Home
News

4 விதமான ஆதார் அட்டை.. ஆனா இது தான் ரொம்ப சேஃப்.. UIDAI சொன்ன உண்மை.. ரூ.50 போதும் Aadhaar வீட்டுக்கே வரும்..

இந்தியாவில் இப்போது ஆதார் அட்டை 4 விதமான (4 Types of Aadhaar Cards In India) பரிமாணங்களில் கிடைக்கிறது. இவை ஆதார் லெட்டர் (Aadhaar letter) என்ற காகிதாக வடிவம் கொண்ட ஆதார் அட்டையாகவும், ஆதார் PVC அட்டை (Aadhaar PVC card) என்ற பிளாஸ்டிக் கார்டு வடிவ அட்டையாகவும், eAadhaar மற்றும் mAadhaar போன்ற ஆன்லைன் வடிவ அட்டையாகவும் பயன்படுத்த கிடைக்கின்றன. இந்த படிவங்கள் அனைத்தும் இந்தியாவில் ஒரே மாதிரி சமமாக தான் செல்லுபடியாகிறது.

இருப்பினும், மக்களின் பாக்கெட்டிற்குள் மிகவும் கச்சிதமாக பொருந்தக்கூடிய ஆதார் அட்டையாக (Aadhaar card), PVC ஆதார் அட்டைகள் இப்போது மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகின்றன. ஏடிஎம் கார்டு (ATM card) அளவில் உள்ள பர்ஸ் (Purse), பாக்கெட் (Pocket), வாலெட் (Wallet) போன்றவற்றில் கனகச்சிதமாக பொருந்தும் PVC கார்டுகளுக்கு இப்போது இந்தியாவில் மவுசு அதிகரித்துள்ளது. இதை தவிர, இந்த பிவிசி ஆதார் அட்டைகளில் இன்னும் ஏராளமான சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளன.

4 விதமான ஆதார் அட்டை.. ஆனா இது தான் ரொம்ப சேஃப்.. UIDAI சொன்ன உண்மை..

4 விதமான ஆதார் அட்டை.. ஆனா ஆதார் பிவிசி கார்டு தான் ரொம்ப சேஃப் (Aadhaar PVC Card):

இந்திய ஆதார் ஆணையம், UIDAI இப்போது "ஆர்டர் ஆதார் PVC கார்டு" (Order PVC Aadhaar Card) என்ற சேவையை ஆதார் பயனர்களுக்கு வழங்கி வருகிறது. இது ஆதார் விவரங்களை PVC கார்டில் மிகவும் குறைந்த விலை கட்டணத்துடன் அச்சிட அனுமதிக்கிறது. சாதாரண பேப்பர் வடிவ ஆதார் கார்டுகளை விட, இந்த பிவிசி ஆதார் கார்டுக்கு பாதுகாப்பும் (Safety) அதிகம் என்பதனால், மக்கள் இதை ஆர்டர் செய்து வருகிறார்கள்.

புதிய பிவிசி ஆதார் கார்டை பெற பயனர்கள் ஒரு முறை கட்டணமாக வெறும் ரூ. 50 மட்டும் ஆன்லைனில் செலுத்தினால் போதும், ஸ்பீட் போஸ்ட் வழியாக பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு 15 வேலை நாட்களுக்குள் உங்கள் புதிய ஆதார் பவிசி கார்டு வீட்டிற்கே வந்து தரப்படும். ஆதார் PVC கார்டை ஆர்டர் செய்வதற்கான செலவு ஜிஎஸ்டி மற்றும் ஸ்பீட் போஸ்ட் கட்டணங்கள் உட்பட ரூ.50 மட்டுமே என்பதை மீண்டும் நினைவுபடுத்துகிறோம்.

வழக்கமான காகித வடிவ ஆதார் அட்டைகள் போல இந்த பிவிசி ஆதார் அட்டைகளையும் டம்மி என்று நினைத்துவிடாதீர்கள். இந்த ஆதார் PVC அட்டை பல பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது. இதில் பல அம்சங்களை UIDAI பேக் செய்துள்ளது. அது பற்றிய கூடுதல் விபரம் இதோ.

ஆதார் PVC அட்டையில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் என்னென்ன?
1. சேதப்படுத் முடியாத QR குறியீடு (Tamper proof QR Code)
2. ஹாலோகிராம் (Hologram)
3. மைக்ரோ டெக்ஸ்ட் (Micro text)

4. கோஸ்ட் இமேஜ் (Ghost image)
5. வெளியீட்டு தேதி & அச்சு தேதி (Issue Date & Print Date)
6. குய்லோச் பேட்டர்ன் (Guilloche Pattern)
7. பொறிக்கப்பட்ட ஆதார் லோகோ (Embossed Aadhaar Logo)
போன்ற பிரத்தியேகமான அம்சங்களுடன் பிவிசி ஆதார் அட்டைகள் இப்போது அதன் பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

ஆன்லைன் மூலம் PVC ஆதார் கார்டு ஆர்டர் செய்வது எப்படி?

ஆதார் ஆணையத்துடன் பதிவுசெய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி, இப்போது நீங்கள் ஆன்லைன் மூலம் ஆதார் PVC கார்டை ஆர்டர் செய்யலாம் (How to apply for PVC Aadhaar card online). இதை எப்படி வீட்டில் இருந்தபடி, ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யலாம் என்ற விபரங்களை இப்போது தெரிந்துகொள்ளலாம்.
1. https://uidai.gov.in அல்லது https://myaadhaar.uidai.gov.in போர்ட்டலை பார்வையிடவும்.
2. "ஆதார் பிவிசி கார்டு ஆர்டர்" சேவையைத் தேர்ந்தெடுக்கவும்.

3. உங்கள் 12 இலக்க ஆதார் எண் (UID) அல்லது 28 இலக்க பதிவு ஐடியை உள்ளிடவும்.
4. உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் (Aadhaar Registered Mobile number) பெறப்பட்ட OTP விபரங்களை உள்ளிடவும்.
5. Terms and Conditions ஏற்கவும்.
6. OTP சரிபார்ப்பை முடிக்க "Submit" என்பதைக் கிளிக் செய்யவும்.
7. ஆர்டரைச் செய்வதற்கு முன் அடுத்த திரையில் உங்கள் விவரங்களைச் சரிபார்க்கவும்.

8. "Make Payment" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
9. கிரெடிட் (Credit) /டெபிட் கார்டு (Debit card), நெட் பேங்கிங் (Net banking) மற்றும் UPI போன்ற விருப்பங்களில் இருந்து ஏதேனும் ஒன்றை கிளிக் செய்து கட்டணம் செலுத்தவும்.
10. வெற்றிகரமாக பணம் செலுத்திய பிறகு, டிஜிட்டல் கையொப்பத்துடன் கூடிய ரசீது உருவாக்கப்படும்.
அடுத்த 15 நாட்களுக்கும் உங்கள் புதிய பிவிசி ஆதார் கார்டு வீடு தேடி வரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Aadhaar Card Of 4 Types Buy PVC Aadhaar Card Is More Safe and Protected Says UIDAI India How To Apply
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X