Home
News

ஆதார் கார்டு வைத்து இருப்பவர்களுக்கு புது ரூல்ஸ்.. பெயர், முகவரிக்கு இந்த ஆவணங்கள் இருக்கா.. முழு லிஸ்ட் இதோ!

ஆதார் கார்டு வைத்து இருக்கும் ஒட்டுமொத்த மக்களுக்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆனது முக்கிய வழிகாட்டுதல்களை வகுத்து கொடுத்துள்ளது. ஆதார் கார்டில் உங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் இதர தனிப்பட்ட விவரங்களை மாற்ற விரும்பினால், அதற்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். அடையாள சான்று, முகவரி சான்று, உறவுமுறை சான்று மற்றும் பிறந்த தேதி சான்று ஆகிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே, ஆதார் கார்டில் மாற்றங்களை செய்ய முடியும்.

ஆதார் கார்டில் நீங்கள் எந்த விவரத்தை அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அதற்கு ஏற்றவாறு உரிய ஆவணங்கள் கேட்கப்படுகின்றன. இதில் ஒரு சில ஆவணங்கள் அடையாள சான்று, முகவரி சான்று, உறவுமுறை சான்று மற்றும் பிறந்த தேதி சான்று என பலவற்றுக்கு பொதுவாக ஏற்று கொள்ளப்படும். ஆனால், மற்ற சில ஆவணங்கள் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட மாற்றத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். எந்தெந்த மாற்றங்களுக்கு எந்த ஆவணம் ஏற்று கொள்ளப்படும் என்பதை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆனது தெளிவாகப் பட்டியலிட்டுள்ளது.

ஆதார் கார்டு வைத்து இருப்பவர்களுக்கு புது ரூல்ஸ்.. பெயர், முகவரிக்கு!

1. அடையாள சான்று (Proof of Identity - PoI):
அடையாள சான்று ஆவணங்களில் விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் புகைப்படம் கண்டிப்பாக இருக்க வேண்டும். இது அடையாளத்தை உறுதி செய்யவும், பெயர் மாற்றம் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு இந்திய பாஸ்போர்ட், ரேஷன் கார்டு அல்லது பொது விநியோகத் திட்ட (PDS) புகைப்பட அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணைய இணையதளத்தில் விவரங்கள் உள்ள இ-வாக்காளர் அடையாள அட்டை (e-Voter ID), ஓட்டுநர் உரிமம் (Driving Licence), மத்திய அல்லது மாநில அரசு, பொதுத்துறை நிறுவனம் (PSU) மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டை ஆகியவை ஏற்று கொள்ளப்படும்.

மேலும், ஓய்வூதியதாரர் அல்லது சுதந்திரப் போராட்ட வீரர் புகைப்பட அடையாள அட்டை, ஓய்வூதியக் கொடுப்பாணை (Pension Payment Order), கிசான் புகைப்பட பாஸ்புக், அரசு அல்லது பொதுத்துறை நிறுவனத்தால் வழங்கப்பட்ட சிஜிஎச்எஸ், இசிஎச்எஸ், இஎஸ்ஐசி (CGHS/ECHS/ESIC) மற்றும் மருத்துவக் காப்பீட்டு (Medical Claim) கார்டுகள், எம்ஜிஎன்ஆர்இஜிஏ வேலை அட்டை (MGNREGA Job Card), மாநில அரசால் வழங்கப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் (Domicile Certificate) ஆகியவை ஏற்று கொள்ளப்படும்.

இதுபோக, திருமணச் சான்றிதழ், விவாகரத்து தீர்ப்பு நகல் (Divorce Decree), எஸ்சி / எஸ்டி / ஓபிசி (SC/ST/OBC) சாதிச் சான்றிதழ், டிரான்ஸ்ஜென்டர், மூன்றாம் பாலினத்தவர் அடையாள அட்டை அல்லது சான்றிதழ் (Transgender ID Card), முதல் பெயர் அல்லது முழுப் பெயர் மாற்றத்திற்கான அரசிதழ் அறிவிப்பு (Gazette Notification), அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியம் / பல்கலைக்கழகம் அல்லது உயர்கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் (Marksheet) ஏற்ற கொள்ளப்படும்.

அல்லது கல்விச் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விஷயங்களுக்குப் பதிவுசெய்யப்பட்ட காப்பகத்தின் (Shelter Home) தலைவர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மாவட்ட அதிகாரி கூட்டாக கையொப்பமிட்ட சான்றிதழ், NACO அல்லது மாநில சுகாதாரத் துறை அதிகாரியால் வழங்கப்பட்ட யுஐடிஏஐ சான்றிதழ் மற்றும் சிறைத்துறை அதிகாரியின் அனுமதி ஆவணம் (Prison Officer's Induction Document) ஆகியவை ஏற்று கொள்ளப்படும்.

2. முகவரி சான்று (Proof of Address - PoA):
முகவரி சான்று ஆவணங்களில் விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் இந்தியாவில் உள்ள முகவரி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆதாரில் முகவரியை அப்டேட் செய்ய இந்திய பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, பிடிஎஸ் (PDS) புகைப்பட அட்டை, கிசான் புகைப்பட பாஸ்புக், வாக்காளர் அடையாள அட்டை, அங்கீகரிக்கப்பட்ட அரசு அமைப்பால் வழங்கப்பட்ட சர்வீஸ் புகைப்பட அடையாள அட்டை, ஓய்வூதியதாரர் அடையாள அட்டை அல்லது ஓய்வூதியக் கொடுப்பாணை, எம்ஜிஎன்ஆர்இஜிஏ வேலை அட்டை (MGNREGA Job Card), மாநில அரசின் இருப்பிடச் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்காகப் பதிவுசெய்யப்பட்ட காப்பகத் தலைவர் மற்றும் மாவட்ட அதிகாரி கையொப்பமிட்ட சான்றிதழ், திருமணச் சான்றிதழ் மற்றும் எஸ்சி / எஸ்டி / ஓபிசி சான்றிதழ் ஆகியவை ஏற்று கொள்ளப்படும்.

இதுபோக, புகைப்படம், முத்திரை மற்றும் கையொப்பத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சல் துறை சேமிப்பு பாஸ்புக், வங்கி கணக்கு / கிரெடிட் கார்டு / அஞ்சல் துறை சேமிப்பு கணக்கு ஸ்டேட்மெண்ட் (3 மாதங்களுக்குள் இருப்பது), மின்சாரம் / தண்ணீர் / கேஸ் / லேண்ட்லைன் / போஸ்ட்-பெய்ட் மொபைல் / பிராட்பேண்ட் பில் (3 மாதங்களுக்குள் இருப்பது), சொத்து வரி ரசீது (1 வருடத்திற்குள் இருப்பது) ஆகியவை ஏற்று கொள்ளப்படும்.

மேலும், பதிவுசெய்யப்பட்ட விற்பனை ஒப்பந்தம் (Sale Agreement) அல்லது தானப் பத்திரம் (Gift Deed), பதிவுசெய்யப்பட்ட அல்லது பதிவுசெய்யப்படாத வாடகை / குத்தகை ஒப்பந்தம் (Rent / Lease Agreement), அரசு அல்லது பிஎஸ்யு (PSU) குடியிருப்பு ஒதுக்கீட்டுக் கடிதம் (1 வருடத்திற்குள் இருப்பது), வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஒரு வருடம் வரை செல்லுபடியாகும் ஆயுள் அல்லது மருத்துவக் காப்பீட்டு பாலிசி (Life or Medical Insurance Policy), எம்.பி / எம்.எல்.ஏ போன்ற மக்கள் பிரதிநிதிகள், கெசட்டட் அதிகாரி (Gazetted Officer), தாசில்தார் (Tehsildar), அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது கிராம அளவிலான அதிகாரியால் வழங்கப்பட்ட யுஐடிஏஐ முகவரி சான்று ஆகியவை ஏற்று கொள்ளப்படும்.

3. உறவுமுறை சான்று (Proof of Relationship - PoR):
குடும்ப உறுப்பினர் மூலமாக ஆதார் விவரங்களை அப்டேட் செய்யும்போது, விண்ணப்பதாரர் அல்லது குழந்தையின் பெயரையும் குடும்பத் தலைவரின் (Head of Family - HoF) பெயரையும் உறுதிப்படுத்த இந்த ஆவணங்கள் பயன்படுகின்றன. இதற்கு இந்திய பாஸ்போர்ட், ரேஷன் கார்டு அல்லது பிடிஎஸ் புகைப்பட அட்டை, ஓய்வூதியதாரர் புகைப்பட அடையாள அட்டை அல்லது ஓய்வூதியக் கொடுப்பாணை, எம்ஜிஎன்ஆர்இஜிஏ வேலை அட்டை, இருப்பிடச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் மற்றும் எஸ்சி / எஸ்டி / ஓபிசி சான்றிதழ் ஆகியவை ஏற்று கொள்ளப்படும்.

மேலும், அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியம் / பல்கலைக்கழகம் அல்லது உயர்கல்வி நிறுவன மதிப்பெண் சான்றிதழ் (Marksheet), பிறப்புச் சான்றிதழ், ஆதார் முகவரி மாற்றத்திற்காக ஒரே வீட்டில் வசிக்கும் நெருங்கிய குடும்ப உறுப்பினர் வழங்கும் சுய அறிவிப்புச் சான்றிதழ் (Self-Declaration), அரசு அதிகாரி அல்லது நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட சட்டப்பூர்வ பாதுகாவலர் (Legal Guardianship) ஆவணம் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு நிறுவன ஆணையுடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி வழங்கும் யுஐடிஏஐ சான்றிதழ் ஆகியவை ஏற்று கொள்ளப்படும்.

4. பிறந்த தேதி சான்று (Proof of Date of Birth - DoB):
விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் பிறந்த தேதியை உறுதிப்படுத்த பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம், 1969-இன் (RBD Act, 1969 கீழ்) வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ், இந்திய பாஸ்போர்ட், அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியம் / பல்கலைக்கழகம் அல்லது உயர்கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் அல்லது கல்விச் சான்றிதழ், டிரான்ஸ்ஜென்டர், மூன்றாம் பாலினத்தவர் அடையாள அட்டை அல்லது சான்றிதழ், ஓய்வூதியதாரர் புகைப்பட அடையாள அட்டை / சுதந்திரப் போராட்ட வீரர் புகைப்பட அடையாள அட்டை அல்லது ஓய்வூதியக் கொடுப்பாணை, அரசு அல்லது பொதுத்துறை நிறுவனத்தால் (PSU) வழங்கப்பட்ட சர்வீஸ் புகைப்பட அடையாள அட்டை ஆகியவை ஏற்று கொள்ளப்படும்.

Best Mobiles in India

English summary
Aadhaar Card Update Full List of Documents Required to Change Name, Address and Date of Birth
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X