ஆதார் தொடர்பாக அரசாங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.! எல்லாரும் உடனே நோட் பண்ணுங்க.!

|

ஆதார் அட்டை (Aadhaar Card) பயனர்களுக்கு இந்திய அரசாங்கம் ஒரு புதிய முக்கியமான அறிவிப்பை இப்போது வெளியிட்டுள்ளது. இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த அறிவிப்பைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஆதார் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில், இந்தியக் குடிமக்களுக்கு ஆதார் எண் (Aadhaar Number) ஒரு முக்கிய அடையாளச் சான்றாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் ஒரு தனிநபர் அடையாளத்தை நாம் ஆதார் மூலம் உறுதிப்படுத்த வேண்டியதுள்ளது.

ஆதார் தகவலை மிகச் சரியாக வைத்துக்கொள்ளுங்கள்.!

ஆதார் தகவலை மிகச் சரியாக வைத்துக்கொள்ளுங்கள்.!

பல அரசு திட்டங்கள் மற்றும் சேவைகளைப் பெற ஆதார் எண் கட்டாயமாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது பல தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் KYC ஆவணமாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதனால் இதில் உள்ள தகவல்களைச் சரியாக வைத்துக்கொள்வது மிகவும் முக்கியமானதாகக் கூறப்படுகிறது.

பல இடங்களில் ஆதார் அட்டை தேவைப்படுகிறது தானே.!

பல இடங்களில் ஆதார் அட்டை தேவைப்படுகிறது தானே.!

இதில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள், பயண நிறுவனங்கள், விமான நிறுவனங்கள் போன்ற பல இடங்களில் ஆதார் அட்டை ஒரு முக்கிய அடையாள ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, புதிய சிம் கார்டு அல்லது புதிய தொலைத்தொடர்பு இணைப்பைப் பெற வேண்டும் என்றால் கூட, ஆதார் அடிப்படையிலான KYC சரிபார்ப்பை நாம் வழங்குவதற்கு ஆதார் ஆவணத்தைச் சமர்ப்பிக்க வேண்டியதுள்ளது.

இந்தியாவிடம் சேட்டையை காட்டிய மஸ்க்.! Twitter Blue இந்திய விலை என்ன தெரியுமா? செஞ்சுட்டார்.!இந்தியாவிடம் சேட்டையை காட்டிய மஸ்க்.! Twitter Blue இந்திய விலை என்ன தெரியுமா? செஞ்சுட்டார்.!

10 ஆண்டுகளுக்கு மேல் ஆதார் யூஸ் செய்வோர் கவனத்திற்கு.!

10 ஆண்டுகளுக்கு மேல் ஆதார் யூஸ் செய்வோர் கவனத்திற்கு.!

10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் வழங்கப்பட்டு, அதன் பிறகு இந்த ஆண்டுகளில் புதுப்பிக்கப்படாத பயனர்கள், மற்றும் அத்தகைய ஆதார் எண் வைத்திருப்பவர்கள், தங்கள் ஆவணங்களை உடனே புதுப்பிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். சமீபத்தில் சில செய்திகளில் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகத் தவறாகத் தகவலை வெளியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு ஆதார் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

அரசாங்கம் சொன்ன

அரசாங்கம் சொன்ன "அந்த" முக்கியமான விஷயம்

UIDAI (Unique Identification Authority of India) படி, இந்த 12 இலக்க தனித்துவ அடையாள எண்களை வழங்கும் அரசாங்க அமைப்பு, சமீபத்தில் வெளியான தவறான அறிக்கைகளையும், சமூக ஊடக இடுகைகளையும் புறக்கணிக்கும் படி அறிவுறுத்தியுள்ளது. "இது கட்டாயமானது இல்லை" என்று கூறியுள்ளது. அதேபோல், UIDAI அதன் அறிக்கையில் அப்டேட் செய்வது ஏன் முக்கியமானது என்பதை தெளிவுபடுத்தி, மக்களின் குழப்பத்தை தெளிவாக்கியுள்ளது.

ரூ.399 விலைக்கு 3TB டேட்டா! Airtel & Jio-ல இப்படி ரீசார்ஜ் பிளான் கூட இருக்கா? தெரியாம போச்சே.!ரூ.399 விலைக்கு 3TB டேட்டா! Airtel & Jio-ல இப்படி ரீசார்ஜ் பிளான் கூட இருக்கா? தெரியாம போச்சே.!

ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒருமுறை அப்டேட் அவசியம்.!

ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒருமுறை அப்டேட் அவசியம்.!

UIDAI முன்பு சமீபத்தில் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டது. அதில், குடியிருப்பாளர்கள் தங்கள் ஆவணங்களைப் புதுப்பிக்கும்படி வலியுறுத்தி இருந்தது. அதாவது அப்டேட் செய்துகொள்ளும் படி அறிவுரைக்கிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிவித்தலில் ஆதார் பயனர்கள் ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒருமுறை அவ்வாறு செய்யலாம் என்றும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏன் ஆதாரை அப்டேட்டில் வைக்க அறிவுரைக்கப்படுகிறது?

