Home
News

உங்கள் போனில் டிஜிட்டல் ஆதாரை பதிவிறக்கம் செய்து சேமிப்பது எப்படி? இது கட்டாயம் தேவைப்படும்..

ஆதார் அட்டை இந்தியாவில் மிகவும் முக்கியமான ஆவணமாக மாறியுள்ளது. உங்கள் ஆதார் அட்டை என்பது இந்த நாட்களில் கிட்டத்தட்ட இப்போது எல்லா இடங்களிலும் தேவைப்படும் மிக முக்கியமான அடையாள அட்டையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியக் குடிமக்கள் அனைவரும் இந்த அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆதார் மிக முக்கியமானது. இந்த தகவல் எல்லாம் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே, ஆனால், இந்த ஆவணத்தை ஏன் நீங்கள் டிஜிட்டல் காப்பியாக வைத்திருக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

மக்கள் அனைவரும் டிஜிட்டல் காப்பியாக ஆதாரை வைத்துக்கொள்வது எவ்வளவு நல்லது?

மக்கள் அனைவரும் டிஜிட்டல் காப்பியாக ஆதாரை வைத்துக்கொள்வது எவ்வளவு நல்லது?

இந்த முக்கியமான ஆவணத்தை நம் மக்கள் அனைவரும் டிஜிட்டல் காப்பியாக வைத்துக்கொள்வது ஏன் சிறந்தது. டிஜிட்டல் மயமாக மாறிவரும் இந்தியாவில், சில நேரங்களில் உங்களின் ஆதார் எண்ணை நீங்கள் வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டியது இருக்கும். குறிப்பாக சில உத்தியோகபூர்வ வேலையின் போதும் அல்லது அரசு தொடர்பான பணிகளின் போதும் இந்த டிஜிட்டல் ஆதார் ஆவணத்தை இணைத்து அனுப்ப வேண்டியிருக்கும். எனவே நீங்கள் எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்க, எல்லா நேரங்களிலும் உங்கள் ஆதார் சாஃப்ட் காப்பியை வைத்திருப்பது அவசியமாகிறது.

UIDAI அறிமுகம் செய்துள்ள புதிய சேவை

UIDAI அறிமுகம் செய்துள்ள புதிய சேவை

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் சட்டம் 2016 இன் விதியின் கீழ் சட்டப்பூர்வமாக உள்ளது. UIDAI, அதன் ஆதார் பயனர் அனுபவத்தை மேம்படுத்தவும், மக்களுக்கு அதன் சேவையையா மென்மையாக்கவும் தொடர்ந்து பல புதிய சேவைகளில் செயல்பட்டு வருகிறது. அதே வரிசையில், UIDAI இப்போது இந்திய குடிமக்கள் தங்கள் ஆதார் அட்டையை ஆன்லைனில் எந்த நேரத்திலும் எந்த இடத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

12 இலக்க தனிப்பட்ட ஐடி

12 இலக்க தனிப்பட்ட ஐடி

UIDAI ஆனது இப்போது ஆதார் நேரடி இணைப்பை உருவாக்கியுள்ளது. இது பயனர்கள் தங்களின் 12 இலக்க தனிப்பட்ட ஐடியைப் பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது பெரும்பாலும் வாழ்க்கையின் பல துறைகளில் முக்கியமான ஆவணமாகத் தேவைப்படுகிறது. எந்த நேரத்திலும் ஆதார் அட்டையைப் பெற நேரடி ஆதார் இணையதளத்தைப் பார்வையிடலாம். சரி, இப்போது உங்களுடைய டிஜிட்டல் ஆதாரை எப்படி உங்களின் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்வது என்று பார்க்கலாம்.

உங்கள் தொலைப்பேசியில் ஆதார் அட்டையைப் பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள் இங்கே

உங்கள் தொலைப்பேசியில் ஆதார் அட்டையைப் பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள் இங்கே

  • UIDAI-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
  • தெரியாதவர்களுக்கு ஆதார் ஆணையத்தின் இந்த eaadhaar.uidai.gov.in இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.
  • 'Download electronic copy of your Aadhaar' என்ற உங்கள் ஆதாரின் மின்னணு நகலைப் பதிவிறக்கும் விருப்பத்திற்கான ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • 'ஆதார் எண்' என்பதைத் தேர்ந்தெடுத்து, இணையதளத்தில் உள்ள பெட்டியில் 12 இலக்க தனித்துவ ஐடியைச் சேர்க்கவும்.
  • செயல்பாட்டை உறுதிப்படுத்த OTP

    செயல்பாட்டை உறுதிப்படுத்த OTP

    • நீங்கள் முகமூடி செய்யப்பட்ட மாஸ்க்டு ஆதார் அட்டையைப் பதிவிறக்க விரும்பினால், கீழ்தோன்றும் மெனுவிலிருந்து 'எனக்கு முகமூடி செய்யப்பட்ட ஆதார் வேண்டும்' (I want a masked Aadhaar) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    • இப்போது உங்கள் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.
    • இதை உறுதிப்படுத்த உங்களுக்கு OTP தேவைப்படும், ஆகையால் பக்கத்தில் காணப்படும் 'Send OTP' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
    • ஆதார் அட்டையின் PDF பதிவிறக்கம்

