Home
News

Aadhaar அட்டையில் பிறந்த தேதி தவறாக இருக்கிறதா.. மாற்ற முடியுமா? இதோ விவரம்..

ஆதார் (Aadhaar) அட்டை என்பது இந்தியர்களின் மிக முக்கியமான அடையாள ஆவணம் ஆகும். குறிப்பாக இந்த ஆதார் அட்டையில் மக்களின் பயோமெட்ரிக் (biometric) மற்றும் முகவரி (Address) விவரங்கள் இரண்டும் இருக்கும். இது பல்வேறு அரசு திட்டங்களுக்கும் அத்தியாவசிய அடையாளச் சான்றாகச் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுவும் ஆதார் கார்டில் பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி போன்ற அச்சிடப்பட்ட தகவல்களில் எந்தப் பிழையும் இல்லாமல் வைத்திருப்பது மிகவும் அவசியம் ஆகும். ஒருவேளை ஆதார் அட்டையில் உள்ள தகவல்கள் தவறாக இருந்தால் அரசு தொடங்கும் முக்கியமான திட்டங்களை மக்கள் பயன்படுத்த முடியாமல் போகிறது. எனவே ஆதாரில் உள்ள தகவல்கள் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

Aadhaar அட்டையில் பிறந்த தேதி தவறாக இருக்கிறதா.. மாற்ற முடியுமா?

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஆதாரில் உங்கள் பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி போன்ற சில விவரங்களை எத்தனை முறை மாற்றலாம் என்பதற்கு குறிப்பிட்ட வரம்புகள் உள்ளன. அதை இப்போது பார்க்கலாம்

மாற்றங்கள் செய்ய வரம்புகள்:
பெயர்: உங்களது ஆதார் அட்டையில் உங்கள் பெயரை அதிகபட்சம் இரண்டு முறை மாற்றலாம்.

பிறந்த தேதி மற்றும் பாலினம்: ஆதார் அட்டையில் பாலினம் மற்றும் பிறந்த தேதி ஆகிய இரண்டுமே உங்கள் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே புதுப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

முகவரி: உங்களுடைய ஆதார் அட்டையில் முகவரியைப் புதுப்பிப்பதற்கு வரம்பு எதுவும் இல்லை.

குறிப்பாக ஆதாரில் பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற விவரங்கள் எப்போது சரியாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக இதில் ஏதேனும் தவறு இருந்தால் உடனே அப்டேட் செய்வது நல்லது. சரி இப்போது ஆதாரில் பிறந்த தேதி மாற்றுவதற்கான வழிமுறைகளை சற்று விரவாகப் பார்க்கலாம்.

ஆதாரில் பிறந்த தேதி மாற்றுவதற்கான செயல்முறை:
1. ஆதார் அட்டையில் தவறான பிறந்த தேதியை சரி செய்வதற்கு அருகில் இருக்கும் ஆதார் பதிவு மையத்துக்குச் செல்லவும். அடுத்து அந்த ஆதார் பதிவு மையத்திலிருந்து திருத்தப் படிவத்தைப் பெறவேண்டும்.

2. நீங்கள் வாங்கிய திருத்தப் படிவத்தில் உங்களின் 12 இலக்க ஆதார் எண், பெயர் மற்றும் தேவையான பிற விவரங்களைப் பூர்த்தி செய்யவும் அதன்பின்பு நீங்கள் பிறந்த தேதியை மாற்ற விரும்புகிறீர்கள் என்பதையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். பிறப்பு சான்றிதழ், பான் கார்டு, பாஸ்போர்ட் போன்ற எதாவது ஒரு ஆவணத்தில் ஜெராக்ஸ் காப்பியை இந்த திருத்தப் படிவத்துடன் இணைக்க வேண்டும்.

Aadhaar அட்டையில் பிறந்த தேதி தவறாக இருக்கிறதா.. மாற்ற முடியுமா?

3. நீங்கள் பூர்த்தி செய்த அந்த படிவத்தை ஆதார் பதிவு மையத்தில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கவும். அந்த அதிகாரி உங்களது பயோமெட்ரிக்ஸை சரிபார்ப்பார். அதன்பின்பு படிவம் மற்றும் இணைக்கப்பட்ட ஆவணம் சரியாக உள்ளதா என்று சரிபார்க்கப்படும். அதன்பின்னர் உங்கள் ஆதார் அட்டையில் பிறந்த தேதியைப் புதுப்பிக்க ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும்.

4. இதைத் தொடர்ந்து சில நாட்களுக்குள் உங்கள் திருத்தப்பட்ட பிறந்த தேதி ஆதார் அமைப்பில் புதுப்பிக்கப்படும். அதேபோல் ஆதார் மையத்தில் உங்களுக்கு யுஆர்என் சீட்டு வழங்கப்படும். அதைப் பயன்படுத்தி ஆன்லைனில் ஆதார் புதுப்பிப்பு கோரிக்கையின் நிலையை நீங்கள் எளிமையாகக் கண்காணிக்கலாம்.

Source 1, 2

Best Mobiles in India

English summary
Aadhaar Card Update Limit: How Many Times Can You Update birth date in Aadhaar Card? check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X