Home
News

Aadhaar Card: தெரியாமல் கூட இதை தவறா மாற்றிடாதீங்க.. நிலைமை மோசமாகிடும்.. அதிகாரிகள் கொடுத்த எச்சரிக்கை..

இந்தியர்களுக்கு ஆதார் (Aadhaar) என்பது அத்தியாவசியமான அடையாள அட்டையாகும். ஒரு-ஒரு தேவைக்கும் தனித்தனி அடையாள அட்டை என்பது மாறி ஆதார் கார்டு (Aadhaar card) ஒன்று இருந்தாலே போதும் என்ற நிலைமைக்கு இந்தியர்கள் வந்து விட்டோம்.

சிம் கார்ட் (SIM card) வாங்குவதில் தொடங்கி வங்கி கணக்கு (Bank account) ஓபன் செய்வது வரை இந்தியர்களுக்கு ஆதார் ஒன்று இருந்தாலே போதும். ஆதாருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? மற்ற அடையாள அட்டைகளில் இருக்கும் பெயர் (Name), பிறந்த தேதி (Date Of Birth), முகவரி (Address) போன்றவற்றைத் தாண்டி கருவிழி (Eye), கைரேகை (Fingerprint) போன்ற தனிநபர் அடையாளங்களும் அதில் இணைக்கப்பட்டிருக்கும்.

Aadhaar Card: தெரியாமல் கூட இதை தவறா மாற்றிடாதீங்க..நிலைமை மோசமாகிடும்

எனவே ஒருவரை அடையாளம் காண சிறந்த அடையாள அட்டையாக ஆதார் (Best Identification Card Aadhaar) இருக்கிறது. அப்போ, சமூக விரோதிகள் கைகளில் ஒருவரது ஆதார் அட்டை சிக்கினால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்று நீங்களே சிறிது யோசித்து பாருங்கள். மேலே கூறியது போல ஒருவரது ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி, முகம் (Face), கருவிழி, கைரேகை என்று அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கும்.

இதில் சில விபரங்களை நம்மால் மாற்ற முடியும். உதாரணத்திற்கு, ஆதார் அட்டை போட்டோவில் (Aadhaar card photo) உலக அழகியே சுமாராக தெரியும் அளவுக்கு தான் புகைப்படம் இருக்கும் என்று வேடிக்கையாக பலர் சொல்ல நாம் கேட்டிருப்போம். இதனால் பெரும்பாளானோர் ஆதார் அட்டை புகைப்படத்தை மாற்றியுள்ளனர் (Aadhaar card photo change).

அதேபோல, வாடகை வீட்டில் (Rented house) வசிப்பவர்கள் அடிக்கடி வீடு மாறலாம். அரசு பணியில் (Government employees) இருப்பவர்கள் பணிமாற்றம் பெற்று வேறு இடம் செல்லலாம். இது தனியார் ஊழியர்களுக்கும் (Private sector employees) பொருந்தும். இந்த மாதிரி சூழ்நிலையில் அடிக்கடி முகவரியை மாற்ற நேரும். எனவே, அதார் அட்டையில் பலர் முகவரியை (Aadhaar card address update) அடிக்கடி மாற்றியிருப்பர்.

இந்த மாதிரியான தகவல்களை அடிக்கடி மாற்றுவது சரிதான். ஆனால் சில விபரங்களை ஒரு முறை மட்டுமே (One time only Aadhaar card changes) மாற்ற முடியுமாம். எனவே, கவனமாக செயல்பட வேண்டும் என்று மக்களுக்கு யுனிக் ஐடென்டிஃபிகேஷன் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (Unique Identification Authority of India - UIDIA) அறிவுரை கூறியுள்ளது.

ஒருவரது பெயர் (Aadhaar card name change update) மற்றும் பிறந்த தேதி (DoB) இந்த இரண்டு தகவல்களையும் ஒருமுறை மட்டுமே மாற்ற முடியும். கவனக்குறைவு காரணமாக சிலர் தவறுதலாக மாற்றி விட்டு பின்னர் கஷ்டப்பட்டு வருகின்றனர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அப்படி என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது? ஒருவரது பெயர் தான் அவரது முதல் அடையாளம்.

சிலர் விளையாட்டுபோக்கில் தங்களது அதிகாரப்பூர்வ பெயரை பதிவு செய்யாமல் செல்லப்பெயர், இனிஷியல் இல்லாமல் பெயர் (Initial less names on Aadhaar), பாதி பெயர் (Half name update in Aadhaar card) என்று ஆதாரில் பதிவு செய்யும்போது கொடுத்து விடுகின்றனர். இதன்காரணமாக முக்கியமான பதிவுகளுக்கு ஆதாரை பயன்படுத்தும்போது அது சிக்கலாக வருகிறது.

ஆதார் அட்டையில் பெயரை ஒருமுறை மட்டுமே மாற்ற முடியும் என்பதால் அவணங்களில் இருக்கும் பெயரை எழுத்துபிழை (Name spelling mistakes on Aadhaar card) இல்லாமல் சரியாக கொடுப்பது அவசியம். அடுத்தபடியாக பிறந்த தேதி (DoB update in Aadhaar card). பொதுவாக பெற்றோர் குழந்தைகளுக்கு ஆதார் அட்டை வாங்கும்போது அலட்சியமாக ஏதோ ஒரு தேதியை பதிவு செய்து விடுகின்றனர்.

பின்னாளில் பொதுத் தேர்வு எழுதும்போதும், அரசு தேர்வு எழுதும்போது இது சிக்கலாக வந்து நிற்கிறது. இந்த மாதிரியான சூழ்நிலையில் மாற்ற முடியாமல் பலர் சிரமத்தை சந்திக்கின்றனர். பெரும்பான்மையான மக்களுக்கு பெயர் மற்றும் பிறந்த தேதியை ஒரு முறை மட்டுமே மாற்ற முடியும் என்பது தெரியாததால் அலட்சியமாக செயல்படுகின்றனர்.

இதனை பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்று UIDIA-வின் கீழ் இயங்கும் காஜியாபாத் ஆதார் சேவ கேந்திராவின் (Ghaziabad Aadhaar Seva Kendra) தலைவர் நிஷு ஷுக்லா (Nishu Shukla) தெரிவித்துள்ளார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Aadhaar Card Update Dont Change These Details Not More Than One Time
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X