      ஆதார் அட்டையின் PDF பதிவிறக்கம்

      • இணையத்தில் காண்பிக்கப்படும் OTP பாக்சில் சரியான OTP எண்ணை உள்ளிட்ட பிறகு 'submit' பொத்தானைத் தட்டவும்.
      • OTP அங்கீகாரத்திற்குப் பிறகு, உங்கள் ஆதார் அட்டையின் PDF ஐ பதிவிறக்கம் செய்து சேமிக்கவும்.
      • உங்கள் பிறந்த தேதியின் முதல் நான்கு இலக்கங்கள் ஆதார் அட்டையை அணுகுவதற்கான கடவுச்சொல்லாக இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
      • முகமூடி அல்லது மாஸ்க்டு என்றால் என்ன?

        முகமூடி அல்லது மாஸ்க்டு என்றால் என்ன?

        குறிப்பு: முகமூடி அல்லது மாஸ்க்டு அணிந்த ஆதார் அட்டையானது, தங்கள் ஆதார் எண்ணின் முதல் எட்டு இலக்கங்களை மறைத்துவிடும் என்பதைப் பயனர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இதன் மூலம் மற்ற நபர்கள் ஆதாரை பயன்படுத்தி எந்த மோசடி செயலையும் செய்யாமல் தடுக்க இந்த அம்சம் உதவுகிறது. மாஸ்க்டு செய்யப்படாத ஆதார் ஆவணத்தில் உங்களின் ஆதார் எண்கள் எல்லாம் தெளிவாகக் காண்பிக்கப்படும்.

        உங்கள் ஆதாருடன் எத்தனை சிம் கார்டுகள் இணைக்கப்பட்டுள்ளது?

        உங்கள் ஆதாருடன் எத்தனை சிம் கார்டுகள் இணைக்கப்பட்டுள்ளது?

        சமீபத்தில் ஆதார் ஆணையம் இந்த புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் படி, உங்கள் ஆதார் அட்டைக்கு எதிராக எத்தனை சந்தாதாரர் அடையாள தொகுதி வழங்கப்பட்டுள்ளது அல்லது சிம் கார்டுகள் இணைக்கப்பட்டுள்ளது என்று எப்போதாவது யோசித்தீர்களா? ஆம் என்றால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது! இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறை (DoT) சமீபத்தில் ஒரு புதிய போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சத்தின் மூலம் உங்கள் ஆதார் உடன் எத்தனை மொபைல் எண்கள் இணைக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் இப்போது தெரிந்துகொள்ள முடியும்.

        உங்கள் பெயரின் கீழ் எத்தனை சிம் கார்ட் உள்ளது?

        உங்கள் பெயரின் கீழ் எத்தனை சிம் கார்ட் உள்ளது?

        மோசடி மேலாண்மை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக்கான பெயரிடப்பட்ட தொலைத்தொடர்பு பகுப்பாய்வு (TAFCOP) அம்சத்தை இனி ஆதார் பயனர்கள் பாதுகாப்பு சோதனைக்காகப் பயன்படுத்தலாம். இந்த புதிய அம்சத்தைப் பயன்படுத்தி பயனர்கள் அவர்களின் ஆதார் அட்டையுடன் அடையாளச் சான்றாக வழங்கப்பட்ட சிம் இணைப்புகளைச் சரிபார்க்கலாம். உங்கள் தங்கள் பெயரில் வழங்கப்பட்ட மொபைல் எண்களின் பட்டியலைச் சரிபார்க்க TAFCOP போர்ட்டலைப் பயன்படுத்தலாம்.

        ஆதார் அட்டையுடன் எத்தனை சிம் கொடுக்கப்படலாம்

        ஆதார் அட்டையுடன் எத்தனை சிம் கொடுக்கப்படலாம்

        போர்ட்டலில் உங்கள் ஆதார் அட்டைக்கு எதிராக நீங்கள் வழங்காத எண்ணைக் கண்டால் நீங்கள் அது தொடர்பாக இனி எளிதாகப் புகாரளிக்கலாம். DoT வழிகாட்டுதல்களின்படி, எந்தவொரு இந்தியத் தொலைத்தொடர்பு பயனரும் தனது ஆதார் அட்டையுடன் 9 மொபைல் இணைப்புகளைப் பதிவு செய்யலாம். மொபைல் சந்தாதாரர்கள் தங்கள் பெயரில் எடுக்கப்பட்ட இணைப்புகளின் எண்ணிக்கையைப் பற்றி விசாரிக்க மற்றும் அனுமதிக்கப் பிரத்தியேகமாக இந்த TAFCOP DoT ஆல் உருவாக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Aadhaar Card Update How to Download And Save Digital Aadhaar On Your Mobile Phone : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X