Home
News

ஆதார் அட்டை வைத்திருக்கும் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு.. இதுதான் கடைசி தேதி.. உடனே அப்டேட் செய்யுங்க!

இந்தியாவில் அனைத்து சேவைகளையும் பெற ஆதார் கார்டு பயன்படுகிறது. இந்நிலையில் ஆதார் வைத்திருக்கும் மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது ஆதார் அட்டையை புதுப்பித்துக்கொள் கடைசி தேதியை டிசம்பர் 14 வரை UIDAI நீட்டித்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது ஆதார் அட்டை வெறும் அடையாள அட்டை மட்டுமல்ல, அரசு மற்றும் தனியார் சேவைகளைப் பெறவும் இது அவசியமாக உள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும்எஎன்றால் வங்கி, போஸ்ட் ஆபீஸ், பத்திரப்பதிவு, மருத்துவமனை என அனைத்து இடங்களிலும் ஆதார் இந்த அட்டை தேவைப்படுகிறது.

ஆதார் அட்டை வைத்திருக்கும் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..

அதேபோல் பலர் 10 வருட முந்தைய பழைய ஆதார் அட்டையை வைத்திருப்பார்கள். இந்த பழைய ஆதார் கார்டினை அப்டேட் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது ஆதார் அட்டையில் உங்களது தகவல்கள் அனைத்தும் தற்போதைய அப்டேட்டுகளாக இருக்க வேண்டும். இதற்காகத் தான் உங்கள் தகவல்களைப் புதுப்பித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் ஆதார் அட்டைகளில் எந்தவிதமான பிழைகளும் இருக்கக்கூடாது. ஒருவேளை ஆதாரில் பிழைகள் இருந்தால் நமக்கு கிடைக்க வேண்டிய அரசின் சில சலுகைகள் மற்றும் உதவிகளைப் பெற முடியாது. எனவே ஆதாரில் பிழைகள் இருந்தால் உடனே சரி செய்ய வேண்டும். குறிப்பாக 10 வருடங்கள் பழமையான ஆதார் கார்டைப் புதுப்பிக்க வேண்டும் என்றால், எந்த கட்டனமும் செலுத்த வேண்டியதில்லை என்பதை நினைவில் கொள்க. அதாவது தற்போது இதற்கான காலக்கெடு டிசம்பர் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக உங்கள் ஆதார் அட்டையில் வரும் டிசம்பர் 14ஆம் தேதிக்குள் பெயர், முகவரி மற்றும் பிற தகவல்களை அப்டேட் செய்ய விரும்பினால் செலவின்றி செய்யலாம். ஆனால் டிசம்பர் 14 தேதிக்குப் பிறகு ஆதார் விவரங்களை அப்டேட் செய்வதற்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது ஆதார் கார்டு அப்டேட் செய்யும் வழிமுறைகளைப் பார்க்கலாம்.

வழிமுறை 1: முதலில் ஆதார் இணையதளமான uidai.gov.in என்ற தளத்திற்குச் செல்ல வேண்டும். இந்த இணையதளத்தில் மை (my aadhaar) என்பதை கிளிக் செய்தவுடன் கீழே தோன்றும் மெனுவில் இருந்து உங்கள் ஆதாரை புதுப்பிக்கவும் (அப்டேட் செய்யவும்) என்பதை கிளிக் செய்ய வேண்டும்

வழிமுறை-2: அதன்பின்பு ஆதார் எண் மற்றும் கேப்சாக சரிபார்ப்பு குறியீட்டை உள்ளிட்ட பிறகு Send OTP என்பதைக் கிளிக் செய்யவும். அடுத்து உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். இந்த OTP உதவியுடன் உள்நுழைய முடியும். அடுத்து உங்கள் ஆதாரில் பெயர், முகவரி உள்ளிட்ட சுய விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை ஒரு முறை சரி பாருங்கள்.

வழிமுறை-3: குறிப்பாக இந்த சுயவிவரங்கள் தவறாக இருந்தால் செய்ய வேண்டிய மாற்றங்களைச் செய்ய வேண்டும்.இதற்காக நீங்கள் ஏதாவது ஒரு அடையாள அட்டையை ஆதாரமாகச் சமர்ப்பிக்க வேண்டும். அதாவது வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்ட நிறைய ஆதாரங்கள் இருக்கும். இதில் நீங்கள் எதை சப்மிட் செய்கிறீர்களோ அதை கிளிக் செய்யுங்கள்.

ஆதார் அட்டை வைத்திருக்கும் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..

வழிமுறை-4: அதன்பின்னர் உங்களது அடையாள அட்டையை அப்லோடு செய்யுங்கள், அதன் அளவு 2 மெகா பைட்டை விட குறைவாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க. அதேபோல் முகவரி மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அதை செலக்ட் செய்து அதற்கான ஆதாரத்தையோ ஆவணத்தையோ அப்லோடு செய்ய வேண்டும். அந்த ஃபைலும் கண்டிப்பாக 2 மெகா பைட்டை விட குறைவாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்க.

வழிமுறை-5: அடையாள அட்டையும், முகவரி ஆவணமும் JPEG, PNG or PDFஃபார்மட்டில் இருத்தல்வேண்டும். இதையடுத்து சப்மிட் செய்ய வேண்டும். இப்போது உங்களுக்கு ஒரு கன்ஃபர்மேஷன் மெசேஜ் ஒன்று வரும். மேலும் ஒரு யுனிக் அப்டேட் ரெஃபரன்ஸ் நம்பர் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கும். இதை வைத்து உங்களது விவரங்கள் அப்டேட் ஆனதைக் எளிமையாகக் கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை ஆதார் அட்டையில் இலவச அப்டேட் செய்வதற்கான காலக்கெடு முடிந்தது என்றால், ஆதார் சேவை மையத்துக்குச் செல்ல வேண்டும். அங்கு ஆதாரை புதுப்பிக்கக் கட்டணம் வசூலிக்கப்படும்.

photo credit: en.wikipedia.org

More from GizBot

Best Mobiles in India

English summary
Aadhaar Card Update Deadline 2024 December 14: Change Aadhaar details for free before last date
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X