காக என்று கூறிய அரசாங்கமே வெளியிட்டுள்ளது என்பதை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பயோமெட்ரிக் தகவல்

பயோமெட்ரிக் தகவல்

ஒரு ஆதார் அக்கவுண்ட் அனைத்து உங்களுடைய அனைத்து முக்கிய தகவல்களையும் வைத்திருக்கிறது. உங்கள் முகவரி, உங்கள் பிறந்த தேதி, தொடர்பு எண், 10 விரல்களின் கைரேகை ஸ்கேன் மற்றும் விழித்திரை ஸ்கேன் போன்ற பல சேமிக்கப்பட்ட பயோமெட்ரிக் தகவல்களை சேர்த்து வைத்துள்ளது.

எவருடனும் நீங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடாது

எவருடனும் நீங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடாது

இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) ஆனது, உங்கள் ஆதார் எண்ணை எவருடனும் நீங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று கூறுகிறது ஆனால் ஜார்கண்டில் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களின் ஆதார் விவரங்கள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நுழையும் எவருக்கும்

நுழையும் எவருக்கும்

ஆம், ஜார்கண்ட் மாநில அரசு இணையதளத்தில், லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களின் ஆதார் எண் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதனுள் நுழையும் எவருக்கும் யாருடைய தனிப்பட்ட ஆதார் விவரங்களும் அணுக கிடைத்தது.

மாலையில் தான்

மாலையில் தான்

வெளியிடப்பட்டஆதார் தரவுகள் எவ்வளவு காலம் காட்டப்பட்டது என்பது தெளிவாக தெரியவில்லை. அனால் மிக தாமதமாக மாலையில் தான் இணையதளம் தடை செய்யப்பட்டது என்பது உறுதியாக தெரிகிறது.

புகார் தெரிவித்த பின்பு

புகார் தெரிவித்த பின்பு

இதில் மிகப்பெரிய கொடுமை என்னவெனில் இந்த பிரதான தனியுரிமை மீறல் பற்றி ஜார்க்கண்ட் மாநில அரசு பெண்கள் மற்றும் குழந்தை மற்றும் சமூக பாதுகாப்பு திணைக்களம் புகார் தெரிவித்த பின்பு தான் இந்த ஆதார் ரகசிய விவரங்கள் காட்சிப்படுத்தப்பட்டது நிறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

முன்பு கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியின் ஆதார் பதிவு விவரங்கள் சமீபத்தில் ட்விட்டரில் பகிர பட்டதும் இப்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளின் தனிப்பட்ட அடையாள அட்டையின் புதிய கசிவு ஏற்பட்டு, மீண்டும் ஆதார் தரவு பாதுகாப்பு பற்றிய சந்தேக கேள்விகள் எழுந்துள்ளது.

இதை விட மோசம்

இதை விட மோசம்

பல அரசு திட்டங்கள் மற்றும் சேவைகளுக்கு கட்டாயமாக ஆதார் தேவை என்ற நிலையை ஏற்படுத்தி வைத்துள்ளா மத்திய அரசு ஆதார் பாதுகாப்பை உறுதி செய்யவில்லை என்பதற்கு இது இரண்டாவது எடுத்துக்காட்டாகும். முதல் எடுத்துக்காட்டு அதாவது இந்தியாவின் முதல் ஆதார் ஊழல் ஆனது இதை விட மோசம்.!

இதற்கு பதில் சொல்லுங்க

இதற்கு பதில் சொல்லுங்க

இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது கடந்த பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி தில்லி போலீஸ் சைபர் பிரிவில் மூன்று நிறுவனங்களுக்கு எதிராக ஒரு கிரிமினல் புகார் கொடுத்துள்ளது. அதன்கீழ் ஆக்சிஸ் வங்கி லிமிடெட், மும்பை அடிப்படையிலான சுவிதா இன்போசர்வ் மற்றும் பெங்களூரு சார்ந்த இமுதுரா ஆகிய நிறுவனங்கள் ஆதார் அட்டை உயிரி அளவீடுகளை சட்டவிரோதமாக சேமிக்கின்றன என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. அப்படியாக நிகழ்ந்த ஆதார் ஊழல் பற்றிய தொகுப்பை படிக்க இங்கே கிளிக் செய்யவும் - இதற்கு பதில் சொல்லுங்க, அப்புறமா எங்க ஆதார் அடையாளம் கேளுங்க.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Aadhaar details of lakhs of pension beneficiaries published on Jharkhand government website. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot