புது சிக்கல்.. AADHAAR, PAN-க்கு வந்த வினை.. உடனே இதை பண்ணுங்க.. அதுக்குத்தான் வெரிபிகேஷன்.. என்ன வந்துருக்கு?
ஆதார் கார்டு (Aadhaar Card), பான் கார்டு (PAN Card) வைத்திருக்கும் ஒட்டுமொத்த மக்களின் வயிற்றிலும் புளியை கரைக்கும்படி ஜெனரேட்டிவ் ஏஐ (Generative AI) ஒரு வேலையை பார்த்துள்ளது. மத்திய அரசு வழங்கும் இந்த ஆவணங்களை அப்படியே போலியாக உருவாக்க முடியும் என்பதை காட்டி இருக்கிறது. இந்தியா போன்ற கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஆதார், பான் கார்டுகளில் இது நடந்துள்ளதால், இப்போது போலி ஆவணங்களை எப்படி கண்டறிவது என்பதை ஒட்டுமொத்த மக்களும் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.
இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதாக் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிறந்த குழந்தை முதல் ஆதார் கார்டை வாங்கி கொள்ள முடியும். சிம் கார்டுகள் வாங்குவது முதல் பேங்கில் அக்கவுண்ட் ஓப்பன் செய்வது வரையில் இந்த ஆதார் கார்டு முக்கியமானதாக இருக்கிறது. அதேபோல வரி செலுத்தும் குடிமக்களுக்கு பான் கார்டு தவிர்க்க முடியாததாக மாறி இருக்கிறது.

இப்படிப்பட்ட இந்த கார்டுகளை மத்திய அரசு நேரடியாக கொடுக்கிறது. இதில் பல்வேறு வெரிபிகேஷன்களையும் வைத்துள்ளது. எதுக்குப்பா இத்தனை வெரிபிகேஷன் என்று கடுப்பாகிய குடிமக்களுக்கு இப்போது அதற்கான காரணம் தெரிந்துவிட்டது. இப்போது, ஏஐ மூலம் இமேஜ் ஜெனரேஷன் (AI Image Generation) செய்வது அதிகரித்துவிட்டது.
ஏஐ சாட்பாட்கள் அல்லது ஏஐ வெப்சைட்களில் இப்படி ஒரு இமேஜ் வேண்டும் என்று டைப் செய்தால் போதும், ஓரிரு நிமிடங்களில் அப்படியே கிரியேட் செய்து கொடுக்கிறது. ஆனால், இது முன்னேறி செல்ல செல்ல அதை வைத்து என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை காட்டிவிட்டது. இப்போது, ஆதார் கார்டு மற்றும் பான் கார்டையே உருவாக்கி இருக்கிறது.
சாட்ஜிபிடி (ChatGPT) மூலம் ஜெனரேட் செய்யப்பட்ட ஆதார் கார்டுகள் என்று கூறப்பட்டு சில ஆவணங்கள் பகிரப்பட்டு வருகின்றன. ஆதார் கார்டுகளை உருவாக்க முடிகிறது என்றால், பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் போன்ற எந்தவொரு ஆவணங்களையும் ஏஐ மூலம் உருவாக்க முடியுமே என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது. ஆனால், அதை எளிதாக கண்டுபிடிக்க முடியும்.
போலி ஆவணங்களை கண்டுபிடிப்பது எப்படி? மத்திய அரசு அவ்வளவு எளிதாக ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு சேவைகளை மக்களிடையே அமல்படுத்தவில்லை. அதில் பல்வேறு வெரிபிகேஷன்களை வைத்திருக்கிறது. ஆதார் கார்டில் உள்ள பாஸ்போர்ட் அளவு புகைப்படம் அதை வைத்திருப்பவரின் முகத்துடன் பொருந்த வேண்டும்.
அதே நேரத்தில் ஆதார் கார்டில் நேர்த்தியான புகைப்படங்கள் பெரும்பாலும் இடம்பெறாது. ஆனால், ஏஐ அப்படி இல்லை, அதில் வேறுபாடுகள் இருக்கும். குறிப்பாக ஆதார் கார்டில் இடம்பெற்றிருக்கும் ஆங்கிலம் மற்றும் இந்தி எழுத்துகளில் இடைவெளிகள் தவறாக இருக்கும். அதேபோல கார்டுகளில் இடம்பெறும் இலட்சினையில் (Logos) மாற்றம் இருக்கும்.
குறிப்பாக கியூஆர்கோடை (QR Code) ஸ்கேன் செய்தால் போதும், அது யாருடைய ஆவணம் என்பது தெரிந்துவிடும். இதை எல்லாம் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாவில்லை என்றால், ஆன்லைன் மூலம் வெரிபிகேஷன் செய்து போலி ஆவணங்களை கண்டறிந்து கொள்ளலாம். அதாவது, யுஐடிஏஐ (UIDAI) வெப்சைட்டுக்கு சென்று ஆதார் கார்டை வெரிபிகேஷன் செய்யலாம்.
ஆதார் சேவைகளின் கீழ் இருக்கும் வெரிபை ஆதார் நம்பர் அல்லது வெரிபை ஈமெயில்/மொபைல் நம்பர் போன்ற ஏதாவது ஒரு ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும், 12 இலக்க ஆதார் எண் மற்றும் கேப்ட்சா கோட் கேட்கப்படும். இதை கொடுத்தால், உண்மையான ஆதார் கார்டை மட்டுமே வேரிபிகேஷன் செய்ய முடியும். போலியான ஆவணங்களில் விவரங்கள் அதில் இருக்காது.
இதுபோக மொபைல் நம்பருடன் ஆதார், பான் போன்ற ஆவணங்கள் இணைக்கப்படிருப்பதால், உங்களது ஆதாரை போல யாரேனும் அதை உருவாக்கி பயன்படுத்தினாலும்கூட, ஓடிபி மூலம் அடையாளம் காண முடியும். அவர்கள் அதை பயன்படுத்த முடியாது. ஆகவே, வெரிபிகேஷன் இல்லாமல், வெறுமனமே பெயருக்கு ஆதார் போன்ற ஆவணங்கள் பயன்படுத்தப்படலாம் என்பதை தெரிகிறது.


Click it and Unblock the Notifications