முடிவுதான் என்ன: காலையில் ஒன்னு சொல்றாங்க., மாலையில் ஒன்னு சொல்றாங்க- ஆதார் அறிவுறுத்தல் விவகாரம்!

|

ஆதார் கார்ட்டை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. அதன்படி ஆதார் அமைப்பு (UIDAI) மே 29 காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கையில், ஆதார் கார்ட் நகலை யாரிடமும் கொடுக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் நகலை தவறாக கையாளக் கூடும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. அதேபோல் பொது இடங்களில் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் எனவும் அப்படி அத்தியாவசிய தேவைக்கு ஆதார் அட்டையை பிரவுசிங் சென்டர் உட்பட பொது இடங்களில் பதிவிறக்கம் செய்யும் பட்சத்தில் உடனே அதை டெலிட் செய்யும்படியும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல் மிக முக்கியமாக ஆதார் கார்டின் நான்கு இலக்கு எண்களை மட்டும் காண்பிக்கும் மாஸ்க் ஆதார் கார்ட்டை பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

பல்வேறு பயன்பாட்டுக்கு முக்கியமாக இருக்கும்

பல்வேறு பயன்பாட்டுக்கு முக்கியமாக இருக்கும்

இந்த அறிக்கை வெளியானதையடுத்து, ஆதார் கார்ட் பல்வேறு பயன்பாட்டுக்கு முக்கியமாக இருக்கும் என கூறிவிட்டு தற்போது இது ஆபத்து ஏற்படுத்தும் என கூறுவது முறையா என பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கினர். இதையடுத்து ஆதார் அமைப்பு நேற்று மாலையே மற்றொரு அறிக்கையை வெளியிட்டது. அதில் காலை வெளியான அறிக்கையில் உள்ள தகவல்கள் திரும்பப்பெறப்படுவதாக குறிப்பிட்டிருந்தது. மத்திய அரசு அறிவிப்பை மக்கள் தவறாக புரிந்து கொள்வதற்கான சாத்தியம் இருப்பதால் முந்தைய அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதானமாக இருக்கும் ஆதார் கார்ட்

பிரதானமாக இருக்கும் ஆதார் கார்ட்

வங்கிகள் கணக்குகளில் தொடங்கி சிம் கார்டு வாங்குவதன் மூலம் பல்வேறு தேவைகளுக்கும் ஆதார் கார்டு பிரதானமாக இருந்து வருகிறது. சமீபத்தில் தெரிவிக்கப்பட்ட ஆதார் பான் கார்டு இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது. ஆதார் கார்டு அத்தியாவசியமான ஆவணங்களாக மாற்றப்பட்டு வருகிறது. வங்கி பரிவர்த்தனைகள் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் என அனைத்துக்கும் ஆதார் கார்டு முக்கியமாக இருக்கிறது. ஆதார் கார்டில் அனைத்து விவரங்களும் சரியாக இருக்க வேண்டும் என்பது அவசியமாகும்.

ஆதார் கார்ட் விண்ணப்பிக்கும் எளிய முறை

ஆதார் கார்ட் விண்ணப்பிக்கும் எளிய முறை

புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆதார் கார்ட் விண்ணப்பிக்கும் எளிய முறையை யுஐடிஏஐ அறிவித்துள்ளது. சாதாரன ஆதார கார்ட்களைவிட ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் கார்ட்கள் பெறுவது என்பது சில மாற்றம் இருக்கிறது. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பயோமெட்ரிக் பதிவு தேவையில்லை. அதற்கு பதிலாக பெற்றோர் புள்ளி விவர தகவல்கள் மற்றும் புகைப்படத்தின் தரவை வைத்து ஆதார் அட்டை அங்கீகாரம் வழங்கப்படும்.

பயோமெட்ரிக் தரவு

பயோமெட்ரிக் தரவு

குழந்தைகளுக்கு ஆதார் அட்டை பெற்றவுடன் அவர்கள் ஐந்து வயது பூர்த்தி அடையும் போது பெயரின் கீழ் இருக்கும் விவரங்களில் பயோமெட்ரிக் தரவு இன்றி காட்டப்படும். அதை அவர்கள் பூர்த்தி செய்ய வேண்டும். ஐந்து வயது பூர்த்தி செய்தவுடன் குழந்தைகளுக்கான பயோமெட்ரிக் தரவு பூர்த்தி செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு ஆதார் அட்டை எடுக்க தேவையான ஆவணங்கள் குறித்து பார்க்கையில்., குழந்தை பிறப்பு சான்றிதழ், பெற்றோர்கள் ஒருவர் ஆதார் அட்டை மற்றும் இரண்டு ஆவணங்களின் அசல் தேவைப்படும். குழந்தைகளுக்கான ஆதார் அட்டை வாங்குவதற்கு கட்டாயமாக ஆதார் இசேவை மையத்தை அணுக வேண்டும். ஆனால் முன்பாக ஆன்லைனில் அப்பாயின்ட்மென்ட் பெறலாம்.

யுஐடிஏஐ வலைதளத்தை அணுக வேண்டும்

யுஐடிஏஐ வலைதளத்தை அணுக வேண்டும்

யுஐடிஏஐ வலைதளத்தை அணுக வேண்டும். தேவையான அனைத்து ஆவணங்களையும் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். கெட் ஆதார் என்ற தேர்வில் அப்பாயின்மென்ட் என்பதை புக் செய்ய வேண்டும். இருக்கும் இடத்தை கிளிக் செய்து ப்ரொசீட் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும், பின் நியூ ஆதார் (புது ஆதார்) என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்து மொபைல் எண் பதிவு செய்து ஓடிபி உருவாக்கம் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் தனிநபர் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின் சந்திப்புக்கான நேரம் இடத்தை தேர்வு செய்து கொள்ளலாம். அனைத்தையும் சரி பார்த்து சப்மிட் என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும். அதில் குறிப்பிட்ட நாள் மற்றும் தேதிக்கு அந்த இடத்துக்கு சரியாக செல்ல வேண்டும். அங்கு குழந்தைக்கான ஆதார் அட்டைப்பதிவை முடித்துக் கொள்ளலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Aadhaar card issue: UIDAI withdrawn advice about Aadhaar card

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X