ஆதார் அப்டேட் செய்ய இனி ரூ.100 கட்டணமா? எந்தெந்த தகவல் திருத்தத்திற்கு எவ்வளவு கட்டணம்? முழு விபரம் இதோ..
ஆதார் அட்டையில் (Aadhaar card) உள்ள தகவல்களை இலவசமாக மாற்ற இன்னும் 4 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இனி அடுத்தகட்டமாக ஆதார் அட்டையில் ஏதேனும் மாற்றங்களை (Aadhaar card update cost) பொதுமக்கள் மாற்ற வேண்டுமென்றால், ஒவ்வொரு மாற்றத்திற்கும் எவ்வளவு கட்டணம் (charges details for Aadhaar card update) செலுத்த வேண்டியத்திற்கும் என்ற தகவலை இப்போது ஆதார் ஆணையம் வெளியிட்டுள்ளது. வரும் ஜூன் 14, 2024 ஆம் தேதிக்கு பிறகு, ஆதார் அட்டையில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு திருத்தத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று UIDAI தெரிவித்துள்ளது.
ஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல பலமுறை இலவசமாக ஆதார் அட்டையில் உள்ள தகவலைகளை புதுப்பித்துக்கொள்ள இந்திய ஆதார் ஆணையமான UIDAI இலவச சேவையை வழங்கியிருந்தது. இந்த இலவச ஆதார் அப்டேட் (Free Aadhaar card update) சேவை வரும் ஜூன் 14ம் தேதி முதல் நிறைவுக்கு வருகிறது. இதற்கு பின், மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு திருத்தத்திற்கு ஆதார் ஆணையம் இனி கட்டணம் வசூலிக்கப்போகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அப்டேட் செய்ய இனி ரூ.100 வரை கட்டணமா? (Aadhaar Card Update Cost May Get Up To Rs 100):
இனி ஆதார் அட்டையில் பெயர் (Name), பிறந்த தேதி (DOB), பாலினம், முகவரி (Address), மொபைல் எண் (Mobiile number), புகைப்படம் (Photos) போன்ற எந்தவொரு ஆதார் தகவலை மாற்றம் செய்ய வேண்டுமென்றாலும், இனி அதற்கென்று தனித்தனி கட்டணங்களை பொதுமக்கள் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் ஆதார் தொடர்பான மாற்றங்களை மேற்கொள்ளும் பொழுது எந்தெந்த சேவைகளுக்கு இதற்கு பிறகும் இலவச சேவை கிடைக்குமென்று பார்க்கலாம்.
ஆதார் ஆணையத்தின் தகவல் படி, இனி புதிதாக ஆதார் அட்டைக்காக விண்ணப்பிக்கும் புதிய ஆதார் பயனர்களுக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. அதேபோல், குழந்தைகளுக்கான பால் ஆதார் அட்டை விபரங்களில் மாற்றங்களை மேற்கொள்ள கட்டணமும் எதுவும் வசூலிக்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக 5 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளின் அட்டை அப்டேட்களுக்கு இலவச சேவை தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆதார் அட்டையில் இனி நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு திருத்தங்களுக்கு இனி ஒவ்வொரு விதமான கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. உதாரணமாக, உங்கள் ஆதார் அட்டையில் உள்ள உங்கள் பெயர் விபரம், பிறந்த தேதி மற்றும் முகவரி போன்ற ஆதார் விபரங்களை மாற்றம் செய்ய இனிமேல் ரூ. 50 வரை கட்டாய கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சிறிய திருத்தமாக இருந்தாலும் இனி கட்டணம் கட்டாயம்.
ஆதார் அட்டையில் உள்ள எந்தெந்த தகவலை இனி பொதுமக்கள் அப்டேட் செய்துகொள்ளலாம் என்பது இங்கே..
- பெயர் (Name)
- பிறந்த தேதி (Date Of Birth)
- பாலினம் (Gender)
- முகவரி (Address)
- மொபைல் எண் (Mobile Number)
- புகைப்படம் (Photos)
- கை ரேகை தகவல் (Biometrics Finger Print)
- கண் கருவிழி (Eye Iris Scan) தகவல் போன்றவற்றை அப்டேட் செய்யலாம்.
இனி ஆதார் திருத்தங்களுக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை வசூல்:
என்னது சிறிய திருத்தத்திற்கு ரூ.50 கட்டணமா என்று சிலர் கேள்வி எழுப்பலாம். இது ஆதார் திருத்தத்திற்கான குறைந்த விலை கட்டணம் என்பதை மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள். ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிற்கும் உங்கள் பயோமெட்ரிக் தகவல்களை அப்டேட் செய்ய விரும்பினால், இனி ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆதாவது, உங்கள் கை ரேகை விபரம் அல்லது உங்கள் கண்ணின் கருவிழி விபரம் போன்ற விபரங்களை இனி நீங்கள் அப்டேட் செய்ய விரும்பினால், இனி நீங்கள் ரூ.100 கட்டாய கட்டணம் செலுத்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் இ-ஆதார் விபரங்களை, புதிய ஆதார் அட்டையாக வாங்க வேண்டுமென்றால் ரூ. 30 கட்டணம் செலுத்த வேண்டும் மக்களே.


Click it and Unblock the Notifications