ஆதார் அட்டை இருக்கா? ரூ.50,000 வரை கடன்.. செக்யூரிட்டி தேவையில்லை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
ஆதார் அட்டை (Aadhaar card) வைத்துள்ள பொதுமக்கள் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் பயன்பெறுகிறார்கள். அந்த வரிசையில், தற்போது இந்திய அரசு ஆதார் அட்டை இருந்தால், உங்களுக்கு ரூ. 50,000 வரை கடன் வழங்கப்படும் (50,000 loan amount for aadhaar card users) என்று கூறி சில நிபந்தனைகளை வெளியிட்டுள்ளது. எந்த திட்டத்தின் கீழ் இந்த கடன் தொகை கிடைக்கிறது? இதற்காக நாம் எங்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்? இதை யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என்ற கூடுதல் விபரங்களை இப்போது பார்க்கலாம்.
மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அப்படி, தற்போது இந்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு புதிய நலத்திட்டம் தான் இந்த பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா (PM Svanidhi Yojana) என்ற நலத்திட்டம். இந்த திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறு தொழில் செய்ய விரும்பும் பொதுமக்களுக்கு உதவும் விதமாக இந்த பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா நலத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆதார் அட்டை இருக்கா? ரூ.50,000 வரை கடன்.. செக்யூரிட்டி தேவையில்லை:
சிறு மற்றும் குறு தொழில் முனைவோர் எதிர்கொள்ளும் சிக்கல்களை சமாளிக்க இந்த நலத்திட்டத்தின் மூலம் ரூ. 50,000 வரை கடன் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக, இந்த நலத்திட்டத்தின் கீழ் செயல்படும் நபருக்கு ரூ. 10,000 கடன் வழங்கப்படும். இந்த கடனை குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த நபர் திருப்பி செலுத்த வேண்டும். அப்படி சரியான நேரத்தில் இந்த திட்டத்தின் கீழ் பெற்ற தொகையை திரும்பி செலுத்தாவிட்டால், உங்களுக்கு கூடுதல் கடன் கிடைக்கும்.
அடுத்த தொகையாக ரூ.20,000 வரை அந்த நபரால் கடன் வாங்க முடியும். சரியான நேரத்தில் இந்த கடனையும் நீங்கள் திருப்பி செலுத்திவிட்டால், உங்களுக்கு அடுத்த நம்பிக்கை தொகையாக ரூ. 50,000 வரை எந்தவித செக்யூரிட்டியும் இல்லாமல் நம்பிக்கையின் பெயரில் வழங்கப்படும். இந்த கடன் தொகையை பெறுவதற்கு உங்களிடம் சரியான தகவலுடன் அப்டேட் செய்யப்பட்ட ஆதார் கார்டு மட்டும் இருந்தால் போதும்.
ஆதார் அட்டை இருந்தால் தொழில் முனைவோருக்கு ரூ. 50,000 வரை கடன் பெற வாய்ப்பு:
இந்த பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா திட்டத்தின் கீழ் கடன் பெற, தொழில் முனைவோர் உங்கள் ஆதார் விபரங்களை ஏதேனும் ஒரு அரசு வங்கியில் சமர்ப்பித்து, இந்த திட்டத்திற்கான விண்ணப்பத்தை நிரப்பு சமர்ப்பித்து கடன் பெற முயற்சிக்கலாம். பிரதான் மந்திரி ஸ்வநிதி இணையதள பக்கத்தில் https://pmsvanidhi.mohua.gov.in/LoginThirdLoanTerm என்ற பக்கத்திற்கு செல்லுங்கள். கடன் பெறுவதற்கான விண்ணப்பத்தை சரியாக நிரப்புங்கள். அதை சரியாக நிரப்பினால் மட்டுமே வங்கியில் இருந்து கடன் பெற முயற்சிக்கலாம்.
முக்கிய குறிப்பு: உங்கள் ஆதார் ஆவணத்தை மட்டும் சமர்ப்பித்து ரூ. 50,000 வரை கடன் பெற போகிறீர்கள் என்பதனால், உங்கள் ஆதார் அட்டை தகவல்கள் எந்தவித பிழையும் இல்லாமல், மிகவும் சரியான தகவலுடன் இருப்பது முக்கியமானது. அதேபோல், உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்களை தான் நீங்கள் கடன் வாங்க முனையும் படிவத்தில் பதிவிட வேண்டும்.
ஆதார் அட்டையுடன் இணைக்கப்படாத மொபைல் நம்பரை பயன்படுத்தினால், உங்களுக்கு கடன் கிடைப்பது கைநலிவு செல்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். கூடுதல் விபரங்களை அறிந்துகொள்ள பிரதான் மந்திரி ஸ்வநிதி இணையதள பக்கத்தை பார்வையிடுங்கள்.


Click it and Unblock the Notifications








