ஆதார் முக்கிய அறிவிப்பு: என்னடா இது டிஜிட்டல் இந்தியாவிற்கு வந்த சோதனை.!

என்னடா இது டிஜிட்டல் இந்தியாவிற்கு வந்த சோதனை என்று நினைக்கும் வகையில் சென்ற வாரம் டிராய் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மா வுக்கு நடந்த சோக கதை நாம் அனைவர்க்கும் தெரியும்.

By Sharath
|
Aaadhaar Announcement : ' To Avoid unwanted invasion attempts' - TAMIL

என்னடா இது டிஜிட்டல் இந்தியாவிற்கு வந்த சோதனை என்று நினைக்கும் வகையில் சென்ற வாரம் டிராய் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மா வுக்கு நடந்த சோக கதை நாம் அனைவர்க்கும் தெரியும். ஒரு பேச்சுக்கு சவால் விட்டு தன் வாயினால் பெரிய சர்ச்சைக்குள் சிக்கி கொண்டார்.

தனது பன்னிரண்டு இலக்க ஆதார் எண்ணை இணையத்தில் வெளியிட்டு "முடிந்தால் எனக்கு ஏதேனும் தீங்கு விளைவியுங்கள் பார்க்கலாம்" என்று சவால் விட்டார் டிராய் அமைப்பின் தலைவர். இதனையடுத்து இப்படிப்பட்ட செயல்கள் ஏற்புடையதல்ல என ஆதார் ஆணைய அமைப்பு கூறியது.

 ஆர்.எஸ்.ஷர்மா வின் ஆதார்

ஆர்.எஸ்.ஷர்மா வின் ஆதார்

இந்தப் பிரச்சனைக்கு பிறகு சில தினங்களாக ஆதாரின் பாதுகாப்புத் தன்மையை கேள்விக்குட்படுத்திய சிலர், ஆர்.எஸ்.ஷர்மா வின் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி பல்வேறு பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முயன்றுள்ளனர். இவரது ஆதார் அட்டையை நகல் செய்து சமூக வலைத்தளக் கணக்குகளைத் தொடங்கியுள்ளனர். இன்னும் ஒருவரின் முயற்சி வியப்பின் உச்சிக்கே சென்றுவிட்டது. ஷர்மா வின் வங்கிக் கணக்கினை கண்டறிந்து அதில் ஒரு ரூபாய் செலுத்தியதாகவும் வலைத்தளத்தில் கூறியுள்ளார். ஆனால் அப்படி ஏதுவும் நடக்கவில்லை என்று ஷர்மா அண்மையில் தெரிவித்திருக்கிறார்.

ஆதார் சட்டத்தின்படியும் தண்டனைக்குரிய குற்றம்

ஆதார் சட்டத்தின்படியும் தண்டனைக்குரிய குற்றம்

இத்துடன் மக்கள் தங்கள் ஆதார் சேவையை சுதந்திரமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் மற்றவரின் ஆதார் எண்ணைப் பயன்படுத்துவது ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுவதற்கு ஒப்பானது. இது இந்திய தண்டனைச் சட்டத்தின் படியும் ஆதார் சட்டத்தின்படியும் தண்டனைக்குரிய குற்றம் என ஆதார் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

பயோமெட்ரிக் மற்றும் ஒடிபி பாதுகாப்பு

பயோமெட்ரிக் மற்றும் ஒடிபி பாதுகாப்பு

வேறு ஒருவருக்கு வங்கி கணக்கு எண்ணைக் கொடுப்பது போன்றே தங்களுடைய ஆதார் எண்ணையும் எளிமையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் எனக் கூறியுள்ளது. ஏனெனில் ஆதார் எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் பாதிக்காத படி பல அடுக்கு பாதுகாப்பு சேவைக்குக் கீழ் வைக்கப்பட்டுள்ளதால் யாரும் அஞ்ச அவசியமில்லை எனத் தெரிவித்திருக்கிறது. ஆதார் சேவை பயோமெட்ரிக் மற்றும் ஒடிபி சேவை மூலம் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

சட்டத்தின்படி தண்டனை

சட்டத்தின்படி தண்டனை

இத்துடன்ஆதார் தகவல்களை இணையத்தளம், டிவிட்டர் மற்றும் முகப்புத்தகத்தில் வெளியிட வேண்டாம் என்று UIDAI இன் தலைமை நிர்வாக அதிகாரி அஜய் பூஷண் பண்டே கூறியுள்ளார்.இவ்வாறு செயல்படுபவர்களும் செயல்படத் தூண்டுபவர்களும் சட்டத்தின்படி தண்டனைகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் எனவும் ஆதார் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
AADHAAR DARE EFFECT: UIDAI PLANS PUBLIC OUTREACH ON DOS AND DON'TS OF SHARING ID NUMBER : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X