புது ரூல்ஸ்.. செப்டம்பர் 1 முதல்.. Aadhaar முதல் போலி அழைப்புகள் வரை பெரிய மாற்றங்கள்.. தெரிஞ்சுக்கோங்க..
ஆதார் அட்டையை (Aadhaar Card) இலவசமாகத் திருத்தம் செய்ய இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் ஆதார் கார்டு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மாற்றம் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த மாற்றம் குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
அதன்படி வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் HDFC வங்கி ஆனது டெலிகாம் (Telecom) மற்றும் கேபிள் பேமெண்ட்டுகளுக்கான ரிவார்டு பாயிண்டுகளின் வரம்பை அமலுக்கு கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த பரிவர்த்தனைகள் மூலம் மாதத்திற்கு அதிகபட்சம் 2,000 ரிவார்ட் பாயிண்டுகள் வரை மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அனைவருக்கும் தொல்லை கொடுக்கும் போலி அழைப்புகளைக் கட்டுப்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் அறிவுறுத்தியுள்ளது. மேலும் இதற்காக டிராய் கடுமையான வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களைப் பார்க்கலாம்.
அதாவது 140 என்ற மொபைல் எண்களில் தொடங்கும் டெலிமார்க்கெட்டிங் அழைப்புகள் மற்றும் வணிகச் செய்திகளை பிளாக்செயின் அடிப்படையிலான டிஸ்ட்ரிபியூட்டட் லெட்ஜர் டெக்னாலஜி (டிஎல்டி) தளத்திற்கு வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் மாற்ற ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (VI) மற்றும் பிஎஸ்என்எல் (BSNL) போன்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு TRAI கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. எனவே இதன் மூலம் வரும் செப்டம்பர் 1 முதல் மோசடி (போலி) அழைப்புகள் கணிசமாகக் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 1-ம் தேதி சிலிண்டர் விலையில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எல்பிஜி விலையை அரசு மாற்றி வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். அதன்படி வணிக எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் சமையல் எரிவாயு விலையில் மாற்றங்கள் வந்துகொண்டே தான் இருக்கின்றன. அதன்படி வரும் செப்டம்பர் 1 ஆம் தேதியும் சிலிண்டர் விலையில் மாற்றம் வரும் என்று கூறப்படுகிறது.
ஆதார் அட்டையை இலவசமாக அப்டேட் (புதுப்பிப்பதற்கான) செய்ய கடைசி தேதி செப்டம்பர் 14 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த தேதிக்குப் பிறகு ஆதார் தொடர்பான சில விஷயங்களை இலவசமாக அப்டேட் செய்ய முடியாது. அதன்படி வரும் செப்டம்பர் 14 ஆம் தேதிக்கு பிறகு, ஆதாரை அப்டேட் செய்ய கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆதார் கார்டில் எதாவது பிழை இருந்தால் நமக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் கூட கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது. எனவே ஆதார் அட்டையில் அனைத்து விவரங்களும் சரியாக இருப்பது நல்லது. ஒருவேளை உங்களது ஆதார் அட்டையில் பிழை இருந்தால் அதை வரும் செப்டம்பர் 14 (September 14)-ம் தேதிக்குள், நீங்கள் இலவசமாகப் புதுப்பிக்கலாம். ஆனால் இந்த தேதிக்குப் பிறகு, எந்த ஒரு விவரங்களையும் அப்டேட் செய்ய வேண்டும் என்றால் அதற்குக்கட்டணம் விதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்க.
குறிப்பாக ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் விதிமுறைகள், 2016-இன் படி தனிநபர்கள் தங்களின் ஆதார் பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் ஒருமுறை தங்களது அடையாளச் சான்று (POI) மற்றும் முகவரிச் சான்று (POA) ஆவணங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. எனவே மக்கள் ஆதார் கார்டு விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