ஏன் ஆதாரை அப்டேட்டில் வைக்க அறிவுரைக்கப்படுகிறது?

ஆதாரில் உள்ள ஆவணங்களை புதுப்பித்து வைத்திருப்பது, உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும் என்றும், இது சிறந்த சேவை வழங்குவதற்கும், துல்லியமான அங்கீகாரத்தைச் செயல்படுத்துவதற்கும் உதவும் என்று அந்த குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதனால், UIDAI - ஆதார் பயனாளர்களை, தங்களுடைய ஆவணங்களை அப்டேட் செய்து வைக்கும் படி ஊக்குவித்து வருகிறது. அப்டேட் உடன் செயல்படும் ஆவணம் சரியான நேரத்தில் கைகொடுக்கும் என்று ஆணையம் குறிப்பிடுகிறது.

யாரு சாமி இவன்.! சாதா iPhone-அ ஃபோல்டபில் ஐபோனா மாத்திட்டான்.! நெட்டிசனே கலங்கிட்டாங்க.!யாரு சாமி இவன்.! சாதா iPhone-அ ஃபோல்டபில் ஐபோனா மாத்திட்டான்.! நெட்டிசனே கலங்கிட்டாங்க.!

ஆதார் அப்டேட் செய்ய கட்டணம் எவ்வளவு வசூலிக்கப்படுகிறது?

ஆதார் அப்டேட் செய்ய கட்டணம் எவ்வளவு வசூலிக்கப்படுகிறது?

1000க்கும் மேற்பட்ட அரசு திட்டங்கள் மற்றும் அரசு சாரா சேவைகளின் பலன்களைப் பெற உங்கள் POI / POA ஆவணங்களை எப்போதும் அப்டேட் செய்து, புதுப்பித்த நிலையில் இருக்க வேண்டும் என்று UIDAI அறிவுரைக்கிறது.

உங்கள் ஆதாரில் POI / POA ஆவணங்களைப் புதுப்பிக்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும் அப்டேட் சேவைக்கு ரூ. 25 வசூலிக்கப்படுகிறது. ஆஃப்லைன் மூலம் ரூ. 50 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆதார் எண் குறித்து வெளியான எச்சரிக்கை.!

ஆதார் எண் குறித்து வெளியான எச்சரிக்கை.!

ஒவ்வொரு 12 இலக்க எண்ணும் ஆதார் இல்லை என்று குடிமக்கள், பயனாளர்கள் மற்றும் நிறுவனங்களை UIDAI எச்சரிக்கிறது.

அனைத்து வகையான ஆதார்களிலும் கிடைக்கும் பாதுகாப்பான QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம், ஆதார் அட்டை பயனரின் அடையாளத்தை எளிதாகச் சரிபார்க்கும் படி நிறுவனங்களை UIDAI கேட்டுக்கொண்டுள்ளது.

QR ஸ்கேன் முறையைப் பயன்படுத்த ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

OnePlus பயனர்கள் OnePlus பயனர்கள் "பச்சை பச்சையா" புகார் செய்றாங்க.! என்ன காரணம் தெரியுமா?

Aadhaar QR code scanner ஐ எங்கிருந்து டவுன்லோடு செய்வது பாதுகாப்பானது?

Aadhaar QR code scanner ஐ எங்கிருந்து டவுன்லோடு செய்வது பாதுகாப்பானது?

ஆதார் ஆப்ஸ் (Aadhaar QR code scanner) பயன்படுத்தி ஆதாரில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம், அவர்கள் அந்த பயனரின் முழு அடையாளத்தையும் சரிபார்க்க முடியும் என்று ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆதார் QR குறியீடு ஸ்கேனர் இப்போது கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் டவுன்லோடு செய்யக் கிடைக்கிறது. இந்த இரண்டு தளங்களில் இருந்து ஆதார் ஆப்ஸை பதிவிறக்கம் செய்வதே பாதுகாப்பானது.

இறுதியாக அரசாங்கம் கொடுத்த விழிப்புணர்வு எச்சரிக்கை என்ன தெரியுமா?

இறுதியாக அரசாங்கம் கொடுத்த விழிப்புணர்வு எச்சரிக்கை என்ன தெரியுமா?

மற்றொரு எச்சரிக்கை என்னவென்றால், UIDAI எந்தவொரு குடியிருப்பாளரும் தங்கள் ஆதாரை புதுப்பிக்கக் கேட்டு போன் மூலமாக அழைப்பதில்லை என்பதை மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் ஆதாரைப் புதுப்பிக்க, குடியிருப்பாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள ஆதார் மையங்களுக்குச் செல்ல வேண்டும் அல்லது myAadhaar போர்ட்டல் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்பதையும் ஆதார் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
Aadhaar Card Users Alert Government Issued Important Update Regarding Your Aadhaar

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X