Home
News

புது Aadhaar Card அறிவிப்பு.. ஆதார் அட்டையை உடனே கையில் எடுங்க.. இதை செய்யுங்க.. இல்லாட்டி சிக்கல் உறுதி..

ஆதார் அட்டை (Aadhaar card) மிகவும் முக்கியமான அடையாள ஆவணமாக இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. அரசின் நலத்திட்டங்களின் நன்மையை பெறுவது முதல், குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, வங்கி தொடர்பான சேவை, லோன் எடுப்பது, புது சிம் கார்டு வாங்குவது, KYC அப்டேட், இறப்பு சான்றிதழ் பெறுவது என்று பல விஷயங்களுக்கு இப்போது ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்ல போனால், எந்தவொரு சேவையை நீங்கள் அணுக வேண்டுமென்றாலும் அதற்கு ஆதார் தேவைப்படுகிறது.

இப்படி பல விஷயங்களுக்காக, பல இடங்களில் பயன்படுத்தப்படும் ஆதார் அட்டையில் உள்ள தகவல்கள் மிகவும் சரியாக இருப்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல், உங்கள் கையில் இருக்கும் ஆதார் தகவல்கள் அப்டேட் (Aadhaar card update) செய்யப்பட்டிருப்பதும் மிகவும் முக்கியமானது. குறிப்பாக, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை வாங்கிய குடிமக்கள் அனைவரும், அவர்களுடைய ஆதார் அட்டை விபரங்களை ஒருமுறை அப்டேட் செய்துகொள்ள வேண்டுமென்று ஆதார் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

புது Aadhaar Card அறிவிப்பு.. ஆதார் அட்டையை உடனே கையில் எடுங்க..

ஆதார் அட்டையை உடனே கையில் எடுங்க.. புது Aadhaar அறிவிப்பு:

10 வருடங்கள் பழமையான ஆதார் பயனர்கள் (10 years old Aadhaar users), அவர்களின் ஆதார் அட்டை தகவலை அப்டேட் செய்து புதுப்பித்துக்கொள்ளும்படி UIDAI அறிவுறுத்தியுள்ளது. இதற்காக டிசம்பர் 14, 2024 ஆம் தேதி வரை இலவசமாக ஆதார் தகவலை அப்டேட் செய்துகொள்ளும் ஒரு தனி சிறப்பு வாய்ப்பையும் ஆதார் ஆணையம் தற்போது (last date to update Aadhaar details for free) வழங்கியுள்ளது.

டிசம்பர் 14 ஆம் தேதிக்கு இன்னும் குறுகிய காலம் மட்டுமே மிஞ்சி இருக்கும் காரணத்தினால், மக்கள் அவர்களின் சொந்த மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் தகவலை அப்டேட் (Aadhaar details update) செய்துகொள்ள அறிவுரைக்கப்பட்டுள்ளனர். 10 வருட பழைய ஆதார் அட்டை வைத்திருக்கும் மக்கள் மட்டுமின்றி, இந்த வாய்ப்பை புதிய ஆதார் அட்டை பயனர்களும் (New Aadhaar card holders) பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆதார் அட்டையை இலவசமாக அப்டேட் செய்துகொள்ள இறுதி நாள் இதான்:

ஆதார் அட்டையில் உள்ள பிழைகள் மற்றும் திருத்தங்களை (Aadhaar card details corrections) பொதுமக்கள் இப்போது இந்த இலவச வாய்ப்பை பயன்படுத்தி, ஆதார் அட்டை தகவலை செலவின்றி புதுப்பித்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆதார் அட்டையை இலவசமாக அப்டேட் செய்துகொள்ள (Aadhaar free update) டிசம்பர் 14, 2024 ஆம் தேதி தான் இறுதி காலக்கெடு என்பதனால், மக்கள் உடனே அவர்களின் ஆதார் அட்டையை கையில் எடுத்து அப்டேட் (Aadhaar update) செய்ய முன்வரவேண்டும் என்று ஆதார் ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இறுதி நேரத்தில், ஆதார் மையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க மக்கள் இப்போதிற்கும் நேரத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் படி ஆதார் ஆணையம் வேண்டுகோள்விடுத்துள்ளது. அதேபோல், இந்த இறுதி காலக்கெடுவிற்கு (Aadhaar last date to free update) பிறகு, ஆதார் அட்டையில் ஒவ்வொரு விதமான மாற்றத்திற்கும், திருத்தங்களுக்கு ஒவ்வொரு விதமான கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை திருத்தங்களுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும்?

ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிற்கும் பயோமெட்ரிக் தகவல்களை அப்டேட் செய்ய மக்கள் இனி ரூ. 100 கட்டணமாக செலுத்த வேண்டியதிருக்கும் என்றும், மக்கள்தொகை தரவுகளுக்கு ரூ. 50 என்ற கட்டணத்தையும், ஆதார் ஆன்லைன் டவுன்லோட் தரவிற்கு ரூ. 30 கட்டணமாகவும், ஆதார் அட்டை முகவரி அப்டேட்டிற்கு ரூ. 25 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனால், டிசம்பர் 14 ஆம் தேதிக்கு முன்பு இலவசமாக தகவலை அப்டேட் செய்துகொண்டால் வீண் செலவை குறைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், அடுத்து வரும் காலத்தில் அப்டேட் செய்யப்படாத ஆதார் அட்டை தகவல்கள் செல்லுபடியாகாமல் போனால், மக்கள் சில சேவைகளை உடனுக்குடன் பெறுவதில் சிக்கல் எழக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆகையால், இந்த இலவச வாய்ப்பை மக்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ளும்படி அறிவுரைக்கப்பட்டுள்ளனர்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Aadhaar Card Holders Take Your Aadhaar and Update Online For Free Only 2 Weeks More To Last Date December 14 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X