Home
News

ஆதார் அட்டையில் எல்லாமே மாறுது.. இனிமேல் அந்த சிரமம் இருக்காது.. வெளியானது முக்கிய தகவல்.. இதோ முழு விவரம்..

இந்தியாவில் ஆதார் அட்டை (Aadhaar card) முக்கியமான அடையாள ஆவணமாகப் பயன்படுத்தப்படுகிறது. அதுவும் அரசு மற்றும் தனியார் தரும் அனைத்து சேவைகளைப் பெறுவதற்கு இந்த ஆதார் கட்டாயம் தேவைப்படுகிறது. இந்நிலையில் ஆதார் குறித்த ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது ஆதார் அட்டையில் நமது புகைப்படம், பெயர், முகவரி, ஆதார் எண் போன்ற முக்கிய தகவல்கள் அச்சிடப்பட்டிருக்கும். ஆனால் இனிமேல் ஆதாரின் அடையாளமே முற்றிலும் மாற இருக்கிறது. இனி ஆதார் அட்டையில் குறிப்பிட்ட நபரின் புகைப்படம் மற்றும் கியூ ஆர் கோடு மட்டுமே இடம்பெறும் வகையில் மாற்றம் கொண்டுவர உள்ளதாக இந்திய தனித்துவ அடையாள அமைப்பான யுஐடிஏஐ தெரிவித்துள்ளது.

ஆதார் அட்டையில் எல்லாமே மாறுது..  இனிமேல் அந்த சிரமம் இருக்காது..

குறிப்பாக ஆதார் அட்டையில் வரும் இந்த மாற்றம் குறித்த தகவலை இந்திய தனித்துவ அடையாள அமைப்பின் தலைமை செயல் அதிகாரியான புவனேஷ் குமார் வெளியிட்டு இருக்கிறார். பொதுவாக நாம் சிம் கார்டு வாங்கு போதும், ஹோட்டலில் சென்று தங்கும் போதும், போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ளும் போதும் நமது ஆதார் அட்டையை அங்கே கொடுத்துச் சரிபார்ப்பு செய்து கொள்வது கட்டாயமாக இருக்கிறது.

இவ்வாறு நமது ஆதார் அட்டை நகல்களை சமர்ப்பிக்கும் போது சில மோசடியாளர்கள் கைகளில் அவை சிக்கி தவறான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. எனவே தான் டிசம்பர் மாதத்தில் இருந்து ஆதார் அட்டை "புகைப்படம் + QR கோடு" வடிவத்தில் மட்டுமே வழங்கும் திட்டத்தை UIDAI பரிசீலித்து வருகிறது.

குறிப்பாக ஆதாரை அச்சிட்டு கொடுப்பது முற்றிலும் தவறு. அட்டையில் படம், QR கோடு மட்டும் இருந்தால் போதும்" என புவனேஷ் குமார் வலியுறுத்தினார். அதுவும் ஆதார் சட்டப்படி ஆதார் எண், பயோமெட்ரிக் அல்லது நகலை ஆஃப்லைனில் சேகரிக்க கூடாது, ஆனால் பல இடங்களில் இதை பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே தான் வரும் டிசம்பர் மாதம் முதல் ஆஃப்லைனில் ஆதார் சரிபார்ப்பு செய்யும் முறைகளை முழுமையாக ஒரு சட்ட மாற்றம் செய்ய UIDAI பரிசீலிக்கிறது. குறிப்பாக இனி QR கோடு ஸ்கேன் செய்து சரிபார்க்கும் முறை மட்டுமே அதிகாரப்பூர்வமாகச் செல்லுபடியாகும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் சமீபத்தில் தான் புது ஆதார் செயலியைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்திருக்கிறது யுஐடிஏஐ அமைப்பு. இந்த செயலி நமது போனில இருந்தால் போதும் நாம் செல்லும் இடத்திற்கெல்லாம் ஆதார் அட்டை நகலை கொண்டு செல்ல தேவையில்லை. நம்முடைய ஆதார் சரிபார்ப்பு நடவடிக்கைகளுக்கு இந்த செயலியில் இருக்கும் க்யூ ஆர் கார்டை காட்டினாலே போதும். இதன் மூலம் நமது தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும் எனறு யுஐடிஏஐ அமைப்பின் தலைமை செயல் அதிகாரி புவனேஷ் குமார் கூறியுள்ளார்.

மக்கள் தனிப்பட தகவல்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு எங்கு சென்றாலும் ஆதார் அட்டை மற்றும் ஆதார் நகல்களை கொண்டு செல்லாமல் இருப்பதற்கும் இந்த புதிய ஆதார் செயலியை பயன்படுத்த வேண்டும் என்று யுஐடிஏஐ அமைப்பின் தலைமை செயல் அதிகாரி புவனேஷ் குமார் கூறியுள்ளார்.

ஆதார் அட்டையில் எல்லாமே மாறுது..  இனிமேல் அந்த சிரமம் இருக்காது..

இனி வரும் காலங்களில் ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு என்றால் மக்கள் ஆதார் எண் அல்லது கியூ ஆர் கோடை மட்டுமே பயன்படுத்தும் வகையில் மாற்றம் வர இருப்பதாக தெரிவித்துள்ளார் புவனேஷ் குமார். மேலும் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள ஆதார் செயலியிலேயே இன்னும் 18 மாதங்களில் ஆதார் விவரங்களை அப்டேட் செய்யும் வசதியும் வந்துவிடும் என்று தெரிவித்துள்ளார் அவர்.

அதுவும் பல முன்னணி நிறுவனங்கள், வங்கிகள், தேர்வு அமைப்புகள் இனிமேல் ஆஃப்லைன் ஆதார் வெரிஃபிகேஷன் நடத்த கூடாது என்று அறிவுறுத்தி இருப்பதாகக் கூறியுள்ள அவர் இதற்கான கட்டமைப்பு மாற்றம் நடப்பதாகவும் இனி ஆதார் சரிபார்ப்புக்கு உங்களது ஆதார் கியூ ஆர் கோடினை காட்டினாலே போதும், அதனை கொண்டு உங்களின் முக அடையாளத்துடன் சரிபார்த்து தகவல்கள் பெற்று கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Aadhaar card with just photo and QR code soon: Important information released
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X