Home
News

ரூ. 50,000 வரை உடனே கடன்.. Aadhaar மட்டும் போதும்.. செக்யூரிட்டி இல்லை.. உடனே Online-ல இப்படி பண்ணுங்க மக்களே!

ஆதார் அட்டை (Aadhaar card) இருக்கா? அப்போ இந்த விஷயங்களை நீங்கள் சரியாக பின்பற்றினால், எந்தவொரு செக்யூரிட்டியும் இல்லாமல், கூடுதல் டாக்குமெண்ட்கள் எதுவும் இல்லாமல், வெறும் ஒரு சில மணி நேரத்திற்குள் ரூ. 50,000 வரை லோன் வாங்க வாய்ப்பிருக்கிறது. ஆம் மக்களே, உங்களிடம் இருக்கும் ஆதார் ஆவணத்தை வைத்து, எளிமையாக ரூ. 50,000 வரை கடன் பெற ஒரு சிறப்பு திட்டத்தை (Aadhaar card loan amount up to Rs 50,000) இந்திய அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது. இதை எப்படி வாங்குவதென்று பார்க்கலாம் வாங்க.

இந்திய அரசாங்கம் மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகம் செய்து, பலவிதமான நன்மைகள் கிடைக்கும் படி செய்துள்ளது. அந்த வரிசையில், இந்திய அரசாங்கம் சமீபத்தில் அறிமுகம் செய்தவொரு சூப்பரான நலத்திட்டம் தான் பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா (PM Svanidhi Yojana) என்ற நலத்திட்டம். இந்த சிறப்பு நலத்திட்டம் மூலம் தான் இந்திய அரசாங்கம் தற்போது ஆதார் ஆவணத்தை மட்டும் வைத்து ரூ.50000 வரை கடன் (up tp Rs 50,000 loan) வழங்கி வருகிறது.

ரூ. 50,000 வரை உடனே கடன்.. Aadhaar மட்டும் போதும்.. செக்யூரிட்டி இல்லை

ரூ. 50,000 வரை உடனே கடன்.. Aadhaar மட்டும் போதும்.. செக்யூரிட்டி இல்லை:

பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா நலத்திட்டம் கீழ் சிறு மற்றும் குறு தொழில் செய்ய விரும்பும் பொதுமக்களுக்கு உதவும் விதமாக அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் மூலம் எப்படி இந்த 50,000 ரூபாய் கடனிற்காக விண்ணப்பிக்க வேண்டும் என்ற தகவலை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளப் போகிறோம் வாங்க. உங்களிடம் சரியான தகவலுடன் அப்டேட் செய்யப்பட்டிருக்கும் ஆதார் ஆவணத்தை (updated Aadhaar card) கையில் எடுக்கும் நேரம் வந்துவிட்டது.

பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா (PM Svanidhi Yojana) திட்டத்தின் மூலம் ரூ. 50,000 வரை கடன் பெற உங்களிடம் ஆதார் அட்டை (Aadhaar card) மட்டும் இருந்தால் போதும். ஆதார் ஆவணத்தை வைத்து, கீழ் வரும் நிபந்தனைகளை சரியாக பின்பற்றினால், எளிமையான கடன் பெறலாம். சிறு மற்றும் குறு தொழில் முனைவோர் எதிர்கொள்ளும் சிக்கல்களை சமாளிக்க ரூ. 50,000 வரை இந்த சிறப்பு திட்டத்தின் மூலம் கடன் வழங்கப்படுகிறது.

ஆதார் லோன் விபரம்.. முதல் கடன் தொகை எவ்வளவு? எப்போது ரூ. 50,000 கடன் கிடைக்கும்?

முதற்கட்டமாக, இந்த நலத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் நபருக்கு ரூ. 10,000 கடன் வழங்கப்படும். இந்த கடனை குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த நபர் திருப்பி செலுத்த வேண்டும். அப்படி சரியான நேரத்தில் இந்த திட்டத்தின் கீழ் பெற்ற தொகையை திரும்பி செலுத்தாவிட்டால், உங்களுக்கு கூடுதல் கடன் கிடைக்கும். அடுத்த தொகையாக ரூ.20,000 வரை அந்த நபரால் கடன் வாங்க முடியும்.

சரியான நேரத்தில் இந்த கடனையும் நீங்கள் திருப்பி செலுத்திவிட்டால், உங்களுக்கு அடுத்த நம்பிக்கை தொகையாக ரூ. 50,000 வரை எந்தவித செக்யூரிட்டியும் இல்லாமல் முழுமையாக ரூ. 50,000 கடனாக வழங்கப்படும். இது இதற்கு முன்பு நீங்கள் திரும்பி செலுத்திய கடனின் நம்பிக்கையின் பெயரில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கடன் தொகையை பெறுவதற்கு உங்களிடம் சரியான தகவலுடன் அப்டேட் செய்யப்பட்ட ஆதார் கார்டு மட்டும் இருந்தால் போதும்.

சரி, இப்போது இந்த நலத்திட்டத்தின் கீழ் எப்படி கடன் பெறுவது என்பதை பார்க்கலாம்:

- தொழில் முனைவோர் உங்கள் Aadhaar விபரங்களை ஏதேனும் ஒரு அரசு வங்கிக்கு செல்ல வேண்டும்.
- அங்கு, இந்த நலத்திட்டத்திற்கான விண்ணப்பத்தை கேட்டு வாங்கி, தகவல்களை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.
- https://pmsvanidhi.mohua.gov.in/LoginThirdLoanTerm என்ற பக்கத்திற்கு செல்லுங்கள்.
- கடன் பெறுவதற்கான விண்ணப்பத்தை சரியாக நிரப்புங்கள்.

- அதை சரியாக நிரப்பினால் மட்டுமே வங்கியில் இருந்து கடன் பெற முடியும்.
- உங்கள் Aadhaar தகவல் அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- ஆதார் தகவல்கள் அனைத்தும் பிழை இல்லாமல் இருப்பது அவசியம்.
- உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் (Aadhaar linked mobile number) உங்கள் வசம் இருப்பது முக்கியம்.

இந்த விஷயங்களை பின்பற்றி, வெறும் ஆதார் அட்டையை மட்டும் வைத்து, ரூ. 50,000 வரை கடன் பெற முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Aadhaar Card Loan Amount Of Rs 50000 Without Security and Other Documents How To Apply It In Online
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X